இடுகைகள்

கக்கூஸ் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மக்களின் பிரச்னை பற்றி பேசி படம் எடுத்தால் வழக்கு போட்டு மிரட்டுகிறார்கள்! - திவ்யபாரதி, ஆவணப்பட இயக்குநர்

படம்
              படைப்புகளை எதிர்த்து வழக்குகளை போடுகிறார்கள் ! கக்கூஸ் படம் எடுத்த திவ்யபாரதியை பற்றி படித்திரூப்பீர்கள் . அவர் இப்போது கீட்டோ நிறுவனத்தின் உதவியுடன் நிதி திரட்டி மாற்று திறானிகளை மையமாக வைத்து சாட்லா என்ற ஆவணப்படத்தை எடுத்து வருகிறார் . வரவர ராவ் , சுதா பரத்வாஜ் , ஸ்டேன்சாமி ஆகியோர மக்கள் பிரச்னைக்காக போராடினாலும் அவர்களை அரசு எதிரிகளாகவே கருதுகிறது . பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்தி விடுகிறது என ஆவேசப்படுகிறார் . க க்கூஸ் என்ற தனது ஆவணப்படுத்தில் மலமள்ளும் தொழிலாளர்களைப் பற்றிய விமர்சனத்தைப் பதிவு செய்தார் . அடுத்து ஒருத்தரும் வரலே என்ற படத்தில் ஓக்கி புயலில் அரசு எப்படி செயல்பட்டது , சாகர் மாலா திட்டத்தால் ஏற்படும் அபாயம் பற்றியும் விளக்கியிருந்தார் . 2017 இல் இவரின் க க்கூஸ் படம் வெளியானபோது , அரசு இவர் மீது சைபர் டெரரிசம் என்று வழக்குகளை பதிவு செய்த்து . அது மோசமான காலகட்டமாக இருந்தது . வெறும் டீசர் வெளியிட்டாலே வழக்கு போட்டுவிடுகிறார்கள் என்று கூறுகிறார் . அம்பேத்கர் , பெரியார் , கார்ல் மார்க்ஸ் ஆகியோரின் கருத்தியல்களின் மீது நம்பிக்கை கொண்ட