இடுகைகள்

கரிம எரிபொருட்கள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

காற்று மாசைத் தீர்க்க ஹைட்ரஜன் உதவுமா?

படம்
  காற்று மாசைத் தீர்க்குமா ஹைட்ரஜன்? டில்லியில் ஏற்பட்டுள்ள காற்று மாசைக் குறைக்க, ஹைட்ரஜன் வாகனங்களை பயன்படுத்தலாம் என்று உச்சநீதிமன்றம், அரசுக்கு ஆலோசனை கூறியுள்ளது.  இன்று இந்தியாவில் பயன்படுத்தப்படும் மின்சாரத்திற்கும், ஹைட்ரஜன் உருவாக்கத்திற்கும், கரிம எரிபொருட்களே ஆதாரமாக உள்ளன. இதில் ஹைட்ரஜன் உருவாக்கத்திற்கு இயற்கை எரிவாயு பயன்படுகிறது. மின்சார உருவாக்கத்திற்கு நிலக்கரி, நீர், எரிவாயு ஆகிய இயற்கை வள ஆதாரங்கள் உதவுகின்றன. ஹைட்ரஜன் வாகனங்கள் சூழலுக்கு ஏற்படுத்தும் மாசு, கரிம எரிபொருட்களை விட குறைவு. இதனால் ஹைட்ரஜனை எரிபொருளாகக் கொண்ட பேருந்துகளை இயக்கும் யோசனையை முன்னர் உச்சநீதிமன்றம் கூறியிருந்தது. உலக நாடுகள் முழுக்க ஹைட்ரஜன் வாகனங்கள் மற்றும் மின் வாகனங்களுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. ஜப்பானும், தென்கொரியாவும் ஹைட்ரஜன் வாகனங்களை ஆதரித்து, உருவாக்கி வருகின்றன. அமெரிக்காவும், சீனாவும் மின் வாகனங்களை உயர்த்திப்பிடிக்கின்றன. இந்தியாவிலும் மின் வாகனங்களாக மோட்டார் சைக்கிள் முதல் பேருந்துகள் வரை இயக்கப்படவும் தொடங்கிவிட்டன.  ஹைட்ரஜன் வாகனங்களுக்கும் (HV), மின் வாகனங்

உருகும் ஆர்க்டிக் வெளியாகும் நச்சு!

படம்
ஆர்க்டிக் பகுதி, வெப்பமயமாதலால் உருகிவருவதை டிவியிலும் நாளிதழ்களிலும் பார்த்திருப்பீர்கள். இதன் விளைவாக, அணுக்கழிவுகள், பிளாஸ்டிக் உள்ளிட்டவற்றிலிருந்து நச்சுகள் வெளியாகி நீர்ப்பரப்பில் கலக்கத் தொடங்கியுள்ளன. 2100 ஆம் ஆண்டுக்குள் கரிம எரிபொருட்கள் விளைவாக ஆர்க்டிக் பகுதி பனிக்கட்டிகள் முழுவதும் கரையும் வாய்ப்பு உள்ளது. இதன் விளைவாக, அனைத்து இயற்கை நிகழ்ச்சிகளும் மாறி நிகழும் வாய்ப்புள்ளது. மேலும் பசுமை இல்ல வாயுக்களின் அளவும் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்துவது நம் கைகளில்தான் உள்ளது. உலகளாவிய ஆராய்ச்சிக்குழுக்கள் பனி உருகி வரும் வேகத்தை ஆராய்ந்து வருகின்றனர். விரைவில் வெளியாகும் கார்பன் அளவை கணித்து அதனைக் குறைக்க முடியும் என்கிறார் ஆராய்ச்சியாளர் வுட்ஸ் ஹோல் ஆராய்ச்சி மையத்தின் ஆராய்ச்சியாளர் சூ நடாலி கூறியுள்ளார். நன்றி: ஃப்யூச்சரிசம்

கார்பன் வரி கட்டுவது மக்களின் கடமை

படம்
கார்பன் வரி கட்டவேண்டிய நேரம் இதுவே. பிரான்சில் கார்பன் வரி காரணமாக நாடு திரண்டு போராடிய போராட்டங்களைப் பார்த்திருப்போம். உண்மையில் அது அவசியமா இல்லையா என்பது அவரவருக்கு கருத்து மாறுபடலாம். ஆனால் அந்த வரி தவிர்க்க முடியாது என்கிறார் கில்பெர்ட் மெல்காஃப். பசுமை பொருளாதாரம் என்பது பேச்சளவில் நன்றாக இருந்தாலும் நடைமுறைப்படுத்துவது அவ்வளவு எளிதல்ல என உறுதிப்பட பேசுகிறார் பொருளாதார வல்லுநர் கில்பர்ட் மெல்காஃப். பேயிங் ஃபார் பொல்யூசன்: வொய் எ கார்பன் டாக்ஸ் இஸ் குட் ஃபார் அமெரிக்கா என்ற நூலை அண்மையில் எழுதியுள்ளார். நீங்கள் இப்போது கரிம எரிபொருட்களின் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த கார்பன் வரியை விதிக்காவிட்டால் பின்னாளில் பெரும் விலையை தரவேண்டி வரும் என எச்சரிக்கிறார் இவர். கார்பன் வரி கட்டுவதை எப்படி உங்கள் நூலில் நியாயப்படுத்துகிறீர்கள்? கரிம எரிபொருட்களை எரிப்பதால் வரும் கார்பன் டை ஆக்சைடு பசுமை இல்ல வாயுக்களை அதிகரிக்கும். மேலும் பருவநிலை மாறுபாடு ஏற்படும்போது, பசுமை இல்ல வாயுக்களின் பாதிப்பு மேலும் அதிகரிக்கும். மக்கள் தாங்கள் பயன்படுத்தும் வசதிகளுக்கேற்ப ஏற்படும் ப