இடுகைகள்

. இந்தியா லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இந்தியாவின் அரசியல் மற்றும் கொள்கைகளை விரிவாக பேசும் நூல்

படம்
      புத்தகம் புதுசு! எ நியூ ஐடியாஸ் ஆப் இந்தியா ஹர்ஸ் மதுசுதன் ராஜீவ் மந்திரி வெஸ்லேண்ட் ப.384 ரூ.799 இந்தியாவின் அரசியல் மற்றும் கொள்கைகளை விரிவாக பேசும் நூல் இது. இத்துறையில் உள்ள ஆசிரியரின் அனுபவம் நூலின் பக்கங்களை வாசிக்க வைக்கிறது. ஹவ் டு ரைஸ் எ டெக் ஜீனீயஸ் சானெய்லா சயீத் ஹாசெட் ப. 256 ரூ. 599 நாம் வீட்டில் பயன்படுத்தும் பொருட்களை வைத்துக்கொண்டு கணினி தொடர்பான பல்வேறு தியரிகளை எப்படி கற்றுக்கொள்ளமுடியும் என பலரும் நினைப்பார்கள். ஆனால் அது சாத்தியம்தான் என்று சொல்லுகிறது இந்த புத்தகம். தி இன்கிரடிபிள் ஹிஸ்டரி ஆப் தி இந்தியன் ஓசன் சஞ்சீவ் சன்யால் ப.256 ரூ. 250 இந்தியப் பெருங்கடல் பற்றிய நிலப்பரப்புரீதியான வரலாற்றை பேசுகிறது இந்த நூல். நிறைய நுட்பமான தகவல்களை நூல் முழுக்க தூவியிருக்கிறார்கள். படித்து பரவசமடையுங்கள். குயின் ஆப் எர்த் தேவிகா ரங்காச்சாரி ப. 200 ரூ. 299 ஒன்பதாவது நூற்றாண்டில் ஒடிஷாவில் நடைபெறும் கதை. இதில் நாயகி பல்வேறு அரசியல் சதிகள், துரோகங்களை சந்தித்து எப்படி வெற்றி பெறுகிறாள் என்பதை சொல்லியிருக்கிறார்கள். TNIE

அரசியல் கைதிகளை விடுவித்து வருகிறோம் - கிரிஷ் சந்திரா முர்மு - ஜம்மு காஷ்மீர் ஆளுநர்

படம்
கிரிஷ் சந்திரா முர்மு, ஜம்மு காஷ்மீர் ஆளுநர் காஷ்மீர் இளைஞர்களை ஐடி ஆட்கள் மூலம் மூளைச்சலவை செய்யும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன என்று கூறப்படுகிறதே? இந்த மாநிலத்தில் வளர்ச்சிப்பணிகள் இல்லாததால் நீங்கள் கூறியது போன்ற முயற்சிகள் நடைபெற்று வந்தன. இப்போது பாதுகாப்பு படையினரும் அரசும் பல்லாண்டுகளாக நடந்து வந்த முயற்சியைத் தடுக்க முயன்று வருகிறோம். சிறப்பு அந்தஸ்து ரத்தாகி ஒராண்டு ஆகப்போகிறது. ஜம்மு காஷ்மீரில் இப்போது அரசியல் நிலைமை எப்படியிருக்கிறது? அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட வாய்ப்புள்ளதா? முக்கியமாக மெஹ்பூபா முக்தி.... தற்போது இங்கே குடியரசுத்தலைவர் ஆட்சி நடைபெற்றுவருகிறது. அரசியல் கட்சிகள் தங்களது செயல்பாடுகளை தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள். பிப்ரவரி, மார்ச் மாதங்களில் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்து இருந்தது. ஆனால் அதற்குள் பெருந்தொற்று பாதிப்பு ஏற்பட்டுவிட்டது. இதனால் தேர்தல் பணிகள் நின்றுவிட்டன. வேறெந்த காரணங்களும் தேர்தலை நிறுத்தும்படி இல்லை. பெரும்பாலான அரசியல் கைதிகளை நாங்கள் விடுவித்துவிட்டோம். இனியும் அரசியல்வாதிகளை கைது செய்துவைக்கும் திட்ட

அளவில்லாத கடன்களை வாங்கி மாநில உரிமைகளை விட்டுக்கொடுக்கும் அரசுகள்! - கடன்வரம்பும் உரிமைகளும்

படம்
கடன் பற்றாக்குறை தள்ளாடும் மாநிலங்கள் ஆங்கிலத்தில்: ஆனந் த் அதிகாரி, தீபக் மோண்டல் நன்றி: பிஸினஸ் டுடே பெருந்தொற்று காரணமாக மத்திய, மாநில அரசுகள் செலவழிக்க பணமின்றி தடுமாறி வருகின்றன. மாநில அரசுகளுக்கு உள்ள தடை கடன் வரம்பு எல்லையைத் தாண்டி கடன் வாங்க முடியவில்லை என்பதுதான். தற்போது மத்திய அரசு மாநில அரசுகள் கடன் வாங்கும் வரம்பு எல்லையை 3 முதல் 5 சதவீதமாக உயர்த்தியுள்ளன. 2008ஆம் ஆண்டு மத்திய அரசின் பற்றாக்குறை 2.5 சதவீதமாக இருந்தது. மோசமான பல்வேறு நிதிக்கொள்கைகள் காரணமாக தற்போது, 4 சதவீதம் எனும் அளவிற்கு பற்றாக்குறை உயர்ந்துள்ளது. மாநில அரசுகள் கோவிட் -19 பாதிப்பைச் சமாளிக்க தற்போது 4.28 லட்சம் கோடி ரூபாயை கடன் பெறமுடியும். கடன் பெற்று அதனை சாமர்த்தியமான முறையில் செலவு செய்வது முக்கியம். இல்லையெனில் எந்த பயனும் கிடைக்காது. அடிப்படையில் மாநில அரசுகள் 3.5 சதவீதம் மட்டுமே கடனைப் பெறமுடியும். அதாவது, 7.5 லட்சம் கோடி ரூபாய் மட்டுமே வெளியில் கடன்களைத் திரட்ட முடியும். இதனை அதிக நிபந்தனைகள் இன்றி பெற்றாலும், குறிப்பிட்ட வரம்புக்கு மீறி கடன்களை பெற நினைதால், பல்வேறு விதிகளை பின்பற்றிய

இனி ஒன்றையும் மறைக்க முடியாது - பரவும் அரசின் கண்காணிப்பு பயங்கரவாதம்

படம்
கோவிட் -19 தொற்று மக்களுக்கு சிக்கலை ஏற்படுத்துவதாக அமைந்து பொருளாதாரத்தை உடைத்து நொறுக்கியுள்ளது. ஆனால் பல்வேறு நாட்டு அரசுகளுக்கு இதைப்போன்ற கண்காணிப்புகளை பலப்படுத்தும் சந்தர்ப்பம் வேறு எப்போதும் கிடைத்துவிடாது. எனவே பல்வேறு நாட்டு அரசுகளும் கண்காணிப்பு சார்ந்த செயலிகளை வேகமாக அமல்படுத்தி மக்களை கம்பி வேலிக்குள் அடைத்து வருகின்றன. ஃபேஸ்புக் நிறுவனர் இணையக் கட்டுப்பாடுகளை கொண்டுள்ள சீனாவில் தன் தொழிலை கொண்டு செல்லமுடியவில்லை என மனம் குமுறியுள்ளார். உண்மையில் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் ஆகிய நிறுவனங்களுக்கு இணையான மென்பொருட்களை சீனர்கள் உருவாக்கி பயன்படுத்தி வருகின்றனர். சீனாவில் நிலவிவரும் நிலவரம் சரியா தவறா என்பதல்ல. மேற்கத்திய ஜனநாயக முறை என்பதை மார்க் பேசும் விதத்தில் புரிந்துகொள்ள வேண்டுமெனில், வணிகத்தை அமெரிக்கர்கள், இங்கிலாந்துக்காரர்கள் செய்யவேண்டும். அதற்கு பயனாளர்களாக ஆசிய கண்டம் இருக்கவேண்டும் என்பதைத்தான் அவரது பேச்சு மறைமுகமாக குறிப்பிடுகிறது. இனிவரும் பத்தாண்டுகளுக்குள் நாம் வைத்திருக்கும் ஆண்ட்ராய்டு போன், அதில் செயல்படும் பல்வேறு செயலிகள் மூலம் நம் தினசரி

காடுகளை அழித்தால் இனி வரும் காலத்தில் நுண்ணுயிரிகளின் தாக்குதல் கூடும்!

படம்
மரங்களை அழித்தால் நோய் பரவும் ! சோனியா ஷா , எழுத்தாளர் . ஆங்கிலத்தில் : சோபிதா தர் நீங்கள் 2016 ஆம் ஆண்டு எழுதிய பான்டெமிக் என்ற நூலில் கொரோனா தாக்குதல் நடைபெற வாய்ப்புள்ளது என்று முன்னரே கணித்து எழுதியுள்ளீர்கள் . எப்படி ? 2010 ஆம் ஆண்டு ஹைதியில் காலரா பாதிப்பு ஏற்பட்டது . பொதுவாக நாம் காலராவை ஏழைகளுக்கு வரும் நோய் என்று நினைத்துக்கொண்டிருக்கிறோம் . ஆனால் காலரா பாதிப்பு நியூயார்க் , லண்டன் , பாரிஸ் ஆகிய பகுதிகளை பாதித்தது . இதனை நீங்கள் எப்படி புரிந்துகொள்வீர்கள் . நான் சீனாவில் இன்று நோய் பாதித்துள்ள பகுதிகளை முன்னரே சென்ற பார்வையிட்டுள்ளேன் . த வைரஸ் தாக்குதல்கள் பலமுறை ஒருவரைத் தாக்கும் என்பதை நோய்களின் வரலாறு பற்றி படித்தாலே அறிய முடியும் . நீங்கள் கடந்த ஐம்பது ஆண்டுகளில் 300 வைரஸ் கிருமிகள் உருவாகியுள்ளதாக கூறுகிறீர்களே ? அது எப்படி ? நான் கூறியது உண்மைதான் . ஏறத்தாழ உலகில் பரவிய நோய்களில் 60 சதவீதம் விலங்குகள் மூலம் பரவியதுதான் . மிருகங்கள் இன்று வெப்பமயமாதல் மூலம் மனிதர்களின் வாழிடங்களுக்கு நெருக்கமாக வாழ்ந்த