அசாமைச் சேர்ந்த ஒரினச்சேர்க்கையாளருக்கு கிடைத்த தேசிய விருது! - பெஞ்சமின் டெய்மேரி
அசாமின் பாக்சா மாவட்டத்தைச் சேர்ந்தவர் பெஞ்சமின் டெய்மேரி. இவர் நடித்த ஜோனகி என்ற படம் தேசிய விருதுக்கான ஜூரி பிரிவில் நடிப்புக்கான விருது பெற்றுள்ளது. இச்செய்தியை டெய்மேரிக்கு போன் செய்து, படத்தின் இயக்குநர் பிரகாஷ் தேகா சொல்லும்போது, டெய்மேரியால் நம்ப முடியவில்லை. தூங்கிக் கொண்டிருந்தவர். அந்த ஆச்சரியத்தை நம்ப முடியாமல் இணையத்தை சோதித்து அதனை உறுதி செய்துகொண்டார். மாற்றுத் திறனாளிகளுக்கு தேசிய விருது வழங்கப்படுவது 2001ஆம் ஆண்டு முதலே தொடங்கிவிட்டது. ஆனால் டெய்மேரிக்கு நடிப்புக்காக வழங்கப்பட்டதுதான் இதில் சிறப்பானது. அபூர்வா அஸ்ரானி என்பவருக்கு ஸ்னிப் என்ற படத்திற்காக தேசிய விருது வழங்கப்பட்டது. 2012இல் ஓனிர் இயக்கிய ஐ எம் என்ற படத்திற்கு சிறந்த படத்திற்காக விருது வழங்கப்பட்டது. இந்தப்படம் ஒரினச்சேர்க்கையாளர்களின் உரிமைகளைப் பற்றிப் பேசியது. இப்படி விருதுகள் வழங்கப்பட்டாலும் அதிகளவில் இவை வழங்கப்படவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். இவர் நடித்த அசாமிய படம் இன்னும் வணிகரீதியில் திரையரங்குகளைத் தொடவில்லை. ஆனால் இவர் மும்பையில் தங்...