இடுகைகள்

ஒலிப்பெருக்கி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஒலிப்பெருக்கி வழியாக மாணவர்களுக்கு பாடம் சொல்லிக்கொடுத்த அர்ப்பணிப்பான குஜராத் கிராமம்!

படம்
                  ஒலிப்பெருக்கி வழியே கல்வி ! ஷைலேஷ் ராவல் ஆசிரியர் , குஜராத் இந்தியாவிலுள்ள பல்வேறு மாநிலங்களில் கொரோனா காரணமாக மாணவர்களுக்கு கல்வி தடைபட்டுள்ளது . இந்த நேரத்திலும் பல்வேறு ஆசிரியர்கள் புதுமையான முறையில் மாணவர்களுக்கு கல்வி கற்றுத்தர தொடங்கியுள்ளனர் . குஜராத் மாநிலத்தின் அகமதாபாத் நகரம் . இங்குள்ள பானஸ்கந்தா மாவட்டத்தில் உள்ள ஊர் பார்பட்டா . இங்கு காலை எட்டு மணி என்றால் ஒலிபெருக்கிகள் முழங்கத் தொடங்கிவிடும் . இதுதான் அங்குள்ள பள்ளி செல்லும் மாணவர்களுக்கான பாடவேளை தொடங்கிவிட்டதற்கான அறிகுறி . ஷைலேஷ் ராவல் இப்படித்தான் ஒலிபெருக்கி வழியாக மாணவர்களுக்கு பாடம் சொல்லித் தருகிறார் . பல்வேறு மாநில மாணவர்களும் இணையம் வழியாக கற்கத் தொடங்கியபோது , ஷைலேஷ் ஒலிப்பெருக்கி பக்கம் நகர்ந்துள்ளார் . வறுமைக்கோட்டிற்கு கீழுள்ள மாணவர்கள் பலரின் வீடுகளில் ஸ்மார்ட்போன் , டேப்லெட் , மடிக்கணினி , ஏன் டிவி கூட கிடையாது . அண்மையில் ஸ்மைல் பௌண்டேஷன் 22 மாநிலங்களில் 42,831 மாணவர்களிடம் செய்த ஆய்வில் 56 சதவீத மாணவர்களிடம் ஸ்மார்ட்போன் இல்லை என்ற உண்மை தெரியவந்துள