இடுகைகள்

கட்டுரை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தமிழ் எழுத்துருக்கள் பிரச்னை!

படம்
  அன்பிற்கினிய வாசகர்களுக்கு, வணக்கம்.  தளத்தில் பதிவேற்றிய சில கட்டுரைகளில் தமிழ் எழுத்துகள் சரிவர வரவில்லை. எழுத்துகள் அந்தரத்தில் பறந்துகொண்டிருந்தன. இதற்கு காரணம், நான் பயன்படுத்தும் புதிய இணைய உலாவியி்ல் தமிழ் எழுத்துரு பிரச்னை. எங்கு எதில் பிரச்னை என கண்டறியவே நேரம் நிறைய செலவானது. எனவே, பிழை பொறுக்கவும். திரு. சீனிவாசன் (கணியம் நிறுவனர்) அவர்களின் தொழில்நுட்ப உதவியைப் பெற்று பிரச்னையை சரிசெய்ய முயல்கிறேன். கணினி அதிக நினைவக சேமிப்பு கொண்டதல்ல என்பதால், செயல்களை வரையறுக்கப்பட்ட வசதிகளைக் கொண்டே செய்யமுடிகிறது.  குறுஞ்செய்தி அனுப்பி உதவி கேட்கும்போதெல்லாம், உடனே தனது பணிச்சுமை கடந்து உதவியை வழங்கும் திரு.சீனிவாசன் அவர்களுக்கு இப்பதிவு வழியாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மிக்க நன்றி சார். 

ஷி ச்சின்பிங் உரைகள், கட்டுரைகள் மூலமாக நடக்கும் பிரசாரம்!

படம்
 ஷி ச்சின் பிங்கின் உரைகள் பாடமாக.... ஷி ச்சின் பிங் ஆற்றிய உரைகள், எழுதிய கட்டுரைகள், உலக நாடுகளிலுள்ள 33 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. உள்நாட்டில் மட்டுமல்லாது வெளிநாடுகளில் உள்ளவர்கள் அறிந்துகொள்ள ஆங்கிலத்திலும் வெளியிடப்பட்டுள்ளது. அதிபர் ஷி என்ன நினைக்கிறாரோ அதிலிருந்து துளியும் விலகாமல் கட்சியினர், உறுப்பினர்கள், வணிகர்கள், மாணவர்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பிறர் அப்படியே வழிமொழிய வேண்டும். இப்படித்தான் சீன கனவுக்கான அடிக்கல் உருவாக்கப்பட்டு வருகிறது. வலிமையான தேசியவாதம், நாடுபற்றிய பெருமை, வெளிநாட்டு இறக்குமதியை நம்பியிராத தன்னிறைவு கொண்ட நாடு, தொழில்நுட்ப வளர்ச்சி ஆகியவற்றி்ல ஷி, முன்னாள் அதிபரான மாவோவைப் பின்பற்றுகிறார். அடுத்து கன்பூசியசின் பல்வேறு கருத்துகளை விரும்புகிறார். ஐந்து வகை உறவுகளை சமூகம் பின்பற்றவேண்டுமென கன்பூசியஸ் கூறியுள்ளார். அரசர் - மக்கள், தந்தை - மகன், அண்ணன்-தம்பி, கணவர்-மனைவி, இரு நண்பர்களின் உறவு ஆகியவைதான் அவை.  அடிப்படை தலைவர், மக்கள் தலைவர் என பல பட்டங்கள் அதிபர் ஷிக்கு வந்துகொண்டே இருக்கின்றன. பொதுவுடைமைக் கட்சியின் பொதுசெயலாளார்,தே...

அகடெமியா வலைத்தளம் - அறிவியல் ஆராய்ச்சி கட்டுரைகளுக்கான பொக்கிஷம்

    அகடெமியா இணையதளத்தில் அறிவியல் சார்ந்த ஏராளமான ஆய்வு அறிக்கை, ஆராய்ச்சி தகவல்கள் கிடைக்கின்றன. அங்கு அறிவியல் சார்ந்த இரு மொழிபெயர்ப்பு கட்டுரைகள் ஆரா பிரஸ் சார்பாக பதிவேற்றப்பட்டுள்ளன. ஆர்வம் இருப்பவர்கள் வாசிக்கலாம். நன்றி!   https://independent.academia.edu/arasuk8

இலவச மின்னூல்கள் - ஃப்ரீதமிழ் இபுக்ஸ்

படம்
      இலவச மின்னூல்களை ஃப்ரீதமிழ் இபுக்ஸில் தேடி வாசிக்கலாம். கூடுதலாக, இன்டர்நெட் ஆர்ச்சீவிலும்,பிரதிலிபி தமிழிலும் சில நூல்கள் கிடைக்கின்றன.  வாய்ப்பிருப்பவர்கள் தரவிறக்கி வாசியுங்கள். நன்றி!

நூல் வாசிப்பை ஊக்குவிக்கும் பல்வேறு கருத்துகளை கூறுகிற கட்டுரை நூல்!

படம்
          உறைப்புளி செல்வேந்திரன் கட்டுரை நூல் இந்த நூல் கிண்டிலில் வெளியானது. மொத்தம் எழுபத்தாறு பக்கங்கள். மொத்தம் பத்து கட்டுரைகள் உள்ளன. இக்கட்டுரைகள் அனைத்துமே வாசகர்களுக்கு வாசிப்பு பற்றி, எழுத்தாளர்களைப் பற்றி நிறைய விஷயங்களைக்கூறுகிறது. நூலின் இறுதியாக இடம்பெற்றுள்ள கட்டுரை, நவீன கால இளைஞர்கள் தினசரி வாழ்க்கையைக் கூட அணுக முடியாமல் இருக்கிறார்கள். அதேசமயம் அவர்கள், சமூகத்தின் அனைத்தையும் மொக்கை என்ற ஒற்றைச் சொல் மூலம் எப்படி இழிவுபடுத்துகிறார்கள் என்பதைப் பற்றி விமர்சனமும் கண்டனமுமாக பேசியுள்ளது. அக்கட்டுரை இறுதியாக இடப்பெற்றது சிறப்பானதுதான். வாசிப்பு ஏன் முக்கியம் என்பதை மறக்கமுடியாதபடி காட்டமாக கூறுகிறது. கல்லூரியொன்றில் ஆற்றிய உரை, எழுத்தாக்கமாக மாற்றப்பட்டு இந்து தமிழ் திசையில் வெளியாகியுள்ளது. நடப்பு விஷயங்களோடு நூலின் தொடர்பு பற்றி தேடினால், இயக்குநர் மிஷ்கின் அகப்பட்டுவிடுகிறார். நூலில் அறம் புத்தகம் வெளியிடப்பட்டபோது அந்த விழாவுக்கு அவர் வருகை தந்தபோது நடந்த விஷயங்களைப் பற்றி விவரிக்கிற கட்டுரை ஒன்றுள்ளது. அந்தக்கட்டுரை, மிஷ்கினின் எளிய மனிதர்கள...

இளைஞர்களின் இந்தியா - அரசியல் சிறுநூல் வெளியீடு

படம்
            சேட்டன் பகத் எழுதிய யங் இந்தியா நூலின் அரசியல் பகுதி கட்டுரைகளை தமிழாக்கம் செய்து எழுதியவை சிறுநூலாக உள்ளன. அவற்றை இணைய லிங்கை கிளிக் செய்து தரவிறக்கிக்கொள்ளலாம். வாசியுங்கள். நன்றி1     https://archive.org/details/youngi/page/14/mode/2up

ஏஐ வரவால் மாறும் ஊடக செய்தியறை!

படம்
  நவீன ஏஐகளால் செயல்வேகம் கூடும் ஊடகங்களின் செய்தியறைகள் தமிழகத்தின் இதயத்துடிப்பு, நம்பர் 1 வார இதழ் என தன்னைத்தானே புகழ்ந்துகொள்ளும் வார இதழ்கள் எல்லாமே வலதுசாரி கட்சிகளால் வாங்கப்பட்டு, அஜண்டாவிற்கு ஏற்ப போலிச்செய்திகளை, மக்களை மடைமாற்றும் கட்டுரைகளை வெளியிட்டு வருகின்றன. காசு கொடுக்கிறவனே கண்கண்ட தெய்வம் என மாறிவிட்டன. அதேசமயம் காலத்திற்கேற்ப எழுதும் செய்திகளை மேம்படுத்தி பல்வேறு வழிகளில் மக்களை அடைய முயற்சிக்கும் புதிய பாதைகளுக்கும் பஞ்சமில்லை.  அமெரிக்காவிலுள்ள வால்ஸ்ட்ரீட் ஜர்னல் என்ற நாளிதழ், டிக் டாக் அல்காரிதம் பற்றி ஆராய்ச்சி செய்தது. அமெரிக்காவில் உள்ள இளைஞர்கள் அனைவருமே பெரும்பாலும் டிக்டாக்கில் பயனர்களாக இருக்கிறார்கள். சிலர் அதில் வியாபாரம் செய்கிறார்கள். நடிக்கிறார்கள். ஏதோ ஒருவகையில் அந்த ஆப்பில் இணைந்திருக்கிறார்கள். அதைவிட்டு விலகாமல் இருக்கிறார்கள். அப்படியென்ன சிறப்பம்சம் மனதை கட்டிப்போடும்படி இருக்கிறது என நாளிதழ் ஆசிரியர் குழு யோசித்தது. 2021ஆம் ஆண்டு, பதிமூன்று வயதான பயனர் ஒருவர் டிக்டாக்கில் கணக்கு தொடங்கினார். ஒன்லி பேன்ஸ் என்ற டிக்டாக்கின் கணக்கில் இ...

நாயின் உளவியல் பற்றி அறிய விருப்பமா? - சப்ஸ்டாக் தளத்தில் இணையுங்கள்!

படம்
  நாம் வீட்டில் வளர்க்கும் விலங்குதான் நாய். பெரும்பாலானவர்கள் நாயை தங்கள் துணையாக வைத்துக்கொண்டு வாழ்க்கையை வாழ்கிறார்கள். குறிப்பாக வயதானவர்கள். இந்த சூழலில், நாயின் உளவியல் பற்றி அறிவது அவசியம். என்னதான் இருந்தாலும் உயிருள்ள பிராணி அல்லவா?  இதைப்பற்றிய தகவல்களை நீங்கள் சப்ஸ்டாக் தளத்தில் வாரம்தோறும் வியாழனில் வாசிக்கலாம். தளத்தில் உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்தால் செய்தி மடல் உங்களுக்கு கிடைக்கும். நன்றி! anbarasushanmugam.substack.com

விளைவுகளை அறியாமல் செயல்படும் நாட்டின் தலைவர்!

படம்
  விளைவுகளைப் பற்றிய அறிவற்ற தலைவர் 8.1.2022 சென்னை -4   அன்புள்ள நண்பர் முருகுவிற்கு, வணக்கம். நலமா? நேற்று புக்டே.இன் எனும் தளத்திற்கு சென்றேன். பாரதி புத்தகாலயத்தின் தளம். அதில் படிப்பதற்கான நிறைய விஷயங்கள் இருந்தன. ஆகார் படேலின் நேர்முகம் ஒன்றைப் படித்தேன். கரண் தாப்பர் நேர்காணல் செய்திருந்தார்.’’ தீர்மானமான ஆற்றல் மிக்க என்பதோடு, விளைவுகளைப் பற்றி அறியாமல் செயல்படக்கூடியவர்’’ என ஆகார் படேல் பயன்படுத்திய சொற்கள் வினோதமாக பட்டது. மோடியைப் பற்றிய கூறியவை. கரண்தாப்பர், அவர் கூறிய சொற்களுக்கு என்ன பொருள் என கேட்டு கேள்விகளை அமைத்திருந்தார். நல்ல நேர்காணல். போக்குவரத்து நிறுத்தப்படவில்லை என்றால் வெளியே எங்காவது போகவேண்டும். ‘’மாணவர் இதழை 50 இதழ்களாக வெளியிடலாம்’’ என எடிட்டர் கூறினார். ஆனால் ஒரு இதழ் வெளிவருவதே கடினமாகிவிட்ட சூழ்நிலை. தேவையான விஷயங்களை எழுதி கணினியில் ஏற்றிவிட்டு எங்காவது செல்ல முடிந்தால் திட்டமிட்டு செல்லவேண்டும். காரியத் தடைகளால் அனைத்தும் அப்படியே நிற்கின்றன. இணையத்தில் தமிழ் டிஜிட்டல் லைப்ரரி வலைத்தளம் சென்று பார்த்தேன். நிறைய நூல்களை வைத்திருக்க...

பத்திரிகையாளர்கள் தம் நண்பர்களைப் பற்றி நேர்மையாக கட்டுரை எழுதினால்...

படம்
  பத்திரிகையாளராக ஒருவர் இருந்தாலும் அவருக்கும் மனதில் சில ஆதரவு, விருப்பு வெறுப்பு கருத்துகள் இருக்கும். அரசியல் கட்சி தொடங்கி, சினிமா பிரபலம், சிறந்த தொழில்நிறுவனம், வங்கி முதலீடு, பிடித்த ஆளுமை, ஆதரவான பல்வேறு துறைசார்ந்த நண்பர்கள் என விளக்கிக் கூறலாம். ‘’பத்திரிகையாளர்கள் அரசியல்வாதிகளுக்கு நண்பர்களாக இருக்க முடியாது’’ என்று அவுட்லுக் வார இதழ் ஆசிரியர் வினோத் மேத்தா கூறுவார். நான் இங்கு உண்மையான பத்திரிகையாளர்களைப் பற்றி சொல்கிறேன்.   நீங்கள் அரசியல்வாதிகளின் நண்பராக இருந்தால், அவரைப் பற்றி நேர்மையாக கட்டுரை எழுத முடியாது. அவர் செய்த ஊழல்கள், தவறுகள் பற்றி நண்பர் என்ற காரணத்திற்காக பூசி மெழுகி சமாளிக்க வேண்டும். உங்கள் கட்டுரையைப் படிக்கும் வாசகர் இதனால் ஏமாற்றப்படுகிறார். ஆக, பத்திரிகையாளராக நீங்கள் நேர்மையாக செயல்படவில்லை என்றாகிறது. பத்திரிகையாளர் என்பது தொழிலாக இருந்தாலும் வேலையைக் கடந்து அவரும் விருப்பு, வெறுப்பு கொண்ட மனிதர்தான். பொதுவாக 30 வயதில் ஒருவருக்கு உலகம், சமூகம் என திட்டவட்டமாக முடிவுகள் உருவாகிவிடுகின்றன. ஆனால் பத்திரிகையாளரைப் பொறுத்தவரை இப்படி முடி...

செய்தியை ஆராய பத்து நொடி விதி முக்கியம்!

படம்
  செய்திகளை எழுதுவது, அதிலுள்ள அறம் பற்றி யோசிப்பது எல்லாம் சரிதான். ஆனால் செய்தியை எழுதுவது என ஒப்புக்கொண்டால் அதை குறிப்பிட்ட நேரத்தில் எழுதி க் கொடுத்தே ஆகவேண்டும்தானே? பிராந்திய மொழி நாளிதழில் குறிப்பிட்ட பகுதிகளை பார்த்து செய்தி சேகரிப்பவர் குறைந்தபட்சம் நான்கு செய்திகளையேனும் தரவேண்டிய அழுத்தம் இருக்கிறது. செய்தியை முந்தி எழுதி தருவதில் உங்கள் சக போட்டியாளர்களாக நிருபர்களும் உங்கள் கூடவே அருகில் இருக்கிறார்கள். நேரவரம்பும் இருக்கிறது. எப்படி இந்த அழுத்தங்களை சமாளிப்பது? ஒரு செய்தியை எழுதி அனுப்பலாமா, காட்சி ஊடகத்தில் வீடியோவை ஒளிபரப்பலாமா என்ற சூழ்நிலை வந்தால் பத்து நொடி சிந்தனை என்ற விதியைக் கையாளலாம். இவ்வகையில் உங்களிடம் உள்ள செய்தியை எந்த வித அழுத்தங்கள் இன்றி கவனமாக ஆராய வேண்டும். எனக்கு என்ன தெரிந்திருக்கிறது, இன்னும் என்ன தெரிந்துகொள்ளவேண்டும் என்ற இரு கேள்விகள் செய்தியில் முக்கியமானவை. அப்போதுதான் செய்தியை ஆழமாகவும் விரிவான தன்மையில் செம்மையாக்க முடியும். முழுமையில்லாத செய்தியை எப்போதும் பிரசுரிக்க கூடாது. ஒரு செய்தியை எழுதுகிறீர்கள். அதில் தனிநபரின் மதம் பற்றிய...

சூரியனைப் போற்றுவதென்பது.. புதிய மின்னூல் வெளியீடு - இன்டர்நெட் ஆர்ச்சீவ் தளம்

படம்
  குங்குமம் வார இதழில் பணியாற்றுவதற்கு எனக்கு வாய்ப்பு கிடைக்கும் என முதலில் நினைக்கவில்லை. கோகுலவாச நவநீதன் தலைமை உதவி ஆசிரியராக இருந்த காலம் அது. திரு.முருகன் அப்போது குழும இதழ்களின் முதன்மை ஆசிரியர். அவர்தான் என்னை முத்தாரம் இதழுக்கான உதவி ஆசிரியராக தேர்ந்தெடுத்தார். குறைந்த சம்பளம், ஏராளமான வேலைகள் எனக்கு பரிசாக கிடைத்தன.  எனக்கு அன்றிருந்த பெரிய மகிழ்ச்சி, வெள்ளி மலரில் சினிமா கட்டுரைகள், தொடர் எழுதிக்கொண்டிருந்த எனது வழிகாட்டியாக நினைத்த திரு. கே.என்.சிவராமன் சாரை அருகிலிருந்து பார்க்கும் வாய்ப்பும், காலை வணக்கம் சொல்லும்போது அவரின் முகத்தை பார்க்க முடியும் என்ற மனநிறைவும்தான்.   மொழிபெயர்ப்பு என்பது நானாக முனைந்து கற்றுக்கொண்டதுதான். அதில் நிறைய பிழைகள் உண்டு. தவறுகள் உண்டு. முத்தாரத்தில் உதவி ஆசிரியராக இருந்தபோதும் கூட எனது பெயரில் கட்டுரை வருவது கடினமாக இருந்தது. அதற்கென வெளியில் இருந்து வரும் பல்வேறு தகவல்களை படித்து சரிபார்த்து போட்டால் போதும் என்பதும் முதன்மை ஆசிரியரின் உத்தரவு. குங்குமத்தில் பணியாற்றியவரான இன்னொரு நபர் உடல்நிலை குறைவால் விடுப்பு எடுக்கத்...

அசுரகுலம் 3- ரத்தசாட்சி மின்னூல் வெளியீடு

படம்
  அசுரகுலம் 3 ரத்தசாட்சி மின்னூல் வெளியீடு   ரத்தசாட்சியை எழுதவேண்டும் என தீவிரமான எண்ணம் அண்மையில்தான் எழுந்தது. பொதுவாகவே மின்னூல்களை ஜெயமோகன் போல ஆயிரம் பல்லாயிரம் பக்கங்களில் எழுதுவது எனக்கு உடன்பாடில்லை. எனவே இதுவும் 75 பக்கங்களைக் கொண்ட நூல்தான். எனவே எளிதாக நீங்கள் கிண்டில் மூலம் வாசித்துவிட முடியும். ரத்தசாட்சி, அசுரகுலத்தின் வரிசையில் கொலைகாரர்களின் குற்றம் மற்றும் உளவியல் பற்றி பேசுகிறது. இதன் வரிசை உடலுறவு, கோபம், பணம் என எதை அடிப்படையாக கொண்டு கொலைகளை குற்றங்கள் நடத்தப்படுகிறது என்பதை ஆராய்கிறது. நூலில் நடைபெறும் குற்றங்கள் பெரும்பான்மையானவை மேற்குலகை அடிப்படையாக கொண்டவை. பொதுவாக மேற்குலகில் அறிவியல் வளர்ந்திருப்பதோடு குற்றங்களை ஆவணப்படுத்தி வைக்கும் பழக்கமும் உண்டு. இந்த வகையில் குற்றங்களின் தொடர்ச்சி, அதன் குறிப்பிட்ட அடையாளங்கள், தன்மை, குற்றவாளிகள் என எளிதாக அடையாளம் கண்டு குற்றவாளிகளை கைது செய்கிறார்கள். அடையாளங்களை வைத்து சீரியல் கொலைகாரர்களை காவல்துறையினர் கைது செய்கின்றனர். அதேசமயம் குற்றவாளிகளே காவல்துறையினருக்கு சிலி பிடிமானங்களைக் கொடுத்து மு...

பொங்கல் மலருக்கான எடிட்டிங் ஜரூர்!

படம்
பொங்கல் மலருக்கு வேலை செய்வது என்றால், என்னைப் பொறுத்தவரை கட்டுரை எழுதுவதுதான். ஆனால், சண்முகம் சார் வேலைப்பளுவினாலா அல்லது வேறு சிக்கலாலா என்று தெரியவில்லை. என்னை ராவான கட்டுரைகளை படித்து பார்த்து செம்மை செய்யச் சொன்னார். ஆனால் மறுக்கும் நிலையில் இல்லை. கட்டுரைகளை ஃபோல்டரில் போட்டுக்கொண்டே இருந்தார் சண்முகம் சார். நான் அவற்றை திருத்தி தலைப்புகளை மாற்றினேன்.  பெரும்பாலான தினசரி செய்தியாளர்களுக்கு செய்தி எழுதுவது தெரியும். ஆனால் பொங்கல், தீபாவளி மேட்டருக்கான ஐடியாக்களைக் கொடுத்து அதை செவ்வனே எழுதுவது என்றால் எழுதிவிடுவார்கள். ஆனால் அதில் எது முக்கியமோ அதை முன்னிலைப்படுத்தி எழுத வராது. அனைத்தையுமே எழுதியிருப்பார்கள். அதில் நாம் எது முக்கியமோ அதை சற்று முக்கியப்படுத்தி எடுத்து சற்று மாற்றியமைக்க வேண்டும். அப்படித்தான் நான் புரிந்துகொண்டு எழுதினேன். நன்றாக செய்தேனா என்று தெரியவில்லை. ஆனால் சண்முகம் சார் புகார் ஏதும் சொல்லவில்லை. ''நான் பார்த்துக்கொள்கிறேன். நீங்கள் ரவ் டிராஃப்ட் போல வரும் அதை சற்று திருத்தி எழுதிக்கொடுங்கள்'’ என்றார். முடிந்தவரை அவர் சொன்ன விதிகளை மனதில் கொண்டி...

கூடுகிற வேலைச்சுமை - கடிதங்கள் - கதிரவன்

படம்
  ஆழமான அக்கறை கொண்ட கட்டுரைகள் ! அன்பு நண்பர் கதிரவனுக்கு , வணக்கம் . நலமாக இருக்கிறீர்களா ? உங்கள் வீட்டில் அப்பா , அம்மாவின் நலனை விசாரித்ததாக சொல்லுங்கள் . நவ .1 இல் அரசு சொன்னபடி பள்ளி தொடங்கினால் , எங்கள் நாளிதழ் 15 ஆம் தேதி தொடங்கும் என நினைக்கிறேன் . ஃபிரன்ட்லைன் இதழ்களுக்கு கட்டிய சந்தா இன்னும் இரு இதழ்களோடு முடிவுக்கு வருகிறது . இதில் வரும் கட்டுரைகள் படிக்க நிறைய தகவல்களோடு உள்ளன . எல்லாமே ஆழமாக கருத்துகளை கொண்டவரை . படிக்க சற்று அதிக நேரம் எடுத்துக்கொள்ளும் இதழ் இதுவே . ஃபிரன்ட்லைனில் எழுதும் டி . கே . ராஜலட்சுமி என்ற கட்டுரையாளர் எனக்கு பிடித்தமானவர் . இவர் தான் எழுதும் கட்டுரைகளில் தனது மனிதநேயம் , அக்கறையை எப்படியாவது சொல்லிவிடுகிறார் . இப்போது தினசரி அலுவலக வேலைக்கு ரெடிமேட் சட்டைதான் அணிகிறேன் . ஃபேஷன் கம்ஃபோர்ட் என்ற கடையின் உடைகள் எனக்கு பொருத்தமாக இருக்கின்றன . அங்கு தான் அண்மையில் , 1,450 ரூபாய்க்கு சட்டை , பேண்ட் வாங்கினேன் . காலை எட்டு மணிக்கு ஆபீஸ் போய்விடுகிறேன் . இதனை ஆசான் கேஎன்எஸ்சிடமிருந்து கற்றது . இப்போது ஆசான் என்னையும் மிஞ்சி ஏழுமணிக்கு ஆபீசுக்கு வந...

அறையில் அதிகரிக்கும் தூக்கம்; அலுவலகத்தில் கூடும் வேலை! கடிதங்கள்- கதிரவன்

படம்
  20.1.2021 மயிலாப்பூர் அன்பு நண்பர் கதிரவனுக்கு, வணக்கம். நலமா? இன்று வெகுநாட்களுக்குப் பிறகு ஓட்ஸ் இன்ஸ்டன்ட் உணவு பாக்கெட்டை சமைத்தேன். இதற்கு முன்னர் இதை மதிய உணவாக கூட சாப்பிட்டு இருக்கிறேன். ஒவ்வாமை வந்தபிறகு இப்போதுதான் சாப்பிடுகிறேன். குவாக்கர் ஓட்ஸ் வாங்கி அதில் தக்காளி மிக்ஸை சேர்த்து சமைத்தேன். அதுதான் இரவு உணவு. தெருக்களே பள்ளிக்கூடம் என்ற நூலை படித்து வருகிறேன். இதன் மூல நூலை குக்கூவில் வேலை செய்தபோது தமிழில் மொழிபெயர்த்தேன். அப்போது சரியாக இருப்பதாக தோன்றியது. உடனே  அதை  ஃப்ரீதமிழ் இபுக்ஸ் தளத்திற்கு வெளியிட திரு. சீனிவாசன் அவர்களுக்கு அனுப்பினேன்.  அலுவலக வேலைகளை ஓரளவுக்கு முடித்துவிட்டேன். எனவே, சொந்த வேலைகளையும் அறிவியல் இழ்களையும் படித்துக்கொண்டு இருக்கிறேன். அறையில் அமர்ந்தால் தூக்கம் வருகிறது. ஆபீஸ் என்றால் வேலை செய்ய நன்றாக இருக்கிறது.  ஷோபாடே எழுதிய நூலை 200 பக்கங்கள் படித்துவிட்டேன். அப்போதும் நூலின் கருத்துக்களை அதிகம் யோசிக்கமுடியவில்லை. இதற்கு என் சோம்பலே காரணம். வினோத் அண்ணாவுக்கு எழுதிய கடிதங்களை கடித நூலில் சேர்க்க வேண்டும். ஆபீஸ் தொ...

விண்கல் மோதும் கிராம மக்களின் நிலை! - கடிதங்கள் - கதிரவன்

படம்
  18.1.2021 மயிலாப்பூர் அன்புள்ள நண்பர் கதிரவனுக்கு, வணக்கம். நலமா? இன்று அதிகாலை முதல் மழை பெய்துகொண்டே இருக்கிறது. சூரியனைப் பார்க்கவே முடியவில்லை. டீ குடிக்க வெளியே போனால் மழை விடவில்லை. அதற்கும் போட்டி போட்டு ர.ரக்கள் அதிமுக ஆபீசுக்கு வந்துவிட்டார்கள். சாலை முழுக்க ஆம்புலன்ஸ் நீளத்திற்கு வண்டிகளைக் கொண்டு வந்து நிறுத்திவிட்டனர். போக்குவரத்து நெரிசலுக்கு வேறு என்ன காரணங்கள் வேண்டும்?  ஸ்கைலேப் என்ற தெலுங்குப்படம் பார்த்தேன். ஆந்திராவில் உள்ள ஏழைமக்கள் வாழும் ஊர். அந்த ஊரின்மீது விண்கல் வந்து மோதப்போவதாக செய்தி. அது மக்களை எப்படி பாதிக்கிறது என்பதே படக்கதை. இதனூடே ஜமீன்தார் மகள் கௌரி எப்படி உண்மையான பத்திரிகையாளராகிறாள், மருத்துவ உரிமம் தடைபட்ட ஆனந்த் எப்படி தனது முதல் கிளினிக்கை கிராமத்தில் தொடங்கி வெல்கிறான் என்பதை நகைச்சுவையாக சொல்லியிருக்கிறார்கள்.  இன்று ஆபீசில் ஒரு கட்டுரை மட்டுமே எழுதினேன். மழை பெய்தால் மனம் வேலையில் குவிய மாட்டேன்கிறது. படிக்கவேண்டிய அறிவியல் இதழ்கள் நிறைய உள்ளன. அவற்றையும் இனி படிக்க வேண்டும்.  துப்பறியும் சாம்பு - 2 200 பக்கங்களைத் தாண்டி...

வாசிப்பு பழக்கத்தை மாணவர்களின் மனதில் விதைக்கும் அரசுப்பள்ளி ஆசிரியர்!

படம்
  ஆசிரியர் உமா மகேஸ்வரி வாசிக்கும் பழக்கம் என்பது மாணவர்களுக்கு இன்று அவசியமானது. அதிலும் மதிப்பெண்கள் மட்டுமே முக்கியமாகிக்கொண்டு இருக்கும் நிலையில், அவர்களது கற்பனைத் திறனை வளர்க்க வாசிப்பு உதவுகிறது. இதற்கு சில ஆசிரியர்கள் எப்போதும் உதவி வருகின்றனர். கூடவே அதனை வளர்க்கவும் மாணவர்களுக்கு ஆதரவை வழங்குகின்றனர். அப்படி ஒருவர்தான் ஆசிரியர் உமா மகேஸ்வரி. இவர் குரோம்பேட்டை அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றுகிறார். இங்கு வகுப்பில் மாணவர்களுக்கென தனி நூலகத்தை உருவாக்கியிருக்கிறார்.  மாணவர்கள் தேர்வில் பெறும் மதிப்பெண்களை விட அவர்கள் நூல்களை வாசிப்பது, அதை பற்றி மதிப்பீடுகளை முன் வைப்பதற்கும் கூடுதல் மதிப்பெண்களை வழங்குகிறார். இது மாணவர்களுக்கு நூல்களின் மீது அக்கறை செலுத்த வழிவகுத்தது. இதன் விளைவாக, அரசுப் பள்ளி மாணவி விமானத்தில் செல்லும் வாய்ப்பையும் நூல் வாசிப்பு வழங்கியிருக்கிறது. திரைப்பட நிறுவனம் ஒன்று உங்கள் கனவு பற்றி கட்டுரை எழுதுங்கள் என்று சொல்லி நடத்திய போட்டியில் மாணவி வெற்றி பெற்று முதன்முறையாக விமானத்தில் பயணம் செய்து திரும்பியிருக்கிறார்.  2005ஆம் ஆண்டு சேலம் மாவ...

இந்தியாவை பற்றிய வெளிப்படையாக கருத்துகள்! - சூப்பர் ஸ்டார் இந்தியா! - ஷோபா டே

படம்
  ஷோபா டே இந்தியா சூப்பர்ஸ்டார் ஷோபாடே பெங்குவின்  350 ரூபாய் பழைய அட்டை ஷோபா டே இந்தியாவில் வெளியாகும் தேசிய நாளிதழ்களில் ஏராளமான பத்திகளை எழுதியுள்ளார். இவரின் எழுத்து விசேஷம் என்னவென்றால், சீரியசாக போகும் ஆங்கில கட்டுரையில் திடீரென இந்தி வார்த்தைகளை புகுத்தி எழுதுவதுதான். மேலும் கட்டுரை இப்படித்தான் இருக்கவேண்டுமென்று விதிகள் இல்லாமல் மெல்லிய நகைச்சுவையுடன் எழுதுவார். கட்டுரை முழுக்க இந்தியாவைச் சார்ந்தது. இதில் இந்தியாவின் தன்மை, அங்குள்ள மக்கள் எப்படி இருப்பார்கள் என்பதை வெளிப்படையாக எழுதியிருக்கிறார். இதனை நானூறு பக்கங்களுக்கு படித்துவிட்டு பிறகு கடைசி மூன்று பக்கங்களில் இந்தியாதான் எனது தாய் நாடு, அதனை நேசிப்பேன் என்று எழுத்தாளர் சொல்லுவது நம்பகத்தன்மையாக இல்லை.  ஆனாலும் நூலை எதற்கு வாசிக்க வேண்டும்? இந்தியாவை புரிந்துகொள்ள என இந்தியா டுடே மாதிரி தான் சொல்லவேண்டும். இந்தியாவில் நிலவும் கலாசாரம், பெண்களை வெறித்துப் பார்ப்பது, அவர்களிடம் மோசமாக நடந்துகொள்வது, வல்லுறவு, பிச்சை எடுப்பது, ஐடி கலாசாரம் புனே நகரை மாற்றி வருவது, வெளிநாடுகளுக்கு இந்தியர்கள் செல்வது, அரசியலி...

பெருந்தொற்று கால எழுத்தாளர்கள்! - குதிரை சவாரி, முன்னோர்களின் கதை, கலாசாரம் சார்ந்த கேள்வி, குறைந்த கழிவுகள்

படம்
  எழுத்தாளர் சஹர் மன்சூர் தரிபா லிண்டெம் எழுத்தாளர், நேம் பிளேஸ் அனிமல் திங் - ஜூபான் புக்ஸ் தரிபா, மேகாலயா மாநிலத்தைச் சேர்ந்தவர். தற்போது மும்பையில் சுங்கத்துறையில் கூடுதல் கமிஷனராக பணியாற்றுகிறார். தனது முன்னோர்களைப் பற்றிய கதை மனதில் சுனை நீராக பெருக எழுத தொடங்கியிருக்கிறார். இந்த வேலை தொடர்ச்சியாக நடைபெறவில்லை. ஆனாலும் கிடைத்த நேரத்தில் நூலை எழுதிக்கொண்டே வந்திருக்கிறார். அப்படித்தால் இவரது புதிய நூல் பிரசுரமாகியிருக்கிறது. 34 வயதாகும் தரிபா, எனக்கு நூல் பிரசுரமாவது பெரிய பிரச்னையாக இருக்கவில்லை. புதிய எழுத்தாளர்களுக்கு இப்போது பிரசுரங்கள் வாய்ப்பு கொடுக்கிறார்கள் என்கிறார்.  தரிபா லிண்டெம் இப்போது நம்மிடம் பேசும்போது கூட நான் தனியாக அமர்ந்து நூலை எழுதுவேன். அது நூலாக வெளியாகும் என்பதை யோசிக்கவே முடியவில்லை என்கிறார்.  யஷாஸ்வினி சந்திரா எழுத்தாளர், எ டேல்  ஆப் தி ஹார்சஸ் கலை வரலாற்று ஆய்வாளர், குதிரை சவாரிக்காரர் என்றுதான் சந்திராவைச் சொல்ல முடியும். இவர் தனது குதிரை தொடர்பான ஆர்வத்தை முன்வைத்து வரலாற்று பின்னணியில் நாவலை எழுதி பான் மெக்மில்லனில் வெளியிட்டிருக்க...