செய்தியை ஆராய பத்து நொடி விதி முக்கியம்!
செய்திகளை எழுதுவது, அதிலுள்ள அறம் பற்றி யோசிப்பது
எல்லாம் சரிதான். ஆனால் செய்தியை எழுதுவது என ஒப்புக்கொண்டால் அதை குறிப்பிட்ட நேரத்தில்
எழுதி க் கொடுத்தே ஆகவேண்டும்தானே?
பிராந்திய மொழி நாளிதழில் குறிப்பிட்ட பகுதிகளை பார்த்து
செய்தி சேகரிப்பவர் குறைந்தபட்சம் நான்கு செய்திகளையேனும் தரவேண்டிய அழுத்தம் இருக்கிறது.
செய்தியை முந்தி எழுதி தருவதில் உங்கள் சக போட்டியாளர்களாக நிருபர்களும் உங்கள் கூடவே
அருகில் இருக்கிறார்கள். நேரவரம்பும் இருக்கிறது. எப்படி இந்த அழுத்தங்களை சமாளிப்பது?
ஒரு செய்தியை எழுதி அனுப்பலாமா, காட்சி ஊடகத்தில்
வீடியோவை ஒளிபரப்பலாமா என்ற சூழ்நிலை வந்தால் பத்து நொடி சிந்தனை என்ற விதியைக் கையாளலாம்.
இவ்வகையில் உங்களிடம் உள்ள செய்தியை எந்த வித அழுத்தங்கள் இன்றி கவனமாக ஆராய வேண்டும்.
எனக்கு என்ன தெரிந்திருக்கிறது, இன்னும் என்ன தெரிந்துகொள்ளவேண்டும்
என்ற இரு கேள்விகள் செய்தியில் முக்கியமானவை. அப்போதுதான் செய்தியை ஆழமாகவும் விரிவான
தன்மையில் செம்மையாக்க முடியும். முழுமையில்லாத செய்தியை எப்போதும் பிரசுரிக்க கூடாது.
ஒரு செய்தியை எழுதுகிறீர்கள். அதில் தனிநபரின் மதம் பற்றிய குறிப்பும் இருக்கிறது.
அதனால் செய்தியில் முக்கியமான இயல்பு ஏதேனும் மாறுகிறதா என்று பாருங்கள். செய்தியில்
ஒருவரின் சாதி, மதம் பற்றி குறிப்பிட அவசியம் இருந்தால் அதை செய்யலாம். இல்லாதபோது
அதே மத நம்பிக்கை கொண்டவர்களை காயப்படுத்துவது போல செய்தி அமையலாம். எனவே, அதை நீக்குவதே
நல்லது.
தாம்சன் ராய்ட்டர்ஸ் பவுண்டேஷன்
டெனர்.காம்
கருத்துகள்
கருத்துரையிடுக