10.வணிகமே செய்யாமல் பெரும்தொகையைக் கடன் கொடுக்க முடியும் - மோசடி மன்னன் அதானி
சிங்கப்பூரில் வினோத் அதானிக்கு
சொந்தமான நிதி நிறுவனம் உள்ளது. 2013-2015 காலகட்டங்களில், இந்த நிறுவனம் அதானி என்டர்பிரைசஸ்
நிறுவனத்திற்கு அதிக லாபம் காட்டும் விதமாக பயன்படுத்தப்பட்டது.
2013-2015ஆம் ஆண்டு கார்மிசல்
அண்ட் போர்ட் சிங்கப்பூர் ஹோல்டிங்க்ஸ் லிட். நிறுவனத்தை வினோத் அதானி நிர்வாகம் செய்து
வந்தார். (ப.2) இந்த நிறுவனத்தில் இருந்து மூன்றுநிதி பரிவர்த்தனைகள் அதானி என்டர்பிரைசஸ் நிறுவனத்திற்கு
செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம் அதானி என்டர்பிரைசஸ் நிறுவனத்தின் மொத்த வருமானம்
அதிகரித்தது. சொத்துகளுக்கு ஏற்படும் சேதம் அடிப்படையில் பெரிய நிறுவனம் என்ற அங்கீகாரத்தை
இழக்கும் நிலையை அதானி குழுமம் நிதி பரிவர்த்தனை மூலம்தான் சமாளித்தது.
ஆஸ்திரேலியாவில் உள்ள சுரங்கம்,
ரயில்வே, துறைமுகம் ஆகிய நிறுவனங்களுக்கு நிதி பரிவர்த்தனைகள் செய்யப்பட்டன. ஆனால்
இந்த நிதி பரிவர்த்தனை அதானி என்டர்பிரைசஸ் நிறுவனங்களின் ஆண்டு அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை.
ஹிண்டன்பர்க் அமைப்பு செய்த ஆய்வில் நிதி பரிவர்த்தனைகளைச் செய்த நிறுவனம் சிங்கப்பூரைச்
சேர்ந்த கார்மிசல் ரயில் நிறுவனம் என தெரிய வந்தது.
2013ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம்
தொடங்கி, 2015ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை கார்மிசல் ரயில் நிறுவனம், அதானி என்டர்பிரைசஸ்
நிறுவனத்தின் துணை நிறுவனமான அதானி மைனிங் பிடிஒய் லிட். நிறுவனத்திடமிருந்து இரண்டு
ட்ரான்சஸை வாங்கியது. (ப.133) இந்த வர்த்தகத்திற்காக பரிமாறப்பட்ட தொகை 147 மில்லியன்
டாலர்கள்.
ஹிண்டன்பர்க் அமைப்பு,
இவ்வளவு பெரிய தொகைக்கு வாங்கப்பட்ட பொருட்கள், எப்படி நிதி அனுப்பப்பட்டது என்ற விவரங்களைத்
தேடியது. அதானி என்டர்பிரைசஸ் நிறுவனத்தின்
2013-2014, 2014-2015 ஆகிய ஆண்டுகளில் வெளியிடப்பட்ட ஆண்டறிக்கையில் மேற்சொன்ன பரிவர்த்தனை
குறிப்பிடப்படவே இல்லை.
2014ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், அதானி மைனிங் நிறுவனத்தின் பொருட்களை பயன்படுத்துவதற்காக 155 மில்லியன் டாலர்களை கார்மிசல் ரயில் நிறுவனம் வழங்கியது. இந்த வணிக பரிவர்த்தனை அதானி மைனிங் நிறுவனத்தின் துணை நிறுவனம் மூலம் நடைபெற்றது. கார்மிசல் ரயில் நிறுவனம், இவ்வளவு பெரிய பரிவர்த்தனையை எப்படி பெற்றது, நிதியை வழங்கியது எப்படி என்ற விவரங்கள் தெரியவில்லை. அதானி மைனிங் நிறுவனம், நிதியைப் பெற்றுக்கொண்டது. ஆனால் குறிப்பிட்ட கால தவணைக்குள் நிதியைக் கொடுக்க வேண்டும் என விதிகள் ஏதும் இல்லை. இந்த பரிவர்த்தனையும் அதானி என்டர்பிரைசஸ் நிறுவனத்தின் ஆண்டறிக்கையில் குறிப்பிடப்படவில்லை. (ப. 172)
அதானி என்டர்பிரைசஸ் நிறுவனத்தின்
நிதி உதவி பெறும் நிறுவனமான அதானி குளோபல் பிடிஇ, கார்மிசல் ரயில் நிறுவனத்திற்கு நூறு
மில்லியன் டாலர்களை வழங்கியுள்ளது. கடன்களை அடைப்பதற்காக என கூறப்பட்டுள்ளது. இந்த
பரிவர்த்தனை பற்றியும் அதானி என்டர்பிரைசஸ் நிறுவனத்தின் ஆண்டறிக்கையில் எந்த தகவலும்
கூறப்படவில்லை. 2014ஆம் ஆண்டு நடைபெற்ற பரிவர்த்தனைகளில் இதுவும் ஒன்று.
2015-2018ஆம் ஆண்டுகளில்
கார்மிசல் ரயில் நிறுவனம், பல்வேறு இழப்புகளைக் கூறி பட்டியலிட்டது. இந்தவகையில் அதானி
என்டர்பிரைசஸ் நிதி உதவி பெறும் நிறுவனங்களிடம் செய்துகொண்ட பரிவர்த்தனைகள், வாங்கிய
பொருட்கள், அதானி என்டர்பிரைசஸ் நிறுவனத்திடம் பெற்ற கடன், அதற்கு கட்டிய வட்டி ஆகியவை
காரணமாக கார்மிசல் நிறுவனம் இழப்பைச் சந்தித்ததாக ஆவணப்படுத்தப்பட்டிருந்தது.
2015ஆம் ஆண்டு கார்மிசல்
ரயில் நிறுவனம், தான் புதிதாக கையகப்படுத்திய சொத்து மதிப்பு 23 மில்லியன் டாலர்கள்
என வணிக பரிவர்த்தனை முடிந்த உடனே அவசரமாக
தனது ஆவணங்களில் குறிப்பிட்டிருந்தது.
பட்டியலிடப்பட்ட அதானி
என்டர்பிரைசஸ், 2015ஆம் ஆண்டு செய்த வணிகப் பரிவர்த்தனைகள் இருந்தாலும் கூட 1.2 பில்லியன்
டாலர்கள் சொத்து மதிப்பு இழப்பு ஏற்பட்டிருந்தது. இப்படி கூறப்பட்ட நிலையில் கூட அந்த
ஆண்டு கிடைத்த கடன் வட்டி வருமானம் 19 பில்லியன் டாலர்களாக இருந்தது. இந்த தகவல்கள்
நிறுவனத்தின் ஆவணங்களில் கூறப்பட்டிருந்தது. (ப.36)
ஹிண்டன்பர்க் கார்மிசல்
ரயில் நிறுவனத்தின் இழப்பு 50.5 மில்லியன் டாலர்களாக மதிப்பிட்டது. அதே காலத்தில் அதானி
என்டர்பிரைசஸ் பெற்ற லாப சதவீதம் 5 ஆகும்.
கார்மிசல் ரயில் நிறுவனம்,
பட்டியலிடப்பட்ட அதானி என்டர்பிரைசஸ் நிறுவனத்திடமிருந்து சொத்துக்களை கையகப்படுத்தியது.(ஆனால்
இதுபற்றிய விவரங்கள், பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் ஆவணங்களில் இல்லை)
அதானி என்டர்பிரைசஸ் நிறுவனம்,
கார்மிசல் நிறுவனத்திற்கு கடன் வழங்கியுள்ளது. (இந்த கடன்களும், நிறுவனத்தின் ஆவணங்களில்
குறிப்பிடப்படவில்லை)
வணிகப் பரிவர்த்தனை செய்த
அதே ஆண்டில், அதானி என்டர்பிரைசஸ் நிறுவனம் பெற்ற சொத்துகளை, மதிப்பை உடனே நிறுவன ஆவணங்களில்
குறிப்பிட்டது. இதன்மூலம் அதன் சொத்து மதிப்பு குறையாமல் பார்த்துக் கொள்ளப்பட்டது.
அதானி குழுமத்திற்கு தொடர்புடைய மூன்று நிறுவனங்கள், வெளிப்பார்வைக்கு எந்த செயல்பாடுகளும் கொண்டவையாக இல்லை. 2015ஆம்
ஆண்டு இந்த மூன்று நிறுவனங்கள் சேர்ந்து அதானி இன்ஃப்ரா நிறுவனத்திற்கு 996 மில்லியன்
டாலர்களை கடனாக கொடுத்துள்ளது. பிறகு அதானி
இன்ஃப்ரா, அதானி என்டர்பிரைசஸ் மற்றும் அதானி பவர் நிறுவனத்தின் உதவி பெறும்
நிறுவனத்திற்கு 47 பில்லியன் டாலர்களை கடனாக வழங்கியது.
2021ஆம் ஆண்டு அதானி குழுமத்தின்
தனியார் நிறுவனமான அதானி இன்ஃப்ரா (இந்தியா), 632 மில்லியன் டாலர்களை கடனாகப் பெற்றது.
அதானி என்டர்பிரைசஸ் நிறுவனம்
231 மில்லியன் டாலர்களையும், அதானி பவர் முந்த்ரா நிறுவனம் 401.5 மில்லியன் டாலர்களையும்
கடனாக அதானி இன்ஃப்ரா நிறுவனத்திற்கு வழங்கின. (ப.176, 179)
ரேவார் இன்ஃப்ராட்ரக்சர்
பி.லிட், கார்டெனியா ட்ரேட் அண்ட் இன்வெஸ்ட்மென்ட், மைல்ஸ்டோன் ட்ரேட்லிங்க்ஸ் ஆகிய
மூன்று நிறுவனங்கள், அதானி இன்ஃப்ரா (இந்தியா)வுக்கு கடன்தொகையாக 996 மில்லியன் டாலர்களை
வழங்கின.
ஹிண்டன்பர்க் அமைப்பு செய்த
ஆய்வில், அதானி குழும நிறுவனங்களுக்குஎப்போது முதலீடு தேவைப்படுகிறதோ அப்போதெல்லாம் மேற்சொன்ன மூன்று
நிறுவனங்கள் வணிகப் பரிவர்த்தனைகளை செய்கின்றன என தெரிய வந்தது. கடன் தொகையை வழங்கிய
நிறுவனங்கள் என்றாலும் கூட இவை பற்றி அதானி இன்ஃப்ரா (இந்தியா) நிதி அறிக்கையில் கூட
குறிப்பிடப்படவில்லை. அதானி என்டர்பிரைசஸ்,
அதானி பவர் முந்த்ரா ஆகிய நிறுவனங்களும் மூன்று
நிறுவனங்கள் பற்றி தங்களது ஆவணங்களில் குறிப்பிடவில்லை.
ரேவார் இன்ஃப்ராஸ்ட்ரக்சர்
நிறுவனம் ஊழியர்கள், வலைத்தளம், வணிகப் பரிவர்த்தனைகள் செய்யாமல் இயங்கி வருகிறது.
இந்த நிறுவனம், அதானி இன்ஃப்ரா (இந்தியா) நிறுவனத்திற்கு 202 மில்லியன் டாலர்களை கடனாக
வழங்கியுள்ளது.
இப்படி கடன் தொகை வழங்கப்பட்டதே
தொடர்புடைய நிறுவனத்தின் ஆவணங்களில் குறிப்பிடப்படவில்லை.
ரேவார் இன்ஃப்ராஸ்ட்ரக்சர்
நிறுவனத்தின் முக்கியமான வணிகம், வெள்ளிக்ட்டிகளை விற்பது என அதன் ஆண்டு அறிக்கையில்
குறிப்பிடப்பட்டுள்ளது. 2021ஆம் ஆண்டு நிதி அறிக்கையில், ரேவார் நிறுவனத்திற்கு அசையா
சொத்துக்களே இல்லையென்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. இதே அறிக்கையில் ஊழியர்கள் இல்லையென்று
கூறப்பட்டுள்ளது.
வணிகப் பரிவர்த்தனைகள்
செய்யாமல், அசையா சொத்துக்கள் இல்லாத நிலையில் எப்படியோ சமாளித்து 202 மில்லியன் டாலர்களை
அதானி இன்ஃப்ரா இந்தியாவுக்கு கொடுக்க முடிந்துள்ளது.
2013ஆம் ஆண்டு தொடங்கி
இப்போதுவரை அதானி குழுமத்தின் தனியார் நிறுவனமொன்றில் தலைவராக இருந்து வரும் லக்ஷ்மிபிரசாத்
சௌத்ரி , ரேவாரின் 50 சதவீத பங்குகளைக்
கொண்டிருக்கிறார். 2022ஆம் ஆண்டு லக்ஷ்மி பற்றி அதானி குழும நிறுவன இயக்குநர் என கௌதம்
அதானி குறிப்பிட்டுள்ளார்.
யோகேஷ் ராமன்லால் ஷா என்பவர்,
ரேவாரின் மீதி 50 சதவீத பங்குகளை வைத்திருக்கிறார். இவர் அதானி குழுமத்தில் மூன்று நிறுவனங்களில் முன்னாள்
தலைவராக இருந்தவர்.
நன்றி
இரா.முருகானந்தம்
டெனர்.காம்
கருத்துகள்
கருத்துரையிடுக