இந்து, தமிழ் ஆகிய கலாசாரங்களின் அழகிய பக்கங்களைக் காட்டுகிறேன் - சுந்தர் வி, தனிக்குரல் கலைஞர்

 






சுந்தர் வி

தனிக்குரல் கலைஞர் சுந்தர் வி






கனடாவின் டொரண்டோ, லண்டன் என அலைந்து திரிந்து மக்களை தனது ஜோக்குகளால் மகிழ்வித்து வருபவர். வி.சுந்தர். சென்னையில் வந்து நிகழ்ச்சிகள் செய்யும்போது அவர் தவறாமல் பார்வையாளர்களிடம் கேட்கும் கேள்வி, என் தமிழ் விளங்குதா என்பதான். தொண்ணூறுகள், இரண்டாயிரத்தின் பாடல்களை அடிப்படையாக கொண்ட நகைச்சுவையை தனிக்குரல் நிகழ்ச்சியின் மையமாக கொண்டுள்ளார். இவர் பால்புதுமையினராவார்.

கடந்த இரண்டு மாதங்களாக இந்தியாவின் பல்வேறு நகரங்களுக்கு சென்று வந்துள்ளார் வி.சுந்தர். மும்பை, பெங்களூரு ஆகிய பெரு நகரங்களில் நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார். அவரிடம் பேசினோம்.

இந்தியாவில் உங்களுடைய தனிக்குரல் நிகழ்ச்சி எப்படி செல்கிறது?

நான் வேறுவகையான சூழல்களில் வளர்ந்து வந்தவன்.. ஆனால் தமிழ் இனக்குழுக்களுக்கு இடையில் உள்ள ஒற்றுமைகளை நான் நிகழ்ச்சியில் குறிப்பிடுகிறேன். அந்த ஒற்றுமைகள்தான் எங்களை ஒன்றாக இணைக்கிறது. இதனால்தான் கனடாவில் இருந்து வந்து பால்புதுமையினர்களை ஒன்றாக இணைத்துப் பார்த்து கருத்துகளைப் புரிந்துகொள்ள முடிகிறது.

நீங்கள் நிகழ்ச்சி செய்வது, அதற்கு வரும் எதிர்வினைகளை எப்படி பார்க்கிறீர்கள்?

கடந்த நான்கு ஆண்டுகளாக லண்டன் நகரில் தங்கித்தான் தனிக்குரல் நிகழ்ச்சிகளை செய்து வருகிறேன். அங்கு தமிழ் காமெடி கிளப் என்ற அமைப்பை உருவாக்கியுள்ளேன். இந்த முறையில் சிறுபான்மையின மக்களுக்கான இடம் கிடைக்கிறது. நான் பால்புதுமையினரின் கதைகளைச் சொல்ல நினைக்கிறேன். இது ஆண்கள் அதிகமாக போட்டியிடும் இடம்.

அண்மையில், நான் தமிழ் பாடல்களை மொழிபெயர்த்த ரீல்ஸ் பார்வையாளர்களிடையே வரவேற்று பெற்றுள்ளது. இந்த வகையில் எனக்கு ரசிகர்களும் அதிகரித்து வருகின்றனர். சென்னை, பெங்களூருவில் இந்த வகையில் நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறேன். ''வேடிக்கையான முறையில் உங்களை மகிழ்விக்க வந்திருக்கிறேன்'' என என்னால் துணிச்சலாக சொல்ல முடிகிறது.

பால்புதுமையினர் பற்றி பேசுகிறீர்கள். நீங்கள் அடிப்படையில் ஈழம் சார்ந்தவர். அந்த தமிழ் அடையாளத்தை உங்கள் அரங்க அமைப்பில் வெளிப்படுத்த நினைக்கிறீர்களா?

தமிழ், இந்து ஆகிய கலாசாரம் ஊடகங்களில் காட்டப்படுவது போல பழைமையானதோ இறுக்கமானதோ அல்ல. நான் அதன் அழகிய விஷயங்களை வெளிக்காட்ட நினைக்கிறேன். அடையாளம் அடிப்படையில் நான் தமிழன்தான். சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளில் நான் இப்படித்தான் என்னை வெளிக்காட்ட நினைக்கிறேன். 

எனது அரங்க அமைப்பு பற்றி பேசினால் அதன் வடிமைப்பில் பால்புதுமையினரின் சிக்கல்களை பேச நினைக்கிறேன். அதற்கு பார்வையாளர்களை சற்று சங்கடப்படுத்தும் விதமான அம்சங்களை சேர்ப்பது உண்மை. அதுவும் மக்கள் அவர்களைப் புரிந்துகொள்வதற்காகத்தான்.

உங்கள் தனிக்குரல் நிகழ்ச்சிகளுக்கு மக்கள் வருவதற்கு தமிழ்பாடல்களை மொழிபெயர்த்ததுதான் காரணமா?

மக்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்றபடி எனது கலைவடிவம் மாறிவிடுவதை விரும்பவில்லை. தமிழ் சினிமா பாடல்களை எனது அரங்க அமைப்பு பிரதிபலிக்க விரும்புகிறேன். இந்த எண்ணங்கள் எனது மூளைக்குள் எப்போதும் ஓடிக்கொண்டே இருக்கின்றன.

நன்றி

இந்து ஆங்கிலம்

மூலம் – சஞ்சனா கணேஷ்

https://tamilculture.com/how-sunthar-v-is-creating-space-for-inclusive-diverse-stories-through-the-tamil-comedy-club

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்