செய்திகளை எழுதும்போது கேட்டுக்கொள்ளவேண்டிய கேள்விகள்!

 











ஒரு விவகாரத்தில் கொள்கை சார்ந்த முடிவுகளை எடுக்கிறீர்கள் என்றால், முதலில் அந்த விஷயத்தை நன்கு புரிந்துகொள்ள முயலுங்கள். அதில் மக்களுக்கு கூறவேண்டிய விஷயம் என்னவென்று பத்திரிகையாளர்கள் இறுதியான முடிவுக்கு வரவேண்டும்.

ஒரு விவகாரம் சரியா, தவறா என்று முடிவெடுப்பது உண்மையான கொள்கை ரீதியான தன்மையைக் குறிக்காது. அந்த விவகாரத்தில் ஏதும் செய்யாமலேயே சரியான முடிவு கிடைத்துவிடும் என்றாலும் கூட அதை நாம் பொருட்படுத்த வேண்டியதில்லை.

ஒரு பிரச்னையை வெவ்வேறு வழிகளில் சரியானது என்று சொல்லும்படி தீர்க்க முடியும் என்றால் கீழ்க்கண்ட கேள்விகளை பத்திரிகையாளர் கேட்டுக்கொண்டு பதில் கண்டறிவது முக்கியம்.

பிரச்னையை இந்த வகையில் தீர்க்கும்போது உலகத்தில் ஏதாவது மாற்றம் ஏற்படுமா?

அரசு, சட்ட விதிகள், மத கோட்பாடுகள் ஏதேனும் பாதிக்கப்படுமா? அவை என்ன மாதிரியான எதிர்வினைகளை வெளிப்படுத்தும்?

அனைத்து மக்களுக்கும் சமரசமாக செல்லும்படியான தீர்வு, நடுநிலையான முடிவு ஏதேனும் இருக்கிறதா?

பெரும்பாலான மக்களுக்கு நன்மை கிடைக்கும்படி என்னால் செயல்பட முடியுமா? எனது செயல்பாட்டால் மக்கள் பயன் பெறுவார்களா?

பிரச்னையை நான் குறுகிய கண்ணோட்டத்தில் அணுகுகிறேனா? முக்கியமான அம்சங்கள் ஏதேனும் தவறவிடப்பட்டுவிட்டனவா?

செய்திக்கட்டுரையில் பாதிக்கப்பட்ட நபராக இருக்கும்போது என்ன முடிவை எடுப்பேன்? நான் எடுக்கும் முடிவால் மக்கள் பாதிக்கப்பட்டால் அடுத்து என்ன செய்வது?

பிறரது பார்வைக்கோணத்தில் இருந்து பிரச்னைகளை அணுகிப் பார்ப்பது.

முடிவெடுக்க அவசரப்படாதீர்கள். செய்திக்கட்டுரைகளை உடனே எழுதாமல் அமைதியாக இருங்கள். எழுதும் செய்தி பற்றி விவாதித்து பேசும்போது அதைப்பற்றிய இன்னொரு கோணம் கூட நமக்கு கிடைக்கலாம்.

பிரச்னைக்கான தீர்வாக ஒரு நடவடிக்கை எடுத்துவிட்டீர்கள் என்றால் அதன் பின்விளைவுகளை எதிர்கொள்ள தயாராக இருப்பது அவசியம். இந்த வகையில் நீங்கள் எழுதும் செய்திக்கட்டுரையின் விளைவுகள் எப்படியிருக்கும்? என வயிற்றில் உருளும் பயத்தைக் கடந்து யோசிக்கவேண்டும். அடுத்தநாள் நாளிதழில் முதல்பக்கத்தில் வரும் செய்தி, பல்வேறு விவாதங்களை உருவாக்குகிறது என்றால் அதை எதிர்கொள்ள நீங்கள் தயாராக இருக்கிறீர்களா? இந்த கேள்வியை நீங்கள் கேட்டுக்கொள்வது அவசியம்.

நன்றி 

தாம்சன் ராய்ட்டர் பவுண்டேஷன் 

ஜிஃப் - டெனர்.காம்

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்