தங்க கடத்தல்காரர் எப்படி இறந்தார் என்று கண்டறியும் காவல்துறை! தங்கம் - வினீத் சீனிவாசன், அபர்ணா
தங்கம் மலையாளம் |
தங்கம் |
தங்கம்
மலையாளம்
வினீத் சீனிவாசன்,
அபர்ணா, கலையரசன்
கேரளத்தில்
இருந்து தங்கத்தை கடத்தி வந்து மும்பையில் விற்று சம்பாதிக்கிறார்கள் என்பதே கதை.
ஒன்லைனாக
கதை நன்றாக இருந்தாலும் சொன்ன விதம் முழுக்க விசாரணை சமாச்சாரமாக இருப்பதால் ஒருகட்டத்தில்
படம் எப்போது முடியும் என்று எண்ணம் தோன்றுகிறது. தவிர்க்கமுடியவில்லை.
தங்கத்தை
நில மார்க்கமாக மும்பைக்கு கடத்தி சென்று விற்று வருவதுதான் வினீத் சீனிவாசன் குழுவின்
திட்டம். ஆனால் ஒருமுறை இப்படி செல்லும்போது தமிழகத்தில் முத்துப்பேட்டை அருகே மாட்டிக்கொள்கிறார்
சீனிவாசன். அதிலிருந்து மீண்டவர் மும்பைக்கு செல்கிறார். ஆனால் சில நாட்களிலேயே அவரிடமிருந்து
எந்த தகவலும் வருவதில்லை. என்ன ஆனது என விசாரிக்கும் வினீத் சீனிவாசனின் நண்பர் குழு
மும்பைக்கு செல்கிறது. பார்த்தால் வினீத் அறையில் தூக்கில் தொங்கி இறந்திருக்கிறார்.
ஆனால் அறையில் போராட்டம் நடந்திருப்பது போல தெரிகிறது. எனவே, மகாராஷ்டிரா போலீசார்,
வினீத்தின் நண்பரிடம், நீங்கள் உண்மையை அறிய நினைத்தால் நாங்கள் உதவுகிறோம். ஆனால்
நாங்கள் கேரளத்திற்கு வந்தால் அந்த செலவை நீங்கள் ஏற்கவேண்டும் என்கிறார். இதை வினீத்தின்
நண்பரும் ஏற்கிறார். உண்மையில் வினீத் எப்படி இறந்தார் என்பதை நோக்கி படம் பயணிக்கிறது.
படத்தில்
அருள், அப்பாஸ், விக்கி என்கிற வெங்கடேஷ் என சில பாத்திரங்கள் சுவாரசியமான இயல்பைக்
கொண்டிருக்கிறார்கள். படத்தின் மர்ம தன்மையை அதிகரிகிறார்கள்தான். மறுக்கவில்லை. ஆனால்
படம் அதைத்தாண்டி பெரிதாக நகரவில்லை.
அப்பாஸ்,
ஹசீனா பாத்திரங்கள் சற்று சுவாரசியத்தை ஏற்படுத்துகிறார்கள் ஆனால் இறுதியில் திருப்புமுனையாக
விஷயம் தெரியும்போது, பொசுகென ஆகிவிடுகிறது.
தங்கம், இப்படி
ஒரு பங்கமாக மாறும் என்று தெரியாமல் போய்விட்டது. கேரளம், தமிழ்நாடு, மும்பை என மூன்று
மாநிலங்களில் கதை பயணிக்கிறது. அந்தந்த மாநிலத்திலுள்ள நடிகர்கள் நிறைவாக நடித்திருக்கிறார்கள்.
ஆனால் திரைக்கதையில் பாத்திரங்களின் தேவை என்பது மிக குறைவு.
ஒருகட்டத்தில்
காரில் செல்லும் அபர்ணா விரக்தியாக ‘’உண்மையைக் கண்டுபிடிச்சு என்னாகப்போகுது, அவர்தான்
இறந்துட்டாரே ‘’ என வசனம் ஒன்றை சொல்லுவார். படத்தின் இயக்குநரிடம் பார்வையாளர்கள்
சொல்ல நினைப்பதும் அதுவேதான்.
அசல் செம்பு
கோமாளிமேடை
டீம்
கருத்துகள்
கருத்துரையிடுக