இடுகைகள்

சீன தொடர் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மனைவியை சாத்தானின் பிள்ளை என உலகமே சொல்ல, அவர்களை எதிர்த்து போராடும் நாயகன்!

படம்
  எவர் நைட் இரண்டாம் பாகம்  சீன தொடர்  முதல் பாகத்தில் இருந்த முக்கியமான நடிகர்களை மாற்றிவிட்டனர். அது முக்கியமான குறைபாடு. அதற்கடுத்து கதை எங்கே போகிறது. எதை நோக்கி நகர்கிறது என்றே தெரியாமல் செல்கிறது. முதல் பாகத்தில் நாயகன் நிங்க் சூவிற்கு பழிவாங்கும் லட்சியம் இருந்தது. ஆனால் இரண்டாம் பாகத்தில் அவரும் என்ன செய்வது என தெரியாமல் தடுமாறுகிறார். அவர் மனைவி சாங் சாங் சொர்க்கத்திற்கு சென்றுவிடுவதால், அவரை மீட்க வேண்டும் என நினைக்கிறார். ஆனால் அதற்கு என்ன செய்வது என தெரியவில்லை. அருகில் இருந்து உதவும் இங்க் பாண்ட் பெண்ணையும் காதலிக்கிறார். ஆனால் அதையும் வெளிப்படையாக கூறமுடியவில்லை. கூடவே நகரைக் காக்கும் வேலை வேறு இருக்கிறது. நகரைச் சுற்றி ஷிலிங் என்ற ஆன்மிக மூடநம்பிக்கை கொண்ட முட்டாள்கள் வேறு படையெடுத்து வருகிறார்கள். நாற்புறங்களிலும் எதிரிகள் சூழ்ந்துள்ள நிலையில் நிங்க் சூ எப்படி நகரைக் காக்கிறான், தனது மனைவியை மீட்க ஏதாவது செய்தானா என்பதை சலிக்க சலிக்க எரிச்சல் ஏற்படுத்தும் விதமாக காட்சி படுத்தியிருக்கிறார்கள். இதில் அடுத்த பாகம் வேறு வருகிறதாம். .... ஐயோடா சாமி.  இரண்டாம் பாகம் முழுக்க ப

குடும்பத்தை அழித்தவர்களை நிதானமாக துப்பறிந்து கொல்ல முயலும் நாயகன்!

படம்
  Decline c drama  7 episodes சீன தொடர் சர்வ சாதாரணமாக 24, 35 என எபிசோடுகளை இழுத்துவிட்டு பார்வையாளர்களை கஷ்டப்படுத்துவது வழக்கம். ஆனால், இப்போது சில தொடர்கள் அதன் மையப்பொருட்களை பொறுத்து எபிசோடுகளை சுருக்கி வருகிறார்கள். கிடைக்கும் பயனாக, நமக்கு டேட்டா சற்று மிச்சமாகிறது.  கதையை, துண்டு துண்டாக கூறி முக்கியமான முழுக்கதையை ஒருவழியாக இறுதியாக சொல்லி முடிக்கிறார்கள். நாயகன் ஒரு துப்பறிவாளன். நன்றாக வாழ்ந்து அழிந்துபோன குடும்பத்தின் வாரிசு. சீன நகரங்களில் நடக்கும் அமானுஷ்ய கொலைகளை ஆராய்ந்து குற்றங்களைக் கண்டுபிடிப்பதே அவனது வேலை. எதற்காக இதை செய்கிறான் என்பது அவனது குடும்பம் படுகொலையான விவகாரம் சம்பந்தப்பட்டது. கதையின் இடையே நாயகன் தனது கடந்தகாலம் பற்றி அவனது தற்காப்புக்கலை தெரிந்த நண்பனிடம் கூறுகிறான். அவன் அந்தளவு நெருக்கமான நண்பனா என்று கேட்டால், அதற்கு பதில் சொல்வது கடினம்.  ஒரு நாடக குழு நகரத்திற்கு வருகிறது. அதில் உள்ள பதினொரு பேர்களில் ஒன்பது பேர் கொல்லப்பட்டுவிடுகிறார்கள். இரண்டுபேர் மட்டும் காணவில்லை. இதன் பின்னாலுள்ள மர்மத்தை நாயகன் சூ சென்க்ஸி கண்டுபிடிக்கிறான். இதற்கு அவனது தற

ஹிப்னாடிசத்தால் தற்கொலையைத் தூண்டும் தொழிலதிபரை தடுக்கும் போலீஸ் அதிகாரியும், ஹிப்னாடிச வல்லுநரும்! - டிசையர் கேட்சர்

படம்
  டிசையர் கேட்சர் - சீன டிவி தொடர் டிசையர் கேட்சர் - சீன டிவி தொடர் டிசையர் கேட்சர் சீன டிவி தொடர் 24 எபிசோடுகள் ராகுட்டன் விக்கி தலைப்பு நன்றாக இருக்கிறதென டிவி தொடரை தேர்ந்தெடுத்தால் அது உங்களை பாடாய்படுத்துமே அந்த ரகம்தான், டிசையர் கேட்சர் டிவி தொடர். சீனாவில் நிறையப் பேர் திடீரென ஜோம்பி போல நடந்துகொள்கிறார்கள். அதாவது முதல் காட்சியில் ஒருவர் ஏதோ போதையில் இருப்பது போல சாலையில் நடந்து வருகிறார். பறவை சிறகடிக்கும் ஒலி, இசை, மக்களின் பேச்சு இதெல்லாவற்றையும் போதையில் இருப்பவரின் பார்வையில் காட்டுகிறார்கள். திடீரென மணிக்கூண்டு திறந்து குயில் வெளியே வந்து கூவ, போதை மனிதர் வெறிபிடித்தது போல மக்கள் கூட்டத்தில் ஒருவரைப் பிடித்து கழுத்தை கடிக்கிறார். பலரையும் அடித்து உதைக்க முயல்கிறார். எனவே, காவலர் துப்பாக்கியால் அவரை சுட்டுக்கொல்கிறார். இதைப்பற்றி மனோவசிய ஆய்வாளர்கள் மாநாட்டில் பேசுகிறார்கள். அதில்தான் லூ ஃபெங்பிங் என்ற மனோவசிய ஆய்வாளர் அறிமுகமாகிறார். ஆம். அவர்தான் நாயகன். இன்னொருவர், மாநாட்டில் ஆர்வம் இல்லாமல் தூங்கி வழியும் காவல்துறை அதிகாரி லுவோ ஃபெய். ஹிப்னாடிச கொலைகள் நட

மறைந்துள்ள பாலைவன நகரின் பொக்கிஷத்தை எடுக்க நடக்கும் போராட்டம்! - சாண்ட் சீ - சீன தொடர்

படம்
  சாண்ட் சீ - பிரதர் ஹாவோ   சாண்ட் சீ (2018) சீன டிவி தொடர் 53 எபிசோடுகள் ராகுட்டன் விக்கி ஆப் இயக்குநர்கள் – லீ ஸே லூ, மாவோ குன் யூ, சூ ஷி திரைக்கதை எழுத்தாளர்கள் – ஸாங் யுவான் ஆங்க், டாங்க் ஷி சென் அம்மா இல்லாமல் அப்பாவின் அடி, உதைகளை வாங்கி வளர்கிறான் லீ சூ, பல்கலைக்கழக தேர்வை எழுதவெல்லாம் விருப்பமில்லாத மனநிலை. இவனுக்கு இருக்கும் ஒரே தோழன், சூ வான். பணக்காரன். இவன் நன்றாக படிப்பவன். ஆனால் பெரும்பாலான நேரங்களில் தனது பள்ளியில் மாணவிகளை படமெடுத்து வைத்து, யாரோடு டேட்டிங் போகலாம் என யோசிப்பவன்.   அடுத்து, ஹாவோ. இவன் பள்ளியில் படிப்பவனல்ல. இறந்தவர்களுக்கு சடங்கு செய்யும் நிறுவனத்தை ஹாவோவின் பாட்டி நடத்திக் கொண்டிருக்கிறார். அவருக்கு ஹாவோ ஆதரவாக இருக்கிறான். இவனது வேலை சட்டவிரோதமாக போதைப்பொருட்களை விற்பது.   பிறகு பணக்காரன் பள்ளி மாணவனான சூ வானை ஏதோ ஒருவகையில் மிரட்டி காசைப் பிடுங்குவது… இந்த மூன்றுபேர்களின் நட்புதான் தொடரின் முக்கியமான அம்சம். இது கடந்த காலத்தில் நட்பாக இருந்த அயர்ன் ட்ரையாங்கில் என்ற மூவரை நினைவுபடுத்தும் விதமாக உள்ளது.   பள்ளி மாணவன் லீ சூ, ஒர

தீயவாள் பயிற்சிமுறையைக் கற்க போட்டிபோடும் பேராசைக்காரர்கள்! - தி ஸ்மைலிங் ப்ரவுட் வாண்டெரர்

படம்
  ஸ்மைலில் ப்ரவுட் வாண்டரெர் சீன தொடர் மாண்டரின் மொழித்தொடர் தமிழில்.. எம்எக்ஸ்பிளேயர் தொன்மை சீனாவில் உய், ஓஷன், பௌத்தம் என பல்வேறு மதங்களைக் கடைபிடிக்கும் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இதில் அனைத்து தலைவர்களையும் சந்தித்துப் பேசி முடிவெடுக்கும் திறமை உய் பள்ளிக்கு உண்டு. பிற பள்ளிகள் அனைத்தும் உய் பள்ளித் தலைவரின் கட்டளைகளை கேட்பார்கள். இதன் அனைத்து பள்ளி தலைவர்களும் கலந்துபேசி தங்களது பொது எதிரிகளை சமாளிப்பார்கள். இவர்களது பொது எதிரி, மந்திர சக்திகளை பயன்படுத்தும் அசுரர்கள். இவர்கள் டாபோ எனும் கலையைக் கற்றவர்கள்.  ஒரே பள்ளி ஒரே தலைமை என்ற கொள்கையை உய் பள்ளி தலைவர் எடுக்கிறார். இதற்காக கூலிப்படைகளை அமர்த்தி தனது கொள்கைகளுக்கு ஒத்துவராத பள்ளி தலைவர்களை கொல்கிறார். அவர்களின் பள்ளி கற்றுக்கொடுக்கும் தற்காப்புக்கலை நூல்களையும் திருடி வந்து பயிற்சி எடுக்கிறார். இதெல்லாம் தாண்டி அவருக்கு தீராத வேட்கையை ஏற்படுத்துவது தீயவாள் பயிற்சி எனும் வாள்சண்டை முறை.  இதனை ஒருவர் கற்றுவிட்டால் பிற வாள்பயிற்சி முறைகளை எளிதாக உடைக்க முடியும். பிரிந்துள்ள பள்ளிகளை ஒன்றாக இணைத்து உய் பள்ளி என்ற பெயரில் அதன

ஸிசோபெரேனியா பிரச்னை கொண்ட மருத்துவப்படிப்பு மாணவன் கண்டுபிடிக்கும் உளவியல் மர்மங்கள்!

படம்
  ஜர்னி அக்ராஸ் தி நைட் சீன டிவி தொடர்  26 அத்தியாயங்கள்  லி ஜியா, சீனாவிலிருந்து ஹாங்காங்கிற்கு உளவியலாளர் படிப்பை படிக்க வருகிறார். அவர் அப்படி படிக்க வர அவரது குடும்பம் முக்கியமான காரணம். அவரது அம்மாவிற்கு ஸிசோபெரேனியா இருக்கிறது. அந்த நோய் வந்துதான் அவர் மனநிலை சிக்கலாகி இறக்கிறார். அடுத்து இதே பிரச்னையில் அவரது அண்ணன் கூட மாட்டிக்கொள்கிறார். எல்லோருமே இருபத்து நான்கு வயதில் மனநல பிரச்னையில் மாட்டிக்கொள்கிறார்கள். லி ஜியாவிற்கு இன்னும் சில மாதங்களில் 24 வயதாகப்போகிறது.  தனது பிரச்னையை ஹாங்காங்கிலுள்ள பேராசிரியருக்கு விளக்கி கூற அவர் லி ஜியாவுக்கு ஸ்காலர்ஷிப் வழங்கி படிப்பில் சேர்த்துக்கொள்கிறார். லி ஜியா படிப்பில் இணைகிறார். ஆனால் தங்குவதற்கு ஹாஸ்டலில் இடம் கிடைக்கவில்லை. அப்போதுதான் கல்லூரி வளாகத்தில்   உளவியல் பிரச்னை கொண்ட ஒருவரிடமிருந்து இளம்பெண் ஒருத்தியைக் காப்பாற்றுகிறார். செங்குவான் சாசா எனும் அவள், தனக்கு தெரிந்த இடத்தில் வாடகைக்கு இடம் இருக்கிறது. மிகவும் குறைந்த வாடகை என்று சொல்லி வினோதமான ஆட்கள் உள்ள இடத்தில் அறையைக் காட்டுகிறாள். அப்போதுள்ள சூழலில் லி ஜியாவுக்கும் வேறு

குடும்பத்தை, காதலை காப்பாற்றுவதை விட நாடே முக்கியம்! ஸ்டோர்ம் ஐ - சீன தொடர்

படம்
              ஸ்ட்ரோம் ஐ சீன தொடர் Director: Yu Bo (于波) Screenwriter: Liang Zhen Hua , Jia Chang An , Jiang Da Qiao யூட்யூப் தீவிரவாத அமைப்புகளுக்கு விற்கப்படும் கனிம விற்பனையை உளவு அமைப்புகளை எப்படி கண்டுபிடித்து தடுக்கின்றன என்பதுதான் மையக்கதை . தேசிய பாதுகாப்பு , நாடு என்று வந்துவிட்டால் தனிப்பட்ட நபர்களுக்குள் காதலோ , நட்போ இருக்கக்கூடாது என உறுதியாக வலியுறுத்தும் தொடர் . சீனாக்காரர்கள் என்பதால் இப்படி கூறப்பட்டிருக்கலாம் . தேசிய உளவு அமைப்பின் தலைமையகம் ( பெய்ஜிங் ), ஜின்குவா என்ற மருத்துவ உபகரணங்களை தயாரிக்கும் நிறுவனத்தை கண்காணிக்கிறது . இதன் வணிகம் சார்ந்த நடவடிக்கைகள் சந்தேகமாக இருப்பதால் , தனது இரண்டு திறமையான அலுவலர்களை சாங்குவான் நகருக்கு அனுப்புகிறது . சாங்குவான் நகரில் உள்ள உளவு அமைப்பின் கிளைப்பிரிவு உளவாளி ஒருவரை பின்தொடர்கிறது . ஆனால் அந்த முயற்சி தோல்வியில் முடிகிறது . ஆனால் அந்த உளவாளியை பின்தொடர்ந்து எங்கே இருக்கிறது என கண்டுபிடிப்பதில் மேற்சொன்ன இரண்டு திறமைசாலிகள் உதவுகின்றனர் . கிளை அமைப்புடன் தலைமையக ஆட்கள் இருவரும்

பள்ளிக்காலத் தோழியைத் தேடி அலையும் கஞ்சத்தனமான தொழிலதிபரும், பிடிஎஸ்டி காதலியும்! - மை கேர்ள்

படம்
              மை கேர்ள் சீன டிவி தொடர் எல்எஸ் என்ற அழகுசாதன நிறுவனத்தை நடத்தும் கஞ்சத்தனமான தொழிலதிபருக்கு பிடிஎஸ்டி பிரச்னை கொண்ட காதலி கிடைக்கிறார் . இதனால் அவரது வாழ்க்கை என்னவானது என்பதுதான் கதை . கொரிய , ஜப்பானிய , சீன தொடர்களில் சீரியசாக செல்லும் காட்சிக்ளில் கூட ஜிலீர் காமெடி வந்துவிடுகிறது . இதனால் , தொடரை பெரிதாக வருத்தப்பட்டு பார்த்து கண்ணீர் சிந்தவேண்டியதில்லை . எது நடந்தாலும் லாஸ்டில் சுபமாக முடிச்சுருவாங்கப்பா என நிம்மதியாக பார்க்கலாம் . மை கேர்ள் தொடரும் அதற்கு விதிவிலக்கல்ல . ஷென் யி , மென் குயி என்ற இரண்டு பள்ளிப்பருவத் தோழன் , தோழி இருக்கிறார்கள் . இவர்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்துகொள்கிறார்கள் . அப்போது ஷென் யி வறுமையான நிலையில் இருக்கிறார் . இதனால் பள்ளி பேக் கூட வாங்கமுடியாத நிலை . அவரது அம்மா , தந்தையை விட்டு பிரிந்து வந்து தனியாக வாழ்கிறார் . அவர் நோயாளியும் கூட . ஷென் யிக்கு மதிய உணவு கூட ஒரே மாதிரியாகத்தான் வீட்டில் செய்து தருகிறார்கள் . அவனுக்கு தனது தட்டில் இருந்து உணவை எடுத்து கொடுக்கிறாள் மென் குயி . இப்படித்தொடரும் இவர்கள