குடும்பத்தை அழித்தவர்களை நிதானமாக துப்பறிந்து கொல்ல முயலும் நாயகன்!

 










Decline


c drama 


7 episodes


சீன தொடர் சர்வ சாதாரணமாக 24, 35 என எபிசோடுகளை இழுத்துவிட்டு பார்வையாளர்களை கஷ்டப்படுத்துவது வழக்கம். ஆனால், இப்போது சில தொடர்கள் அதன் மையப்பொருட்களை பொறுத்து எபிசோடுகளை சுருக்கி வருகிறார்கள். கிடைக்கும் பயனாக, நமக்கு டேட்டா சற்று மிச்சமாகிறது. 


கதையை, துண்டு துண்டாக கூறி முக்கியமான முழுக்கதையை ஒருவழியாக இறுதியாக சொல்லி முடிக்கிறார்கள். நாயகன் ஒரு துப்பறிவாளன். நன்றாக வாழ்ந்து அழிந்துபோன குடும்பத்தின் வாரிசு. சீன நகரங்களில் நடக்கும் அமானுஷ்ய கொலைகளை ஆராய்ந்து குற்றங்களைக் கண்டுபிடிப்பதே அவனது வேலை. எதற்காக இதை செய்கிறான் என்பது அவனது குடும்பம் படுகொலையான விவகாரம் சம்பந்தப்பட்டது. கதையின் இடையே நாயகன் தனது கடந்தகாலம் பற்றி அவனது தற்காப்புக்கலை தெரிந்த நண்பனிடம் கூறுகிறான். அவன் அந்தளவு நெருக்கமான நண்பனா என்று கேட்டால், அதற்கு பதில் சொல்வது கடினம். 


ஒரு நாடக குழு நகரத்திற்கு வருகிறது. அதில் உள்ள பதினொரு பேர்களில் ஒன்பது பேர் கொல்லப்பட்டுவிடுகிறார்கள். இரண்டுபேர் மட்டும் காணவில்லை. இதன் பின்னாலுள்ள மர்மத்தை நாயகன் சூ சென்க்ஸி கண்டுபிடிக்கிறான். இதற்கு அவனது தற்காப்புக்கலை அறிந்த வாள்வீரன் உதவுகிறான். அவன்தான் விசாரணைக்கு உதவும் கான்ஸ்டபிள். இந்த வாள் வீரனுக்கு அதிக வசனங்கள் கிடையாது. பெரும்பாலும், மனதில் உணர்ச்சிகளை அடக்கி வைத்துக்கொண்டு செயல்களாக செய்வதுதான் அவனது பாணி. 

அவனுக்கும் சூ சென்க்ஸிக்கும் நினைத்துப் பார்த்து சந்தோஷப்பட ஒரு கடந்த காலம் இருக்கிறது. ஆனால் சூ சென்க்ஸிக்கு நடந்த விபத்து காரணமாக, கடந்தகாலம் அவனுக்கு மறந்துபோகிறது. அவனது ஒட்டுமொத்த குடும்பமுமே குறிப்பிட்ட கறுப்பு உடை அணிந்த படுகொலையாளர்களால் கொல்லப்படுகிறது. அந்த கொலையாளிகளை சூ சென்க்ஸி கண்டுபிடிக்க முயல்கிறான். ஆனால் படுகொலையைப் பார்த்த அதிர்ச்சி காரணமாக நினைவுகள் அழிந்துபோய்விடுகிறது. அவ்வப்போது மெல்ல அடையாளங்கள் நினைவுக்கு வருகின்றன. தனது புத்திசாலித்தனத்தை வைத்து, வாள் வீரனின் திறமை மூலம் எதிரிகளை எப்படி பழிவாங்கினான் என்பதே தொடரின் இறுதிப்பகுதி. 


கதையில் சூ சென்க்ஸி நல்ல புத்திசாலி. ஆனால், வாள் வித்தையோ, தற்காப்புக்கலையோ அறிந்தவன் அல்ல. அவனை பின்தொடரும் ஒரு உதவியாளர் இருக்கிறான். அவன் சற்று முட்டாள். ஆனால் சூவை விட்டுக்கொடுக்காத விசுவாசி.டான்யாங் நகரில்தான் கொலை வழக்கு தொடர்பாக சூ, பாய் என்ற கான்ஸ்டபிளை சந்திக்கிறான். அவன்தான் அதிகம் பேசாத வாள் வீரன். சூவுக்கும், பாய்க்கும் சந்தித்த சில நாட்களிலேயே சொல்ல முடியாத நெருக்கம் உள்ளது தெரிகிறது. அதாவது, இருவரும் ஒருவரையொருவர் விட்டுக்கொடுக்காத ஆட்கள். இருவருமே உண்மையைக் கண்டறிய போராடுபவர்கள். பாய், விதிகளை மீறக்கூடாது என்பான். சூவைப் பொறுத்தவரை விதிகளே மீறப்படுவதற்காகத்தான் என்று சொல்பவன். இந்த இருவரும் சேர்ந்து கொலைவழக்குகளை விசாரித்தால் அதைவிட களேபரம் என்ன இருக்கப்போகிறது? விசாரணை செய்யும் சம்பவங்களில் நகைச்சுவையை நுழைத்திருக்கிறார்கள். 


சூவுகு தற்காப்புக்கலை தெரியாதே தவிர விஷத்தை எப்படி பயன்படுத்துவது என அறிந்திருக்கிறான். அதை வைத்து தனது எதிரிகளை செயலிழக்க வைக்கிறான். கோழைத்தனமாக முறைதான். ஆனால், அதுவே அவனது உயிரைக் காப்பாற்றுகிறது. பாய், அவனது வளர்ப்புத்தந்தை சொல்லும் கட்டளைகளை பின்பற்றுகிறான். அவரோ, சூ சென்க்ஸியை கொல்லச்சொல்லி அச்சுறுத்துகிறார். பாய்க்கு அதில் விருப்பமில்லை. எனவே, சூவை டான்சியான் நகரில் இருந்து வெளியேற்ற முயல்கிறான். அவன் ஏன் அவனைக் காப்பாற்ற முயல்கிறான் என்பதற்கு பின்னணிக் கதை ஒன்றுண்டு. அகவயமானவன், வெளிவயமானவன் என குண இயல்பு கொண்டவர்கள் நண்பர்களாக இருந்தால் எப்படி இருக்கும்? ஒரே குழப்பமாகத்தானே அதுதான் கதையில் நடக்கிறது. 


தொடரி்ல் வாள் சண்டைகள் சற்று தீவிரமாக இருந்திருக்கலாம். எதிலும் தீவிரமோ, நுட்பமோ இல்லை. நகரத் தலைவர்தான் பேராசை கொண்ட வில்லன் சரி. ஆனால் அவருக்கான உருப்படியான ஒரு காட்சி கூட இல்லை. சூவின் அக்காவுக்கும் பாத்திரம் உண்டு. அவர் எப்படி பிழைத்து வளர்ந்தார், என்ன செய்தார் என்பதைக் கூறுவதில்லை. பாத்திரங்களின் பின்னணியை சற்று கூறியிருந்தால் தொடர்படுத்திக்கொள்ள இயல்பாக இருந்திருக்கும். அனைத்து பாத்திரங்களுமே மர்மத்தன்மையுடன் இருக்கவேண்டும் என தொடர் இயக்குநர் நினைத்திருக்கிறார். ஆனால் அது தொடரின் சுவாரசியத்திற்கு உதவவில்லை.


நாடக குழுவில் அக்லி நைன் என்பவன் வில்லனாக காட்டப்படுகிறான். ஆனால் அவன் ஆபத்தில் உள்ள பெண்ணை காப்பாற்ற நினைக்கிறான். அவளை நகரில் பலம் வாய்ந்த ஒருவனின் படுக்கைக்கு அனுப்பி தங்களை காத்துக்கொள்ள நினைப்பவர்களை(நாடக குழுவினர்) சகித்துக்கொள்ள முடியாமல் கொல்கிறான். இதில் தவறென்ன இருக்கிறது? தனது குழுவில் உள்ள பெண்ணை பலாத்காரம் செய்யும் ஆட்களைக் கண்டுபிடித்து விஷம் வைத்துக் கொல்கிறான். அவனை குற்றவாளி என்று கூறினால், அவளை கடத்திப்போய் ஆபாசமாக படம் வரைந்தவன், கும்பல் பலாத்காரம் செய்தவர்கள் உத்தமர்களா? 

அதிகாரத்தைப் பயன்படுத்தி தன் மகன் செய்த பலாத்காரத்தை அவனது தந்தை மறைக்க முயல்கிறார். அதன் பெயர் என்ன? தொடரின் இயக்குநர் இதுபோல கேள்விகளுக்கு எந்த பதிலும் கூறவில்லை. நாடக நடிகைதானே, அவளால் எதையும் செய்யமுடியும் என தொடரில் வரும் பாத்திரம் பேசுவதைப் போலவே அவரும் நினைக்கிறார் போல. 


சுமாரான கதை. எடுத்தவிதம் அதைவிட மோசம்


கோமாளிமேடை டீம்


The "Shi Wei Map", which records the burial place of the treasure, appears from nowhere, leading to a lot of turmoil in Jianghu and begins the fight, of various forces, to find it. Soon, two bizarre events take place - the disappearance of an opera troupe and piles of bones appearing in the Shangtang River. Detective Su Cheng Xi, constable Sui Han Bai and assassin Zuo Han Qin, starts to get interested in the whole case. Especially since the mythical map and the bones, seem to be related in a strange way.


~~ Adapted from the webnovel "Jiang Hu Shao Nian Jue " (江湖少年诀) by Zi Mo Jian (自磨剑). E

கருத்துகள்