தாய்க்கும், குழந்தைக்கும் உள்ள பாச உணர்வு பற்றிய ஆராய்ச்சி
harry harlow
ஒரு தாயுக்கும் குழந்தைக்கும் இடையிலுள்ள பாசத்திற்கு அடிப்படைக் காரணம் என்ன? குழந்தை பிறந்தவுடன் அதற்கென உணவு தேவைகள் உள்ளன. அதை அம்மா அருகிலிருந்து தீர்க்கிறார்கள். இப்படித்தான் பாசம் என்ற உணர்வு உருவாகிறது. இதை ஒட்டுதல் என்று கூறலாம். இதை பல உளவியல் ஆய்வாளர்கள் கூறினார்கள். ஆனால் ஹாரி இதை வேறுபடுத்தி பார்த்தார். அதாவது, அவர் செய்த சோதனையில் தாய் குழந்தைக்கு உணவே தரவில்லை என்றாலும் கூட பாசம், ஒட்டுதல் உருவாகிறது என நிரூபித்தார்.
இந்த ஆய்வில் அவர் மக்காவ் இன குரங்கை பயன்படுத்தினார். ஒரு கூண்டில் இருந்த குரங்கிற்கு உணவுதேவைகள் எளிதாக கிடைக்கும்படி செய்தார். இன்னொரு கூண்டில் இருந்த குரங்கிற்கு தாய் குரங்கு உணவு ஊட்டவில்லை. அது துணியிலான குரங்கு பொம்மை. அதை குட்டி மக்காவ் குரங்கு, தாய் என நினைத்துக்கொண்டது. உணவு தரவில்லை என்றாலும் குட்டி குரங்கிற்கு ஆபத்து ஏற்படும்போது, துணியில் செய்த பொம்மையை அணைத்துக்கொண்டது. இந்த வகையில் அதற்கு துணிக்குரங்கு தாய் போல மாறியது.
ஹாரி செய்த ஆய்வில் தாய், குழந்தைக்கு இடையிலான உறவு என்பது உணவு தேவைகள் மட்டும் சார்ந்தது அல்ல என்பது நிரூபணமானது. உடல்ரீதியான தொடுதலே கூட குட்டிக்கு போதுமானதாக இருந்தது. ஹாரியின் ஆய்வுமுடிவுகள் வெளியானபிறகு, பெற்றோரின் குழந்தை வளர்ப்பு முறையே கூட பல்வேறு மாற்றங்களை அடைந்தது.
2
francois dolto
பெற்றோர்கள், குழந்தைகளை பெரும்பாலும் அவர்களின் கருத்துகளுக்கு ஆசைகளுக்கு கீழ்படிபவர்களாகவே நடத்திவருகிறார்கள். இதில் விதிவிலக்காக மிகச்சிலர் இருக்கலாம். பெரும்பாலானவர்கள் தங்கள் பிள்ளைகளின் இயல்பை அறிந்து அதற்கேற்ப கல்வியை வழங்குவதில்லை. அவர்கள் சுதந்திரமான கருத்துக்களோடு வளரவும் ஆதரவளிப்பதில்லை. இந்த கருத்துகளை உளவியலாளர் டால்டோ தனது சொந்த வாழ்க்கை அனுபவத்திலிருந்து அறிந்திருந்தார்.
மரபான கல்வி அனைத்து பிள்ளைகளுக்கும் பொருந்துவதில்லை. அது அவர்களை இறுக்கமானவர்களாக மாற்றுகிறது என டால்டோ கருதினார். பள்ளி, வீடு என இரண்டிலும் கீழ்ப்படிவது, போல செய்தல் ஆகியவற்றையே பிள்ளைகளை செய்யவைப்பது தவறானது. அது அவர்களின் சுதந்திரமான எதிர்காலத்தை கேள்விக்குறியாக்குகிறது என டால்டோ விமர்சித்தார். தற்போது பெரியவர்களாக உள்ள பெற்றோர், ஆசிரியர்கள் அவர்களின் சிறுவயதில் அனுபவங்களைப் பெற்றவர்களாக இருப்பதில்லை. பின்னாளில்தான் அவர்கள் அனுபவங்களை பெற்றிருக்கிறார்கள். எனவே, அவர்கள் சிறுபிள்ளைகளுக்கு முன்மாதிரியாக வழிகாட்டியாக இருந்து அனுபவங்களைப் பெற உதவ வேண்டும். மற்றபடி அவர்களின் கல்வி, இயல்பாகவே சுதந்திரமாக கட்டற்று நடைபெறவேண்டும் என டால்டோ கூறினார்.
கருத்துகள்
கருத்துரையிடுக