டெக் உலகில் மாற்றுப்பாலினத்தவர்கள் காலூன்ற உதவுபவர்! - ஆஞ்செலிகா ரோஸ்
john hope bryant
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள காம்டனில் பிறந்தவர். அன்றைய நாளில் அங்கு போதைப்பொருட்கள் விற்பனை கொடிகட்டி பறந்தது. அதுதான் பெரும்பான்மையானவர்களுக்கு சம்பாதிக்கும் வழிமுறையும் கூட. ஜானுக்கு பத்து வயதாகும்போது, அவர் படிக்கும் பள்ளிக்கு தொழிலதிபர் ஒருவர் வந்தார். நேர்மையான தொழில் செய்து சம்பாதிப்பதை அவர் மூலமே ஜான் அறிந்து நம்பிக்கை கொண்டார். இன்று 57 வயதானாலும் கூட அந்நாளை நினைவுகூர்ந்து பேசினார். வறுமையான நிலையில் உள்ள மக்கள், தங்களது தொழில் ஐடியாவை நிஜமாக்க நடைமுறையில் சாத்தியப்படுத்த முதலீட்டை ஈர்க்க முடியும். வாய்ப்புகளைப் பெறமுடியும். அதற்கு ஜான் உதவுகிறார்.
1992ஆம் ஆண்டு, ஜான் ஆபரேஷன் ஹோப் என்ற தன்னார்வ அமைப்பைத் தொடங்கினார். இந்த அமைப்பு, ஏழை மக்களுக்கு நிதி சார்ந்த கல்வியை இலவசமாக வழங்குகிறது. வறுமையில் வாடும் இனக்குழுவுக்கு தொழில் மூலம் முன்னேறுவது எப்படி என வழிமுறைகளை ஹோப் அமைப்பு கூறுகிறது. அமெரிக்காவில் உள்ள ஆயிரம் இடங்களில், 300 அலுவலகங்களில் ஹோப் அமைப்பு தனது பயிற்சிகளை வழங்கியுள்ளது. 2020ஆம் ஆண்டில் ஷாப்பிஃபை அமைப்புடன் இணைந்து கருப்பின தொழிலதிபர்களுக்கு வணிகத்தை தொடங்குவதற்கு, வளர்ப்பதற்கான கருவிகள், உதவிகள் பற்றிய திட்டத்தை தொடங்கியுள்ளது. 2030ஆம் ஆண்டு ஒரு மில்லியன் கருப்பின தொழிலதிபர்களை உருவாக்குவதே ஹோப் அமைப்பின் திட்டம். பொருளாதார சுதந்திரமே உண்மையான சுதந்திரம். மற்ற சுதந்திரங்கள் எல்லாம் உங்களிடம் இருந்து பிடுங்கிவிட முடியும் என்றார் ஜான்.
-alana semuels
2
angelica rose
சாதாரண ஆட்களை நம்பி வேலை கொடுப்பதே கடினம். இதில் மாற்றுப் பாலினத்தவரை யார் கண்டுகொள்வார்கள்? மத அடிப்படைவாதம் மெல்ல தலைதூக்கிக்கொண்டிருக்கும் இந்தியாவில் மாற்றுப்பாலினத்தவர்களை அடித்து கொல்லாமல் இருந்தாலே அதிசயம் என்ற நிலைதான் உள்ளது. இதில் சற்றே மாறுபட்டு தனித்து தெரிகிறார் ரோஸ். தான் உயர்ந்தால் மட்டும் போதாது. தான் சார்ந்த இனக்குழுவும் உயரவேண்டும் என நினைத்தார் ஆஞ்செலிகா ரோஸ். 2001ஆம் ஆண்டு மாற்றுப்பாலினத்தவர் ஒருவர், வலைத்தளம் ஒன்றை வடிவமைத்து தர முடியுமா என்று கேட்டபோது, சரி என்றார். ஆனால் இணையத்தில் உள்ள கருவிகளைப் பயன்படுத்தி வலைத்தளத்தை உருவாக்கிக் கொடுத்துவிட்டார். உண்மையில் அவருக்கு அதுவரை எப்படி கோடிங் அமைத்து வலைத்தளத்தை உருவாக்குவது என தெரியாது. ஆனால் இணையத்தில் உள்ள பொருட்களை வைத்து வேகமாக கற்றுக்கொண்டேன் என்றார். நம்ப முடிகிறதா? சவால்களையே தனது கற்கும் வாய்ப்பாக பயன்படுத்தி வென்று வருகிறார்.
2014ஆம் ஆண்டு, ட்ரான்ஸ்டெக் என்ற தன்னார்வ அமைப்பைத் தொடங்கி மாற்றுப்பாலினத்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் உதவத் தொடங்கினார். இந்த அமைப்பு மாற்றுப்பாலினத்தவர்களை லட்சியமாக கொண்டாலும், ஒடுக்கப்படும் பிற இனக்குழுவைச் சேர்ந்த மக்களையும் தவிர்க்கவில்லை. அவர்களுக்கும் தேவையான உதவிகளை, வள ஆதாரங்களை வழங்கிவருகிறது. மாற்றுப்பாலினத்தவர், பெண்கள், ஒடுக்கப்படும் சிறுபான்மையின மக்கள் என அனைவரும் ட்ரான்ஸ்டெக்கின் கீழ் ஒன்றாக அணிதிரளவேண்டும் என்றார் ரோஸ். ஆனால் இந்த பயணம் எளிதாக இருக்கவில்லை. வணிக மாதிரி, திட்டம், ரோஸின் தலைமைத்துவம் என நிறைய கேள்விகளை மாற்றுப்பாலினத்தவர்கள் எழுப்பினார்கள். அதற்கான நேர்மையான பதிலாக ட்ரான்ஸ்டெக், கூகுள், நாசா, மேலும் பல பெருநிறுவனங்கள், கல்வி அமைப்புகள், நிதி நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது. நிறைய சமயங்களில் என்னுடைய வங்கிக்கணக்கில் பணம் இருக்காது என்பது உண்மைதான். ஆனால் ட்ரான்ஸ்டெக்கின் செலவுகளை சரியாக தீர்த்துவிடுவேன் என்றார் ரோஸ். அந்த நம்பிக்கைதான் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு நம்பிக்கைச் சுடராக உள்ளது.
-மோய்சஸ் மென்டிஸ் 2
டைம் வார இதழ்
கருத்துகள்
கருத்துரையிடுக