இடுகைகள்

கேட்ஜெட்ஸ் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கேட்ஜெட்ஸை மழையில் காப்பாற்றுவது எப்படி?

படம்
மிஸ்டர் ரோனி மழைநாட்களில் என்னையும் கேட்ஜெட்ஸையும் எப்படி பாதுகாப்பது? மான் மார்க் குடைகளை பாத்திரக் கடைகளில் கேட்டு வாங்குங்கள். பட்டன்களை நன்கு அழுத்திப்  பார்த்துவிட்டு காசு கொடுங்கள். இதுதான் அடிப்படையானது. மற்றபடி ரெயின்கோட், வாட்டர் ப்ரூஃப் ஷூக்கள் போன்றதெல்லாம் உங்கள் பட்ஜெட் சம்பந்தப்பட்ட விஷயங்கள். எது சாத்தியமோ அதனை வாங்குங்கள். இவையெல்லாம் மழை, நீர் இறைத்துச் செல்லும் கார்கள் ஆகியவற்றையும் கவனத்தில் கொண்டு வாங்க வேண்டும். நன்றி - டி3 இதழ்

புத்தக விரும்பிகளுக்கான கேட்ஜெட்ஸ் மற்றும் பொருட்கள்!

படம்
டெக் விரும்பிகளுக்கு மட்டும்தான் உலகில் பல்வேறு கேட்ஜெட்ஸ் கிடைக்கும் என்றில்லை. புத்தகம் விரும்பிகளுக்கான கேட்ஜெட்ஸ் இவை.  BOOKMARK NECKLACE; $100 பார்க்க அழகான நெக்லெஸ் போல இருந்தாலும் இதன் மூலம் வாசிக்கும் புத்தகங்களின் பக்கங்களை நீங்கள் புக்மார்க் செய்து வைத்துக்கொள்ள முடியும். விலையைப் பற்றி கவலைப்பட மாட்டேன் என்றால் உங்களுக்கு இது சரியான கேட்ஜெட்தான்.  FOLDABLE BOOK LAMP; $28 மடித்து வைத்தால் புத்தகம் போலவே இருக்கும். யுஎஸ்பி மூலம் மின்சாரம் கொடுத்தால் புத்தக பக்கங்களாய் விரிந்து உங்களுக்கு வெளிச்சம் கொடுக்கும். எல்லாம் எல்இடி மாயம்தான். அமேசானில் கிடைக்கும். வாங்கி வீட்டில் ஒளியேற்றுங்கள்.  NOVEL TEAS; $14 வாசிப்புக்கும் காஃபி, டீக்கும் அப்படியொரு ஜென்மத் தொடர்பு உண்டு. இரண்டும் இணைந்தே பெரும்பாலும் இருக்கும். இதுவும் அப்படித்தான். டீ பாக்கெட்தான். அதன் கவர்களில் முக்கியமான இலக்கிய ஆளுமைகளின் வார்த்தைகள், பேசியவை இடம்பெற்றிருக்கும். டீயை குடித்துவிட்டு அதன் கவரை தூக்கி எறிய யோசிக்க வைக்கின்ற இதிலுள்ள எழுத்துகள்.  LIBRARY CARD MUG; $12 இ

மார்க்கெட்டுக்கு புதுசு ஜூன் 2019

படம்
மார்க்கெட்டுக்கு புதுசு BenQ GV1 projector வீட்டில் ரெட்மீ டிவி மாட்டுவதற்கு வாட்டமான இடம் இல்லை. ஆனால் சினிமா போன்ற எஃபக்ட் வேண்டும் என்ன  செய்வது? அப்போது பென்க்க்யூ ப்ராஜெக்டரை நீங்கள் வாங்கித்தான் ஆக வேண்டும்.  போனிலிருந்து இணைத்து தமிழ்ராக்கர்ஸ் வீடியோக்களையும் பிளே செய்து மகிழலாம். இதற்கு முக்கியத்தேவை சுவர்தான். அதனை மட்டும் அழுக்காக்காமல் வைத்துக்கொள்ளுங்கள். போதும். முக்கியமான இதிலுள்ள ஸ்பீக்கர் பாடாவதி என்பதால் நல்ல கம்பெனி ஸ்பீக்கர்களை வாங்கி இணைத்துக்கொள்ளுங்கள் நண்பர்களே.  Muse 2 meditation headband கண்களை மூடினாலே சொப்பனசுந்தரி கனவுகளுக்குள் மூழ்கி குறட்டை விடும் ஆட்களுக்கானதல்ல இந்த பேண்டு. இதனை ஸ்கூல் பிள்ளை போல நெற்றியில் மாட்டி காதில் அமுக்கி விட்டால் இந்த யோகா தினம் மட்டுமல்ல பிற நாட்களிலும் கூட தியானத்தில் மூழ்கலாம்.  பேண்டை காதில் மாட்டினால் எப்படி தியானம் வரும் என்றெல்லாம் கேள்வி கேட்டீங்கன்னா தேச துரோக வழக்கு உங்கள் மீது பாயும். கம்பெனிக்காரங்க தூத்துக்குடி வழியாக ஷார்ட் ரூட் பிடித்து தியானம் உங்கள் மூளைக்குள் பாய வழி இரு