புத்தக விரும்பிகளுக்கான கேட்ஜெட்ஸ் மற்றும் பொருட்கள்!
டெக் விரும்பிகளுக்கு மட்டும்தான் உலகில் பல்வேறு கேட்ஜெட்ஸ் கிடைக்கும் என்றில்லை. புத்தகம் விரும்பிகளுக்கான கேட்ஜெட்ஸ் இவை.
BOOKMARK NECKLACE; $100
பார்க்க அழகான நெக்லெஸ் போல இருந்தாலும் இதன் மூலம் வாசிக்கும் புத்தகங்களின் பக்கங்களை நீங்கள் புக்மார்க் செய்து வைத்துக்கொள்ள முடியும். விலையைப் பற்றி கவலைப்பட மாட்டேன் என்றால் உங்களுக்கு இது சரியான கேட்ஜெட்தான்.
FOLDABLE BOOK LAMP; $28
மடித்து வைத்தால் புத்தகம் போலவே இருக்கும். யுஎஸ்பி மூலம் மின்சாரம் கொடுத்தால் புத்தக பக்கங்களாய் விரிந்து உங்களுக்கு வெளிச்சம் கொடுக்கும். எல்லாம் எல்இடி மாயம்தான். அமேசானில் கிடைக்கும். வாங்கி வீட்டில் ஒளியேற்றுங்கள்.
NOVEL TEAS; $14
வாசிப்புக்கும் காஃபி, டீக்கும் அப்படியொரு ஜென்மத் தொடர்பு உண்டு. இரண்டும் இணைந்தே பெரும்பாலும் இருக்கும். இதுவும் அப்படித்தான். டீ பாக்கெட்தான். அதன் கவர்களில் முக்கியமான இலக்கிய ஆளுமைகளின் வார்த்தைகள், பேசியவை இடம்பெற்றிருக்கும். டீயை குடித்துவிட்டு அதன் கவரை தூக்கி எறிய யோசிக்க வைக்கின்ற இதிலுள்ள எழுத்துகள்.
LIBRARY CARD MUG; $12
இன்று அரசு நூலகங்கள் பலவும் காணாமல் போய்விட்டன. அந்த இடத்தை கிண்டில்களும், அமேசானும் பிடித்துவிட்டன. அதனால் என்ன அதனை நினைவுபடுத்திக்கொள்வதும் சந்தோஷம்தானே? இந்த காஃபிக்கோப்பையை வாங்குவதும் அப்படித்தான். நூலகத்தில் நூல்களை எழுதிவைத்து எப்போது திரும்ப தரவேண்டும் என கோடுபோட்டு வைத்திருப்பார்களே அதே டிசைனை காபிக் கோப்பையில் பிரிண்ட் செய்திருக்கிறார்கள்.
PACHECO COFFEE TABLE WITH STORAGE; $590
நான்கு அடியில் உள்ள காஃபி டேபிள் இது. இதில் நிறைய டிராயர்கள் உள்ளன. அதில் நீங்கள் உங்களுக்குத் தேவையான புத்தகங்களை வைத்துக்கொள்ளலாம்.
BIBLIOPHILIA: 100 LITERARY POSTCARDS; $16
இந்திய அரசு அஞ்சல் அட்டைகளை நிறுத்தவிருக்கிறது. இந்த நேரத்தில் மிகச்சிறந்த இலக்கியங்களை நினைவுபடுத்தும் இந்த அஞ்சல் அட்டைகளை நாம் வாங்கிப் பயன்படுத்தலாம்.
நன்றி: மென்டல் ஃபிளாஸ்