நாஜி கொடுமைகளை உலகறியச் செய்தவர்! - ஹென்ரிக் ராஸ்







Exhibit trains overdue lens on secret record of life under ...
போலந்து புகைப்படக்காரர் ஹென்ரிக் ராஸ்






போலந்து நாட்டை நாஜிப்படையினர் ஆக்கிரமித்தனர். ஆண்டு 1939 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம். இப்போரின் விளைவாக 2 லட்சத்து 10 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டு லோட்ஸ் கெட்டோ சிறையில் அடைக்கப்பட்டனர்.

அதில் யூத புகைப்படக்காரரான ஹென்ரிக் ராஸ், லோட்ஸ் கெட்டோ நகரில் பணியாற்றி வந்தார். அங்குள்ள சிறைக்கைதிகள் அடையாள அட்டை பணிக்கான புகைப்படங்களை இவரே எடுத்தார். இவர் யூதர் என்ற அடையாளம் தெரிந்தால் தானும் தன் குடும்பமும் சித்திரவதை செய்து கொல்லப்படுவோம் என்பதை அவர் அறிந்திருந்தார்.

1944 ஆம் ஆண்டு கோடையில் மட்டும் 44 ஆயிரம் மக்கள் நாஜிப்படையின் சித்திரவதை, பட்டினியால் இறந்துபோனார்கள். இவர்களில் பலர் வதைமுகாம்களுக்கு கொண்டு செல்லப்பட்டும், நச்சு வாயு சேம்பர்களில் அடைக்கப்பட்டும் இறந்தனர்.

இம்மக்களை பதிவு செய்த ராஸ் உதவியால்தான், அன்று நடந்த ஹிட்லரின் கொடுமைகளை உலகம் அறிந்தது. சிலுவைப்போர்களாலும மக்கள் வதைபட்டு இறந்துள்ளனர். ஆனால் குறிப்பிட்ட இனத்தை பழிகூறி அதனை வேட்டையாடி அழித்த சுவடுகள் என்பது ஹிட்லரின் ஆட்சியில்தான் நடைபெற்றது. இறுதியில் ரஷ்ய செம்படையின் உதவியால், லோட்ஸ் நகரில் பிழைத்த 877 பேர்களில் புகைப்படக்காரரும் ஒருவர்.

1945 ஜனவரி பதினைந்தாம் தேதி லோட்ஸ் கெட்டோ சுதந்திரம் பெற்றதாக ரஷ்யா அறிவித்தது. இரண்டு மாதங்களுக்குப் பிறகு ராஸ் தன் நெகடிவ்களை தோண்டி எடுத்தார். அவை ஈரப்பதத்தால் பாதிக்கப்பட்டாலும் நூற்றுக்கும் மேற்பட்ட புகைப்படங்கள் தப்பித்திருந்தன. பின்னாளில்  ஜெர்மனி மீதான யூதப்படுகொலை பற்றிய குற்றச்சாட்டுகளுக்கு இவையே புகைப்பட ஆதாரமாக மாறின.

1956 ஆம் ஆண்டு இஸ்ரேல் நாட்டுக்கு ராஸ், குடிபுக அனுமதி கேட்டார். காரணத்தோடுதான். பின்னாளில் இவரின் புகைப்பட ஆதாரங்களை அந்நாடு பயன்படுத்திக்கொண்டது. 1991 ஆம் ஆண்டு ராஸ் காலமானார். 1941-44 காலகட்டத்தில் இவர் எடுத்த மனதை உலுக்கும் புகைப்படங்கள் ஆர்ச்சீவ் ஆப் மாடர்ன் கான்ஃபிளிக்ட் என்ற பெயரில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.


நன்றி:குட் வலைத்தளம்

ஆங்கிலத்தில் - டாட் பெரி