விபசாரம் குற்றம் அல்ல! - மனித உரிமைக் கண்காணிப்பகம் ஆய்வு!
தென் ஆப்பிரிக்காவில் விபச்சார தொழில் குற்றமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கைது செய்யப்படும் பெண்கள் காவல்துறையால் வன்முறைக்குள்ளாக்கப்படுகின்றனர். இதன் தொடர்ச்சியான துன்புறுத்தல்களும் தொடர்கின்றன என்று ஸ்வெட் எனும் பாலியல் தொழிலாளர்களுக்கான விழிப்புணர்வு இயக்கம் கூறியுள்ளது.
இதுபற்றிய 70 பக்க ஆய்வறிக்கையை மனித உரிமைக் கண்காணிப்பகம் வெளியிட்டுள்ளது. “Why Sex Work Should be Decriminalised in South Africa,” என்று வெளியாகியுள்ள ஆய்வு பாலியல் தொழிலாளர்கள் அனுபவிக்கும் அனுபவங்களை அப்படியே பதிவாக்கியுள்ளது. இதில் காவல்துறையால் பெண்கள் சித்திரவதைப் படுத்தப்படுவதும், லஞ்சம் கொடுக்க கட்டாயப்படுத்தப்படுவதும் பதிவாகியுள்ளது. இந்த கொடுமையை தடை செய்ய விபசார தொழிலை சட்டப்பூர்வமாக மனித உரிமை அமைப்பு கோருகிறது. தென் ஆப்பிரிக்க அரசு, இத்தொழிலை குற்றமாக்கும் சட்டத்தை இனியாவது மாற்றுவது நல்லது. முன்பே மாற்றக் கிடைத்த வாய்ப்பை அரசு பயன்படுத்தவில்லை என்கிறார் நோஷிபோ விதிமா.
ஆய்வாளர்கள் 46 பாலியல் தொழிலாளர்களை நேர்காணல் செய்து பேசி இந்த ஆய்வு அறிக்கையைத் தயாரித்துள்ளனர். இதுதொடர்பாக 35க்கும் மேற்பட்ட அரசு அதிகாரிகள் சட்டம், உரிமைகள், ஆரோக்கியம் பேசியுள்ளனர். இதில் சிலர் தவிர பிறர் நிறையப் பேரை தங்கள் உழைப்பின் மூலம் காப்பாற்றி வருகின்றனர். இதில் பலருக்கும் கற்பழிப்பு, கொள்ளை ஆகிய பிரச்னைகளும் ஏற்படுகின்றன. ஆனால் இவற்றை புகாராக காவல்துறை பதிவு செய்ய மறுக்கிறது. காரணம் இவர்கள் பாலியல் தொழிலாளிகள் என்பதே. இங்கு எய்ட்ஸால் பாதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகம். உலகளவில் ஒப்பிட்டால் இங்கு மட்டுமே 19 சதவீதமாக உள்ளது. இதற்கான மருத்துவச் சிகிசைக்கு தென் ஆப்பிரிக்க அரசு 80 சதவீத நிதியுதவி செய்கிறது.
படம் செய்தி- மனித உரிமைகள் கண்காணிப்பகம்