கடற்கொள்ளையர்களுக்கு பணமே முக்கியம்!




Image result for bertrand monnet


நேர்காணல்

பெர்ட்ராண்ட் மோனட்

கடந்த ஏப்ரலில், இந்தியர்கள் ஐந்துபேர் கடல் கொள்ளையர்களால் கடத்தப்பட்டனர். பின்னர் 69 நாட்களுக்குப் பிறகு விடுவிக்கப்பட்டனர். இவர்கள் எங்கிருந்து திடீரென கிளம்புகிறார்கள்?

இக்கொள்ளையர்கள் பெரும்பாலும் நைஜீரியர்கள்தான். இவர்கள் வளைகுடா பகுதியில் வசிக்கிறார்கள். டெல்டா, பேயெல்சா ஆகிய மாநிலங்களில் இருந்து கொள்ளையர்களாக உருவாகிறார்கள். இவர்கள் குழுவாக வாழ்கிறார்கள். ஐஜா என்பது இவர்களின் இனகுழு பெயர்.

இவர்களின் குழு கட்டமைப்பு எப்படிப்பட்டது.?

இக்குழுக்களில் குறைந்த து 15 பேர் இருப்பார்கள். அதிகபட்சமாக 50 பேர் இருப்பார்கள். குறிப்பிட்ட கப்பல்களைத் தாக்கும் அசைன்மென்டுக்கு கிராமம், நகரங்களிலிருந்து ஒன்று கூடுவார்கள். சில நாட்களுக்கு முன்பே தங்கள் வாழிடத்திலிருந்து வெளியேறி தாக்குதலுக்கான திட்டங்களை வகுப்பார்கள். நைஜீரிய பாதுகாப்பு படையிடம் சிக்கிவிடக்கூடாது என கவனமாக இருப்பார்கள்.

இக்கொள்ளையர்கள் இருக்கும் பகுதியில் என்ன மாதிரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். 

நைஜீரிய வீரர்களை பாதுகாப்பு படைவீரர்களாக நீங்கள் முன்கூட்டியே நியமித்துக்கொள்வதே சரியான நடவடிக்கை.

கப்பலை கடத்தி அதிலுள்ள ஆட்களை கடத்திவிட்டார்கள். அடுத்து என்னாகும்?

கடத்தியவர்களை விடுவிக்க அதிக வாய்ப்பு உள்ளது. இதில் ராணுவ நடவடிக்கை எடுத்தால் பணயக்கைதிகளை மீட்பது கடினம். குறிப்பிட்ட பணத்தைத் தருவதாக கூறிவிட்டால், கைதிகள் விடுவிக்கப்பட்டு விடுவார்கள். பொதுவாக இப்பணத்தை காப்பீட்டு நிறுவனம் தரும்.

நன்றி: டைம்ஸ் ஆப் இந்தியா

ஆங்கிலத்தில் - அவ்ஜித் கோஷ்


பிரான்சின் வணிகப்பள்ளி பட்டதாரி. இத்தாலிய மாஃபியா, ஜப்பானிய யகுஷா ஆகிய குழுக்களைப் பற்றிய ஆராய்ச்சிகளைச் செய்தவர்.