முத்தமிடத் தோன்றுகிறதா? பரிணாம வளர்ச்சியும் ஒரு காரணம்!









ஏன்?எதற்கு?எப்படி? மிஸ்டர் ரோனி


முத்தம் கொடுப்பது எதற்கு?

நான் இப்போதுதான் டியர் காம்ரேட் படத்தில் ராஷ்மிகாவுக்கு சடாரென விஜய் தேவர்கொண்டா முத்தம் கொடுப்பதைப் பார்த்தேன். இதனை காமத்திற்கு தாம்பூலமாக பார்க்காமல் எப்படி முத்தம் பழகியிருக்கும் என்றால் சற்று ஆச்சரியமாகவே இருக்கிறது.  1915 ஆம் ஆண்டு ஆராய்ச்சியாளர்கள் சிம்பன்சிகள் முத்தம் மூலம் உணவைக் குட்டிகளுக்குக் கொடுப்பதைப் பார்த்து முத்தத்தை இதற்காகத்தான் வந்திருக்கும் என்று கூறினர். இந்திய புராணமான மகாபாரதத்தில் முத்தம் வந்திருப்பதாக டெக்சாஸ் ஆராய்ச்சியாளர்  ஏஅண்ட் எம் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவர் கூறுகிறார். கிஸ் என்ற ஆங்கில வார்த்தை கஸ் (KUS)  என்ற சொல்லிலிருந்து வந்திருக்கலாம் என்கிறார். வேதமொழி எழுத்துகளில் இதனை ஒருவரின் ஆன்மாவை இன்னொருவர் சுவாசிப்பது என்று கூறுகின்றனர்.

உலகம் முழுக்க அலைந்து திரிந்த அலெக்சாண்டர் தன் படையுடன் இந்தியாவுக்கு வந்து, முத்த த்தை
உலகம் முழுக்க எடுத்துச்சென்றிருக்க வாய்ப்புண்டு. ரோம் மக்கள் கைகள், கன்னம், உதடுகள் ஆகியவற்றில் முக்கிய நிகழ்ச்சிகளின் போது அன்பை வெளிக்காட்ட முத்தமிட்டனர் என்று சைக்காலஜி டுடே ஆராய்ச்சியாளர் நீல் பர்டன் கூறுகிறார். ஓநாய்களிடம் இந்த தன்மை உண்டு. அதாவது பெண் இணையின் முகத்தை முகர்ந்தபடி மூக்கை உரசுவது, இந்தப்பழக்கம் மனிதர்களுக்கும் உண்டு. இதனை கவனித்திருப்பீர்கள். வார்த்தைகளால் சொல்ல முடியாத விஷயத்தை முத்தம் சொல்லுகிறது. இதிலேயே இன்னும் ஆழமாகப் போனால் சிறந்த உறவுக்கு செக்ஸ் முக்கியம் இல்லை என்ற ரேஞ்சுக்கு மேற்கத்திய அறிவியல் இதழ்கள் பேசுகின்றன.

நன்றி: thelist.com