மனிதர்களை மூளையைச் சுரண்டுகிறாரா எலன் மஸ்க்?
மூளையைக் கட்டுப்படுத்தும் கேட்ஜெட்ஸ்!
மூளையைக் கணினியுடன் இணைத்து ஆராயும் முயற்சிகளை தொழில்நுட்ப நிறுவனங்கள் தொடங்கியுள்ளன.
கனடாவைச் சேர்ந்த எலன் மஸ்கின் நிறுவனமான நியூரா லிங்க் (Neuralink) எனும் நிறுவனம், 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்நிறுவனத்தின் நோக்கம், மனிதர்களின் மூளையைக் கணினியுடன் இணைப்பதுதான். தன் திட்டங்களை ரகசியமாக வைத்திருந்த இந்நிறுவனம், தற்போது தன் ஆராய்ச்சிச் செய்தியை வெளியிட்டுள்ளது.
மனிதர்களின் எண்ணங்களை இயந்திரங்கள் படிப்பதுதான் திட்டத்தின் நோக்கம். இம்முறையில் நம் தலைமுடியை விட மெல்லியதாக உள்ள எலக்ட்ரோட்ஸ் (மின்கடத்தி), மூளையிலுள்ள நியூரான்களை கண்காணித்து செயற்படுகிறது.
3000 எலக்ட்ரோட்ஸ் இம்முறையில் மனிதரின் தலையில் இணைக்கப்படுகிறது. ஒரு எலக்ட்ரோட்ஸ் ஆயிரம் நியூரான்களைக் கண்காணிக்கிறது. இதனைக் காதுக்கு அருகில் பொருத்தும் கருவி ஒருங்கிணைத்து ஸ்மார்ட்போனின் ஆப்புக்கு தகவல் அனுப்புகிறது. இம்முறையில் கை, கால்கள் செயலிழந்த மனிதர்களுக்கு உதவிகளை வழங்க முடியும் என்கிறது நியூராலிங்க் நிறுவனம்.
இந்நிறுவனம் மட்டுமல்ல; மூட்டுகள் செயல்படாதவர்களுக்கென பிரெய்ன்கேட் என்ற கணினி புரோகிராமும் ஆய்வில் உள்ளது. சென்சார்கள் மூளையின் செயற்பாட்டை உணர்ந்து அதற்கேற்ப செயற்கை கருவிகளை செயற்பட ஊக்குவிக்கிறது.
நியூராலிங்க் பற்றிய அறிவிப்பை வெளியிட்ட நிறுவனர் எலன் மஸ்க், "நாங்கள் எலி மற்றும் குரங்குகளை வைத்து சோதனை செய்து பார்த்தோம். மூளையில் சென்சார் பதிக்கப்பட்ட குரங்கு, கணினியை இயக்கியது" என்றார். மாற்றுத்திறனாளிகளுக்கு உதவக்கூடிய சோதனை என்றாலும் ஒருவரின் மூளையில் சென்சார்களைப் பதிப்பது ஆகியவற்றில் அரசு அனுமதி பெற்றுச் செய்யவேண்டியது அவசியம். பிற துறைகளும் இத்தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த விரும்புவார்கள். மக்களின் தேவைகளை எவ்வளவு வேகமாக தீர்க்க முடிகிறதோ அதுதான் வெற்றிகரமான வணிகமாக இருக்கமுடியும். நிறுவனங்கள் செல்வதும் அதே பாதையில்தான்.
தகவல்:New Scientist
படம் உதவி: eXo Platform