கண்காணிப்பை தகர்க்கும் போராட்டக்காரர்கள்! - சீனா எரிச்சல்

கண்காணிக்கும் விளக்கு கம்பம்!


ஹாங்காங்கில் போராட்டக்கார ர்கள் செய்யும் குறிப்பிட்ட காரியம் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. நாம் சாதாரணமாக கவனமின்றி எரிச்சலில் என்ன செய்வோம்? ஜல்லிக்கற்களை எடுத்து சோடியம் வேபர் விளக்கில் விட்டெறிந்து அதனை உடைப்போம். இது ஒரு ஜாலியான பொழுதுபோக்கு. பின்னர் அப்படி அடித்த ஆட்களே அதனை தவறு என்று மாறுவது வழக்கம்.

அதேபோல அங்கு சீன அரசு அமைத்துள்ள மின்விளக்கு தூண்களை ஹாங்காங் குடிமகன்கள் அடித்து உடைத்து சாய்க்கின்றனர். அதனை புகைப்படமாக எடுத்து சமூக வலைத்தளத்தில் போடுகின்றனர். எதற்கு? காரணம், அது சீனாவின் கண்காணிப்பு கோபுரமாக உள்ளது. சீன அரசு அதனை போக்குவரத்தை கண்காணிக்கும் கம்பம் என்று கூறுகிறது.


மின்விளக்கு கம்பம்தான், குப்பைகளைப் போடுபவர்களை கண்காணிக்கிறது. மேலும் தட்பவெப்பநிலை, 5ஜி இணைய இணைப்பு, ப்ளூடூத் உள்ளிட்ட வசதிகளைக் கொண்டு இயங்குகிறது. ஸ்மார்ட் சிட்டி வசதிகளில் இதுவும் ஒரு அங்கம். இதைத்தான் ஹாங்காங்க் புரட்சியாளர்கள் அடித்து உடைக்கின்றனர். அவர்களின் கூட்டம் அதற்கு அப்ளாஸ் எழுப்புகின்றனர். இதன் விலை 34.75 மில்லியன் டாலர்கள். அதாவது ஒரு கம்பம் அல்ல; இந்த கம்பங்கள் அமைக்க செலவிடப்பட்ட தொகை.

இதெல்லாம் அவர்கள் அறியாதவர்களல்ல. சீன அரசின் கண்காணிப்பு விளக்கு கம்பம் என்பதால் இந்த கோபம் எழுகிறது. ஆகஸ்ட் 24 என்பது ஹாங்காங்கின் கண்டுபிடிப்புகள் மற்றும் தொழில்நுட்பத்திற்கு கறுப்பு நாள் என ஹாங்காங் தொழில்நுட்பத் தலைவர் நிகோலஸ் யாங் கூறியுள்ளார்.


புரட்சிக்கார ர்களை சீனா திட்டமிட்டு ட்ராக் செய்யும் என்பதால், அவர்கள் ஸ்மார்ட்போன்களை கைவிட்டுவிட்டனர். ட்ரெயினில் ஸ்மார்ட் கார்டு பயன்படுத்துவதில்லை. மேலும் தங்கள் முகத்தை கவனமாக மூடியபடியே இருக்கின்றனர். அவர்கள் விளக்கு கம்பம் மக்களை கண்காணிக்கவே நிறுவப்பட்டுள்ளது என்று கூறி அதனை சேதப்படுத்துவதை நியாயப்படுத்தி பல்வேறு நோட்டீஸ்களை ஒட்டி வருகின்றனர். சீனாவிலுள்ள சென்ஸென் நகரில் ஏற்கெனவே பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இது ஒன்றும் புதிதல்ல. இதேபோல பாதுகாப்பு ஏற்பாடுகள், ஸ்மார்ட் விளக்கு கம்பங்கள் சிங்கப்பூரிலும் கூட உண்டு.

ஆனால் ஹாங்காங் என்பது சீனாவின் ஆளுமைக்கு உட்பட்டாலும் தன்னாட்சி அதிகாரம் கொண்டது. அவர்கள் இங்கு சுதந்திரம் கேட்பதால், சீனாவின் மேலாதிக்கத்தின் அடையாளங்களை தகர்க்க நினைக்கின்றனர். சீனாவின் ராணுவ பலம் விரைவில் அங்கு பயன்படுத்தப்படலாம். அதற்கான வாய்ப்புகளை அரசு அங்கு ஏற்படுத்தலாம். அப்போது வலுக்கட்டாயமாக சீனாவின் மாநிலங்களில் ஒன்றாக ஹாங்காங் மாறும்.

நன்றி - அபாகஸ் - மாஷா போரக்