காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து நீக்கத்திற்கான போராட்டம் நடந்ததா?
அரசு விசுவாசம்தான் இதற்குக் காரணம். ஆனால் பிபிசி, அல்ஜசீரா ஆகிய டிவி நிறுவனங்கள் உண்மையை வெளிக்காட்டி விட்டன. பத்தாயிரம் பேர்களுக்கு மேல் பங்கேற்ற பேரணியைக் கலைக்க போலீசார் கண்ணீர் புகைகுண்டு, ரப்பர் மூடி கொண்ட தோட்டாக்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தியுள்ளனர். மேற்சொன்ன வீடியோக்கள் பொய் தேசபக்தி டிவி சேனலான ரிப ப்ளிக் டிவி கூறியது. கூடவே ஆளுங்கட்சி ஆதரவாளர்கள் இதற்கு சமூக வலைத்தளத்தில் போலிச்செய்தி என சப்பைக் கட்டு கட்டினர்.
உள்துறை அமைச்சகம் நடந்த போராட்டம் உண்மை. அதில் 20 பேர்தான் இருந்தனர் என விநோதமான காரணத்தைக் கூறியது. ஆனால் உண்மை என்ன என ஆல்ட் நியூஸ் வலைத்தளம் களமிறங்கி விளக்கியது. வீடியோவில் காணப்படும் அங்கிருந்த விளம்பரப்பலகை, ஜீனப் சாயிப் பசூதி, பேனரிலுள்ள போராட்ட வாசகங்கள் என அனைத்தும் உண்மை என நிரூபணம் ஆகியுள்ளது.
ஸ்ரீநகரிலுள்ள சௌரா எனுமிடத்தில் நடந்த போராட்டப் பேரணி அது என உறுதியாகியுள்ளது. பிபிசி, அல்ஜசீரா மட்டுமன்றி ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனமும் போராட்டம், துப்பாக்கிச்சூடு, கண்ணீர் புகைகுண்டு வீச்சு ஆகியவற்றை உண்மை என்றே செய்தி வெளியிட்டுள்ளது. பிபிசி செய்தி பொய், போலிச்செய்தி என தேசபக்தியாளர்கள் ட்விட்டரில் எழுத, பிபிசி தனது ட்விட்டர் கணக்கில் நாங்கள் நேர்மையாக அங்கு என்ன நடந்ததோ அதை பதிவு செய்தோம். அதில் நிறைய நெருக்கடிகள் கொடுக்கப்பட்டன. ஆனால் நாங்கள் எங்களுக்கு கிடைத்த செய்தியை ஆராய்ந்தே வெளியிட்டோம் என்று கூறியது. பிபிசி மீது பலரும் குற்றம் சொல்ல முடியாது என்று அமைதி காத்தனர். ஆனால் கட்சிக்கு கண்மூடித்தனமாக விசுவாசம் காட்டியவர்கள் இப்போது உண்மை வெளிப்பட முகம் வெளிறிக் கிடக்கின்றனர்.
நன்றி: ஸ்க்ரோல்.இன்