தமிழகத்தில் பரவும் அகிரா மியாவகி வகை காடுகள்!



Image result for அகிரா மியாவாக்கி

நகரில் வளர்க்கலாம் காட்டை!

நகரில் லூயிஸ் பிலிப் சட்டை போட்டு ஆபீஸ் செல்லும் அனைவரின் மனதிலும் காட்டைப் பற்றிய எண்ணம் ரகசியமாக இருக்கும். காரணம் நாம் அங்கிருந்து வந்தவர்கள்தானே? இதன்காரணமாகவே நாம் பழுப்பை விட பச்சையை விரும்புகிறோம். வயல்வெளியைப் பார்த்தால் ஒருகணம் திடுக்கிட்டு நின்றுவிடுகிறோம். ஆனால் நகரத்தில் எங்கே பசுமையைக் காண? அதற்கும் பதில் வைத்திருக்கிறார்கள் துவக்கம் குழுவினர்.


ஜப்பானைச்  சேர்ந்த தாவரவியலாளர் அகிரா மியாவகியின் டெக்னிக்தான் நகரங்களில் கிடைக்கும் இடங்களில் மரக்கன்றுகளை உருவாக்குவது. இதனை கையில் எடுத்து குரோம்பேட்டையிலுள்ள ஜெயின் பள்ளியில் மினி காட்டை உருவாக்கிக் காட்டினர். சென்னையில் தண்ணீர் கிடையாது. இந்த லட்சணத்தில் எப்படி மரக்கன்றுகளுக்கு தண்ணீர் ஊற்றுவது? என்ற கேள்விக்கும் இவர்களிடம் பதில் உள்ளது. நம்மோடு பேசிக்கொண்டே அவருக்கு வந்த 40 போன்கால்களையும் பேசிச் சமாளிக்கிறார். அடுத்த கோடைக்குள் மரங்களை உருவாக்கும் வேகத்தில் மக்கள் உள்ளனர். இம்முறையில் நாங்கள் அனைத்து வகை மரக்கன்றுகளையும் ஒன்றாகவே விதைக்கிறோம். இது அசப்பில் காடுபோன்ற டெக்னிக்தான். இடம்தான் குறைவு. என்கிறார் துவக்கம் குழுவின் தலைவரான கிருஷ்ணகுமார் சுரேஷ்.


செய்தி- டைம்ஸ் ஆஃப் இந்தியா
படம் - விகடன்
படத்தில் அகிரா மியாவகி


பிரபலமான இடுகைகள்