நாய்களுக்கு உருவாகியுள்ள பரிணாம வளர்ச்சி தசைகள்!









Dog Breed Illustrations by DKNG – Inspiration Grid ...




ஆல்பா படம் ஓநாய்களுக்கும் மனிதர்களுக்கும் இடையிலான உறவைப் பேசியது. ஓநாய்கள்தான் மெல்ல மனிதர்களிடம் பழகி வீடு, பண்ணை என காவல் காத்து மெல்ல நாய் என மாறியது என்று கூறப்படுகிறது. இன்றுவரையிலும் கூட பிற விலங்குகளை விட நாய் மனிதர்களோடு அந்நியோனியமாக உள்ளது.

காசுள்ளவர் வீட்டு நாய், ஆடி காரில் உட்காருகிறது. காசில்லாத ரிக்சாவில் தூங்குபவரின் காலடியிலும் ஆதரவாக நாய் இருக்கிறது. இந்த எடுத்துக்காட்டை ஏன் கூறுகிறேன் என்றால், நாய்க்கு தேவையானது மனிதர்களின் அன்பு ஒன்றே. அது உங்களை காசிற்காக மதிக்காது. நீங்கள் அதன் மீது கொண்ட நேசத்திற்காகவே உங்கள் மீது விழுந்து புரண்டு விளையாட அழைக்கிறது.

தற்போது ஓநாய்களின் கண்களில் இல்லாத தசைகள் நாய்க்கு உருவாகியுள்ளதாக Proceedings of the National Academy of Sciences  என்ற அறிவியல் இதழ் கட்டுரை வெளியிட்டுள்ளது. பிற விலங்குகள் மனிதனை நேரடியாக கண்ணோடு கண் பார்க்காது. முடிந்தளவு அப்படி பார்ப்பதைத் தவிர்க்கும். நாய் மட்டுமே தனக்கான அங்கீகாரத்தைப் பெற இயல்பாக மனிதனின் கண்களைப் பார்க்கும். அப்படிப் பார்க்காதே அது சண்டைக்கு வா என்று சொல்லுவதைப் போல என்று கூட சிலர் உங்களுக்குச் சொல்லியிருப்பார்கள். ஆனால் அப்படிப் பார்ப்பது எனக்கு உதவேன். உன்னுடைய கரிசனம் தேவைப்படுகிறது என்பதுபோலத்தான் என இந்த ஆராய்ச்சி கூறுகிறது. 

போர்ட்ஸ்மௌத் பல்கலைக்கழக நாய் ஆராய்ச்சிக்கழகம், நாய்களின் கண்களிலுள்ள தசைகளைப் பற்றி ஆராய்ச்சி செய்து வந்தது. நாய்களை பழுப்பு நிற ஓநாய்களிடமிருந்து வந்ததாக கூறுவார்கள். அவற்றின் பேரினத்திடமிருந்து பிரிந்து 33 ஆயிரம் ஆண்டுகள் ஆகின்றன. தற்போது இதன் உடலில் கூடுதலாக புருவப்பகுதியில் இரு தசைகள் உருவாகியுள்ளன. இது சைபீரியன் ஹஸ்கி ரக நாய்களுக்கு கிடையாது என்பதையும் ஆய்வில் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். நாய் இந்தவகையில் முன்னேறினாலும் மனிதர்களோடு நெருக்கமாகப் பழகும் குதிரைகள் இந்த விஷயத்தில் பின்தங்கியே உள்ளன. 

Dog Illustration – Ginger : Keri Caffrey, Inc.


ஆங்கிலமூலம் - தி அட்லாண்டிக் - ஹாலே வெய்ஸ்