இடுகைகள்

நேர்த்தி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நேர்த்தி எனும் தொற்றுநோய் - அனைத்திலும் ஒழுங்கு எதிர்பார்க்கிறீர்களா? ஆபத்து!

படம்
எனக்கு டிசிப்ளின்தான் முக்கியம், எனக்கு திருப்தியாகலப்பா, இது பெஸ்ட் கிடையாது, நல்லா வொர்க்அவுட் பண்ணுங்க என்ற வார்த்தைகளை நாம் மேலதிகாரிகளிடம் அல்லது ஆசிரியர்களிடம் கேட்டிருப்போம். நாமே அந்த இடத்திற்கு உயரும்போது, நமக்கு கீழிருப்பவர்களிடம் இதே வார்த்தைகளை கூறிக்கூட இருக்கலாம். இதற்கு என்ன பொருள்? நேர்த்தி. இதை சிலர் நேரடியாக சொல்லுவார்கள். நிறையப்பேர் எனக்கு இப்படி இருக்கணும் என்பதைத்தாண்டி பேசமாட்டார்கள். இதனை அவர்கள் தங்களுடைய ஸ்டைலாக நினைத்துக்கொண்டிருப்பார்கள்.  நான் வேலைசெய்த முன்னாள் பத்திரிகை ஆசிரியர் சிறந்த ஆசிரியர். ஆனால், பர்ஃபெக்ஷன் பார்ப்பவர்தான். மாதந்தோறும் வரும் பத்திரிகையை, தனது நேர்த்தியாக செய்யணும் என்ற குணத்தாலேயே  ஆறுமாத பத்திரிகையாக மாற்றினார். காரணம், காத்திரமாக உருவாக்கணும் என்று பதில் சொன்னார்.  டிசைன் செய்யும் முன்பே இருமுறை திருத்தி எழுத திருத்தங்களை இன்டிசைனில் போட்டு கொடுப்பேன். பின் டிசைன் செய்தபின் நான்குமுறை திருத்தங்கள் செய்வார். எப்போது பார்த்தாலும் நான்கு ஏ4 காகிதங்கள் டேபிளில் கிடக்கும். எது எப்போது போட்டது என தேதி எழுதி வைத்து பாத