இடுகைகள்

மிசா லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அரசியலமைப்பு வலியுறுத்தும் உரிமைகள், கடமைகள்!

படம்
அரசியல் அமைப்புச்சட்டம் வலியுறுத்தும் அடிப்படை உரிமைகள் என்னவென்று அறிவீர்களா? அதைத்தான் நாம் இப்போது பார்க்கப்போகிறோம். சர்வாதிகார அரசு என்பது உலகின் பல பாகங்களிலும் ஜனநாயகம், மக்களுக்கு உரிமைகள் என்ற கோஷங்களைப் போட்டபின்னரே சர்வாதிகாரத்தை அமல்படுத்துகின்றன. எவை தம்மை வெல்லச் செய்ய உதவினவோ அதனை பிறருக்கு கிடைக்காமல் செய்ய அனைத்து அரசுகளும் முயன்றுள்ளன. இதனை அரசியலமைப்பு சட்டப்படி செய்தோம் என்பார்கள். அரசியல் அமைப்புச்சட்டம் 51 ஏ படி பதினொரு உரிமைகள், கடைபிடிக்க வேண்டிய விதிகள் கூறப்படுகின்றன. 2002இல் அடல் பிகாரி வாஜ்பாய் காலத்தில் 82 ஆவது சட்டத்திருத்தமாக இதில் சில விதிகளில் மாறுதல்கள் செய்யப்பட்டன. தேசிய கீதம், தேசியக்கொடி ஆகியவற்றை அரசியலமைப்புசட்ட விதிப்படி மதிக்க வேண்டும் . நாட்டின் சுதந்திரத்திற்கு பாடுபட்ட தலைவர்களுக்கு மரியாதை அளிக்க வேண்டும். நாட்டின் ஒற்றுமை, இறையாண்மை, பெருமை ஆகியவற்றை இந்தியாவின் கீழுள்ள அனைத்து மாநிலங்களிலுள்ள மக்களும் கடைபிடிக்கவேண்டும். நம் நாடு பல்வேறுபட்ட கலாசாரத்திற்கு புகழ்பெற்றது. அதற்கு களங்கம் ஏற்படுத்தும்படியான செயல்பாடுகளை செய்ய