இடுகைகள்

உ.பி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

குழந்தைகளின் இறப்பை மறைத்தவர்களுக்கு பரிசுகள் கிடைத்தன! - மருத்துவர் காஃபீல் கான்

படம்
  மருத்துவர் காஃபீல் கான் மருத்துவர் காஃபீல் கான் உத்தரப் பிரதேசத்தில் பணிபுரிந்த மருத்துவர். ஆக்சிஜன் இல்லாமல் தடுமாறிய குழந்தைகளைக் காப்பாற்ற முயற்சி செய்தார். இதற்காக சிலிண்டர்களையும் சொந்தசெலவில் ஏற்பாடு செய்தார். இதனால் மக்களின் நாயகன் ஆனார். ஆனால் முதல்வர் யோகி ஆதித்யநாத் இவர் மீது குற்றம் சுமத்தி சிறையில் தள்ளினார். இவரது குடும்பத்தினரையும் காவல்துறை மிரட்டத் தொடங்கியது. தற்போது சிறைவாசம் மீண்டு வந்தவர், சம்பவம் பற்றிய நூலை எழுதியுள்ளார்.  கோரக்பூர் சம்பவம் எப்படி நடந்தது? ஜப்பானிய மூளைக்காய்ச்சலால் அங்கு குழந்தைகள் இறந்துகொண்டே இருப்பது இயல்பானது என்கிறார்களே? புஷ்பா சேல்ஸ் என்ற நிறுவனம், முதல்வர், செயலாளர் ஆகியோருக்கு பதினான்கு கடிதங்களை எழுதியது. ஆனால் அவர்கள் யாருமே அதனை கண்டுகொள்ளவில்லை. பணத்தை சரியான நேரத்திற்கு கொடுத்திருந்தால் இப்படியொரு பிரச்னை வந்திருக்காது.  2017ஆம் ஆண்டு ஆகஸ்டில் பணம் பட்டுவாடா ஆனது. அதே ஆண்டில்தான் உ.பி மாநில அரசு சுகாதாரத்திற்கான நிதி ஒதுக்கீடை 50 சதவீதமாக குறைத்தது.  குழந்தைகள் ஆண்டுதோறும் பலியாகிறார்கள் என்பதற்கு மன்னிப்பு கேட்டுக்கொண்டே இருக்க ம

அமெரிக்காவை விட உத்தரப் பிரதேசத்தில் இறப்பு சதவீதம் குறைவுதான்! - யோகி ஆதித்யநாத், முதல்வர், உத்தரப்பிரதேசம்

படம்
                    யோகி ஆதித்யநாத் உத்தரப்பிரதேச முதல்வர் ஆக்சிஜன் , படுக்கை , மருந்துகள் இல்லாத காரணத்தால் மாநிலத்தில் அதிகளவு கோவிட் 19 இறப்புகள் நேர்ந்துள்ளதை ஏற்கிறீர்களா ? இந்த விவகாரத்தில் நாம் அரசியல் செய்யக்கூடாது . வளர்ந்த நாடுகளை விட பிற மாநிலங்களை விட எங்களது மாநிலத்தில் குறைவான இறப்புகளே நோய்த்தொற்றால் நடந்துள்ளன . நாங்கள்தான் முதல் மாநிலமாக ஆக்சிஜன் சப்ளையை மருத்துவமனைகளுக்கு வழங்குவதை செய்தோ்ம் . இங்கே அதிகளவு ஆக்சிஜனை தயாரிக்கும் ஆலைகள் இல்லாதபோதும் ஜார்க்கண்ட் போன்ற மாநிலத்தில் இருந்தும் அதனை பெற்று வழங்கினோ்ம் . இதற்கான ஆக்சிஜன் உருளை தணிக்கை முறையையும் இங்கு அமல்படுத்தியுள்ளோம் . தடுப்பூசியை பெண்களும் , கிராமத்திலுள்ளவர்களும் செலுத்திக்கொள்வதில் ஆர்வம் காட்டவில்லை . இவர்களை எப்படி ஊக்கப்படுத்தப் போகிறீர்கள் ? நாங்கள் மூடநம்பிக்கையை ஒழித்து விழிப்புணர்வு செய்துவருகிறோம் . எதிர்க்கட்சியினர் தடுப்பூசி பற்றிய அவநம்பிக்கையை ஏற்படுத்தி வருகின்றனர் . கிராமத்தில் உள்ள மக்களுக்காக ஆப்களை உருவாக்கியுள்ளோம் . மக்களுக்கு உதவ 1,33,

போலி சாராயத்தில் பறிபோகும் உயிர்கள்!

படம்
TOI விதவைகள் கிராமம் உ.பியிலுள்ள புசைனா கிராமத்தில் விதவைகள் அதிகரித்துள்ளனர். என்ன காரணம்?  மது. இங்குள்ளு 300 குடும்பங்களில் 150 குடும்பங்களில் ஆண்கள் பலியாவது, மதுவினால்தான்.  கடந்த 65 ஆண்டுகளில் ஒரு குடும்பத்தில் குறைந்தது 5 ஆண் உறுப்பினர்கள் உயிரிழப்பது இங்கு சாதாரணமாகியுள்ளது. போலி சாராயத்தை அருந்தியே இந்த மரணங்கள் சம்பவித்துள்ளன. பத்து ரூபாய் பவுச்களில் இந்த போலி சாராயம் கிடைப்பது மரணங்களை பரவலாக்கியுள்ளது. உ.பி மற்றும் உத்தர்காண்ட் ஆகிய இரு மாநிலங்களிலும் பொதுவான மரணங்களுக்கு காரணம், போலி சாராயம்தான். புசைனா கிராம மக்களின் எண்ணிக்கை  4 ஆயிரத்து எட்டு. ஆண்களை இழந்து வறுமையில் வாடும் பெண்களால் இன்னும் கள்ளத்தனமாக பலரின் வாழ்வை அழிக்கும் போலி சாராயத்தை ஒழிக்க முடியவில்லை. பலரும் போலிச்சாராயத்தைப் பற்றி பேச மறுக்கிறார்கள். காரணம் தெரிந்ததுதான். சாராய மாஃபியாக்களின் அச்சுறுத்தல் வாழ்வுக்கே உலை வைத்துவிடுமே? இங்குள்ள நெக்ஸி தேவி தன் கணவரை மட்டுமல்ல நான்கு பிள்ளைகளையும் போலி சாராயத்துக்கு பலி கொடுத்துள்ளார். சுனிலா தேவிக்கு இளம் வயதில் நான்கு பெண்கள் உண்டு. இவரது