சர்வாதிகாரம் எப்படி நடைமுறைப்படுத்தப்படுகிறது?
சர்வாதிகாரம் எப்படி நடைமுறைப்படுத்தப்படுகிறது? அனைத்து விதிகளையும் சட்டங்களையும் சர்வாதிகார அரசு உடைத்தெறியும் என சட்ட கோட்பாட்டாளர் கார்ல் ஸமிட்ச்ட் கூறினார். நாட்டை நிரந்தரமான அவசர நிலைமையில் வைத்திருக்க முயல்கின்றனர். அப்போதுதான் குடிமக்கள் தங்கள் பாதுகாப்புக்காக, அடிப்படை சுதந்திரத்தை விலைபேச முன்வருவார்கள். தீவிரவாதம் பற்றி இன்றைக்கு நிறைய ஆட்சியாளர்கள் பேசிக்கொண்டே இருக்கிறார்கள். எக்காரணம் கொண்டும் மக்கள் அதை நம்பி விடக்கூடாது. அதில் எந்த உ்ணமையும் இல்லை. அடிப்படை உரிமைகளை இழந்தால் அரசு கொடுப்பதாக கூறும் பாதுகாப்பும் கேள்விக்குறியாகிவிடும். ஒன்றை இழந்து ஒன்றை பெறுவதும் நடைபெறுவதுண்டு. அதிகாரத்திற்கு கீழ்ப்படிவது சற்று இணக்கமான பாதுகாப்பான தன்மையை ஏற்படுத்துகிறது. சுதந்திரம், பாதுகாப்பு என இரண்டையும் இழந்துவிடுகிறோம். பாசிஸ்ட் ஒருவருக்கு வாக்களித்தால், மோசமான நிலையே கிடைக்கும். சர்வாதிகாரிகள், பயங்கரவாதம், தீவிரவாதம் பற்றி பேசும்போதெல்லாம் கவனமாக இருக்கவேண்டும். அவர்கள், தங்களுடைய கருத்துகளை எதிர்ப்பவர்களை, விமர்சனம் செய்பவர்களை தீவிரவாதிகள், பயங்கரவாதிகள் என அடையாளப்படுத்...