புதிய இந்தியா கல்வியறிவுத் திட்டம் !
கல்வி அறிவு இல்லாத தொழிலாளர்களுக்கு தன்னம்பிக்கை தரும் புதிய இந்தியா கல்வியறிவுத் திட்டம் பாரதம், பாரதீய என்று கூறுவது காவி இயக்கம், கட்சிகளை நினைவுபடுத்துகிறது. எனவே கல்வியறிவுத்திட்டம், புதிய இந்தியா என்ற பெயரில் கட்டுரையில் பயன்படுத்தப்புகிறது. தமிழ்நாட்டில் படிக்க வாய்ப்பு வசதி இல்லாமல் வேலை செய்யுமாறு பணிக்கப்பட்டவர்கள், பலர் இன்றும் பேருந்து பார்த்து ஏறவும், எண்களைப் பார்த்து படிக்கவும் சிரமப்படுகின்றனர். சிறுவயதில் அவர்கள் பள்ளிக்கு செல்லும்போது, அதைத் தடுக்க உறவினர்கள் அல்லது குடும்பத்தினர் முயற்சி செய்து வெற்றி கண்டிருப்பார்கள். அதன் விளைவாக, அவர்களின் கல்வியறிவு அஸ்தமனமாகி இருக்கும். பிற்காலத்தில், கையெழுத்து கூட போட முடியாமல், கால மாற்றங்களை ஏற்றுக்கொள்ள முடியாமல் தடுமாறி வருவார்கள். இதற்கு ஒன்றிய அரசு, மாநில அரசு இணைந்து நிதியுதவி அளித்து கல்வியறிவுத் திட்டம் ஒன்றை நடத்துகிறது. அந்த வகையில் கற்றல் மையங்கள் முப்பதாயிரத்திற்கும் மேலாக தமிழ்நாட்டில் உள்ளன. இதன் வழியாக சேலம் கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை ஆகிய மாவட்டத்திலுள்ள நாற்பது வயதுக்கும் மேற்பட்ட மக்கள் பய...