இடுகைகள்

குடியரசுத் தலைவர் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

திரௌபதி முர்மு - முழுமையான தகவல் தொகுப்பு

படம்
  திரௌபதி முர்மு  சந்தால் பழங்குடிப் பெண்மணியான திரௌபதி முர்மு, இந்தியாவின் 15ஆவது குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். குடியரசுத் தலைவருக்கான தேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளரான யஷ்வந்த் சின்காவை வென்றார். இந்த வெற்றி மூலம் குடியரசுத் தலைவராகும் முதல் பழங்குடி பெண், இரண்டாவது பெண்மணி என இரு சாதனைகளைச் செய்துள்ளார்.  பெயர்: திரௌபதி முர்மு பிறப்பு: 1958, ஜூன் 20ஆம் தேதி பிறந்த இடம்: உபர்பேடா, மாயூர்பன்ஞ், ஒடிஷா வயது: 64 உயரம்: 164 செ.மீ. எடை: 74 கி.கி. பெற்றோர்: பிரான்ச்சி நாராயண் துடு (Biranchi Narayan Tudu) கல்வி கற்ற இடம்:  யூனிட் 2 உயர்நிலைப்பள்ளி; 1979ஆம் ஆண்டு ராம்தேவி பெண்கள் பல்கலைக்கழகம் (பி.ஏ.), புவனேஸ்வர், ஒடிஷா  கல்விப்பணி:  உதவி பேராசிரியர், ஸ்ரீ அரபிந்தோ கல்வி ஆராய்ச்சிக்கழகம், ராய்ரங்பூர்; இளநிலை உதவியாளர், நீர்ப்பாசனத்துறை, ஒடிஷா மாநில அரசு (1979-1983) அரசியல் நுழைவு: 1997, பாரதிய ஜனதா கட்சி (ராய்ரங்பூர் நகர பஞ்சாயத்து கவுன்சிலர்); பஞ்சாயத்து தலைவர் (2000) வகித்த அரசு பதவிகள் : ஜார்க்கண்ட் மாநில ஆளுநர் (2015), ஒடிஷாவின் மீன்வளம் மற்றும் விலங்குநலத்துறை அமைச்சர்