இடுகைகள்

வைகிங் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தோர்கல் பயணிக்கும் புதிய உலகம் - சாகாவரம் பெற்ற வில்லிகள்!

படம்
தோர்கல் செத்துப் பிழைக்கும் ஏறத்தாழ சொர்க்கம் சன்ஷைன் கிராபிக் நாவல் லயன் காமிக்ஸ் விலை ரூ. 60 வட துருவத்தில் குதிரையில் பயணிக்கும் தோர்கல் வழிதவறிவிடுகிறார். ஓநாய்க்கூட்டம் தாக்குதல் நடத்த குதிரையுடன் தப்பிக்க முயல்கிறார். அப்போது மலைப்பிளவில் தவறி விழுகிறார். எழுந்து பார்த்தால் இரு பெண்கள் அவர் கண்முன்னே நிற்கிறார்.  அவர் அங்கே பார்க்கும் இடம் பூக்கள் பூத்து அழகாக இருக்கிறது. ஆனால் சுதந்திர உலகாக இல்லை. அங்கே இரண்டு பெண்கள் மட்டுமே இருக்கின்றனர். யார், அங்கிருந்து அவர் எப்படி தப்பித்தார் என்பதுதான் கதை. இதில் தோர்கல் ஆக்சன் அதிரடி எதுவும் செய்யவில்லை. முழுக்க பெண்களின் ஆட்சிதான். கோமாவில் ஓராண்டுக்கு மேல் இருக்கும் தோர்கல்லுக்கு, எதிர்பாராதவிதமாக ஒரு பெண் உதவுகிறாள். இதன்விளைவாக தன் உயிரையை பறிகொடுக்கிறாள். ஆனாலும் அந்த உதவி அப்படித்தால் தோர்கல்லுக்கு கிடைக்கிறது. படங்கள் பிரமாதமாக வரைந்திருக்கிறார்கள். குதிரை பள்ளத்திற்குள் விழுந்து இறக்கும் காட்சியை இதற்கு உதாரணமாக காட்டலாம். சாகச பயணமாக காமிக்ஸ் தேவை என்றால் அதற்கு இந்த காமிக்ஸை வாங்கிப் படிக்கலாம்.

பிரபஞ்ச புதல்வனுக்கு நேரும் சவால்கள்! - தோர்கல்

படம்
பிரபஞ்சத்தின் புதல்வன் - தோர்கல் வண்ணம் - ரோசின்ஸ்கி - எண்ணம் - வான் ஹாமே வைகிங்குகளால் வளர்க்கப்படும் தோர்கல் என்ற வீரனின் கதை. மனோதிடமும், வீரமும் கொண்டவனை கான்டல்ஃப் என்ற வைகிங் தலைவர் கடலின் நடுவிலுள்ள பனிக்கட்டியில் கட்டிவைத்து கொல்ல நினைக்கிறார். என்ன காரணம் காதல்தான். தலைவரின் மகள் ஆரிஸியாவை தோர்கல் காதலித்தார். இது கான்டல்ஃப்புக்கு தெரியவர அவர் தோர்கல்லை வைகுண்டத்திற்கு அனுப்ப நினைக்கிறார். இதற்காகத்தான் அந்த கொடூர தண்டனை. தோர்கல் இந்த தண்டனையிலிருந்து தப்பிக்க பெயர் தெரியாத ஒற்றைக்கண் கொண்ட பெண் ஒருவள் உதவுகிறாள். ஆனால் தன்னைப் பற்றி எதையும் அவள் தோர்கல்லிடம் பகிர மறுக்கிறாள். அவள் யார், அவளுக்கும் கான்டல்ஃப்பிற்கும் உள்ள தொடர்பு, ஆரிஸியாவை தோர்கல் சந்தித்தாரா என்பதுதான் காமிக்ஸின் மீதியுள்ள கதை. பார்பேரியன் ரக படங்கள் உங்களுக்கு பிடிக்கும் என்றால் இந்த காமிக்ஸை ரூ.60 கொடுத்து வாங்கிப் படிக்கலாம்.