டைம் சிறந்த கண்டுபிடிப்புகள் 2025
டைம் சிறந்த கண்டுபிடிப்புகள் 2025 ஆப்பிள் ஏர்பாட்ஸ் 3 இந்த ஏர்பாட், பல மடங்கு முன்னே சென்றுள்ளது. வெறும் காதில் இரைச்சலை நீக்குவது மட்டுமன்றி, உங்கள் இதயத்தின் துடிப்பையும் அளவிடுகிறது. கூடுதலாக மொழிபெயர்ப்பு பணியையும் செய்கிறது. ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன், போர்ச்சுகீசு மொழிகளை மொழிபெயர்க்கிறது. அதற்கு அடுத்த கட்டமாக சீனமொழி, கொரியன், ஜப்பானிய மொழி ஆகியவற்றை மொழிபெயர்ப்பதாக கூறியுள்ளது. ஆப்பிள் பொருட்கள் சாதாரண விலையில் கிடைப்பதில்லை. எனவே, இதுபோன்ற வசதிகளைக் கொண்ட பொருளின் விலை என்னவாக இருக்கும் என்பதை நீங்களே ஆப்பிள்.காம் போய் தெரிந்துகொள்ளுங்கள். யுனிஹெர்ட்ஸ் செல்போன் ஆண்ட்ராய்ட் போன்தான். அத்தனை ஆப்களும் உண்டு.ஆனால் போன், டெபிட் கார்ட் அளவில் இருக்கும். 3 அங்குல திரைதான். எனவே,உங்களது பிரெயின் ராட் ஸ்க்ரோலிங் அதிகம் செய்யமுடியாது. அளவில் சிறியது என்பதால் எளிதாக எடுத்துச் செல்லலாம். சீன நிறுவனம் இந்தப் போனை தயாரித்து சந்தைப்படுத்தியுள்ளது. போனின் பின்புறம் நத்திங் போனில் அழைப்பு வந்தால் விளக்கு எரியுமே? அதே தொழில்நுட்பம் உள்ளது. சீரியல் பல்ப் கட்டியது மாதிரி அழகாக தெரியு...