இடுகைகள்

நவம்பர், 2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

குழந்தையின் நினைவுகளில் உள்ள தாயின் உருவம்!

படம்
  1920ஆம் ஆண்டு உளவியலாளர்கள் நினைவு, கற்றல் ஆகியவற்றை பற்றி அறிய நரம்பியல் துறையை நாடினர். எனவே அதுபற்றிய ஆய்வுகளை நடைபெற்றன. இதில் முக்கியமான ஆய்வாளர் கார்ல் லாஸ்லி. இவர்தான் மூளையிலுள்ள செல்கள் பற்றி ஆய்வுசெய்து பிறருக்கான வாசலை திறந்து வைத்தார். அவருக்குப் பிறகு கனடா நாட்டைச் சேர்ந்த உளவியலாளரான டொனால்ட் ஹெப் முக்கியமான பங்களிப்பைச் செய்தார். ஹெப்பியன் கற்றல் அழைக்கப்படும் அவரது முறை இன்றும் கடைபிடிக்கப்படுகிறது.  ஒரு குறிப்பிட்ட செயலை திரும்ப திரும்ப செய்யும்போது மூளையிலுள்ள செல்கள் அணியாக திரண்டு நிற்கின்றன. இதன் விளைவாகவே நினைவுகள் உருவாகின்றன என்று டொனால்ட் கூறினார். தனது கொள்கையை விளக்க தி ஆர்கனிசேஷன் ஆஃப் பிஹேவியர்  என்ற நூலை 1949ஆம் ஆண்டு எழுதினார். ஒரு குழந்தை தொட்டிலில் படுக்க வைக்கப்பட்டுள்ளது. அப்போது வீட்டு மாடிப்படிக்கட்டுகளில் யாரோ ஒருவர் ஏறி வருகிறார். அதை குழந்தை கேட்கிறது. அப்படி வருபவர் அந்த குழந்தையை தூக்கினால் யார் தன்னை தூக்குவது என குழந்தை கவனிக்கிறது. தன்னை அள்ளி எடுப்பவர்களின் முகத்தைப் பார்க்கிறது. பிறகு தன்னை தூக்கச் சொல்லி சிணுங்குகிறது. இந்த செயல்கள் எப்

குறுக்கே கௌசிக் வந்தாலும் செய்த காரியத்தை கவனத்தில் கொள்வது எப்படி?

படம்
  பாண்டியன் ஹோட்டலுக்கு செல்கிறீர்கள். அங்கு சோற்றை சுண்ணாம்பு போட்டு வடிப்பார்கள். அதை கொஞ்சம் சாப்பிட்டாலே வயிறு அடைத்துவிடும். அதெல்லாம் இருக்கட்டும். அங்கு இருக்கும் பரிசாரகர் உங்களுக்கு சாப்பிட தயாராக உள்ள பல்வேறு உணவு வகைகளை காட்டுவார். என்னென்ன சாப்பிட்டீர்கள் என்பதை பணம் தராதவரை துல்லியமாக நினைவுவைத்து கல்லாவிலுள்ள முதலாளிக்கு கூறுவார். அப்படி கூறியவுடனே அதை மறந்துவிட்டு அடுத்த ஆளை கவனிக்க போய்விட்டார். ஒருவருக்கு அத்தனை இரைச்சலில், பரிமாறும் வேலைகளை செய்தபடியே அந்தந்த மேசையில் உள்ளவர்களுக்கு என்ன வேண்டும் என்று கேட்டபடியே என்ன சாப்பிட்டார் என்றும் நினைவு வைத்துக்கொள்கிறார். எப்படி சாத்தியமாகிறது? இதை ஸெய்கார்னிக் விளைவு என்று குறிப்பிடுகிறார்கள்.  அதாவது, நிறைவடைந்த செயலை விட நிறைவடையாமல் தொக்கி நிற்கும் செயலே பலரையும் ஈர்க்கிறது. எனவே, அதை கவனத்தில் கொண்டு நிறைவு செய்ய முயல்கிறார்கள்.  அதாவது ஒருவருக்கு வேலைகளை ஒதுக்கிவிட்டு அதன் இடையில் சில தடங்கல்களை செய்தால் முதலில் ஏற்றுக்கொண்ட வேலைகளை கவனமாக செய்யவேண்டும் என முயல்வார்கள். இதனால் அவரின் மூளை சுறுசுறுப்பாகி நினைவுகளை தீவிர

தோல்வி அடைந்தாலும் வெற்றியை பெற சிம்பன்சிகள் செய்த முயற்சி!

படம்
  பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில்,ஜெர்மனியைச் சேர்ந்த உளவியலாளர்கள் பழைய உளவியல் கோட்பாடுகள் பற்றி சந்தேகத்தை எழுப்பினார்கள். இவர்கள் புனித தன்மை கொண்ட அறிவியல் முறையிலான நிரூபணம் செய்யப்பட்ட சோதனை முறைகளை மட்டுமே நம்பினார். இதை கெஸ்சால்ட் என்று அழைத்தனர். இந்த முறையை வோல்ஃப்கேங் கோஹ்லர், மேக்ஸ் வெர்தீமர், கர்ட் காஃப்கா ஆகியோர் உருவாக்கி செயல்படுத்தினர். இதற்கும் கெஸ்சால்ட் தெரபிக்கும் குழப்பிக்கொள்ள வேண்டாம். இதை கெஸ்சால்ட் சைக்காலஜி என்று குறிப்பிட்டனர். இதில் பார்வைக்கோணம், கற்றல், அறிவாற்றல் ஆகிய அம்சங்கள் முக்கியமானவையாக கருதப்பட்டன.  உளவியலில் குண இயல்புகள் பற்றிய பிரிவை மிகவும் எளிமையானதாக இயற்கையின் கோணத்தில் மாறும் இயல்புடையதாக கருதுகின்றனர் என கோஹ்லர் கருத்து கொண்டிருந்தார். இவர், ஆந்த்ரோபாய்ட் ஆராய்ச்சி மையத்தின் தலைவரான பிறகு, தான் நம்பிய கொள்கைகளை அங்கு சிம்பன்சிகளை வைத்துசோதித்தார். சிம்பன்சிகளை கூண்டில் அடைத்து அதன் முன்னர் உணவை வைத்து அதை அடையும் வழிகளை சிக்கலாக்கிவிட்டார். முதலில் உணவை எளிதாக பெற முடியாமல் சிம்பன்சிகள் திணறின என்பது உண்மைதான். ஆனால் பிறகு நிலைமையை

தந்தை - மகன் உறவில் உள்ள இடைவெளிக்கு உண்மையான காரணம்!

படம்
  அப்பா, மகன் உறவு என்பது சினிமாக்களில் வருவதைப் போல எளிதானது அல்ல. சொத்துக்காக அல்லது சமூகத்தின் அழுத்தத்திற்காக ஒருவர் பிள்ளை பெற்றுக்கொண்டாலும் தந்தைகள் பெரும்பாலும் மகன்களோடு நெருக்கமாக பழகுவதில்லை. பெரும்பாலும் இருவருக்கும் இடையிலான உறவில் மௌனமே உள்ளது. ஆண்களின் உறவு சிக்கல்கள் பற்றி பெரிதாக உளவியலாளர்கள் கவலைப்பட்டது இல்லை. ஆனால், பிரெஞ்சு - கனடா நாட்டு உளவியலாளர் கய் கார்னியு என்பவர், இதில் கவனம் குவித்து அப்சென்ட் ஃபாதர்ஸ் லாஸ்ட் சன்ஸ் என்ற நூலை 1991ஆம் ஆண்டு எழுதினார். உளவியலாளர் தன்னுடைய அப்பாவுடனான உறவை முன்னுதாரணமாக வைத்துத்தான் ஆய்வு செய்து நூலை எழுதி வெளியிட்டார்.  பெண் பிள்ளைகளை விடுங்கள். அவர்கள் தங்கள் அழகு, செயல் என ஏதாவது வகையில் பிறரிடம் அங்கீகாரத்தைப் பெற்றுவிடுகிறார்கள். ஆனால் ஆண் பிள்ளைகளுக்கு அவர்களைப் பெற்றவர்களிடமிருந்தே அங்கீகாரம், பாராட்டு கிடைப்பதில்லை. அந்த வகையில் மகன்களுக்கு தங்கள் தந்தையிடமிருந்து மனப்பூர்வமான பாராட்டு பெரும்பாலும் கிடைப்பதில்லை. அப்படி கிடைத்தாலும் கூட அதற்கு வெகு காலம் காத்திருக்க வேண்டியதிருக்கிறது.  ஏன் தந்தை மகனை மனப்பூர்வமாக பாராட

எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது?

படம்
  எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது? என கேள்வி கேட்காத மனங்களே உலகில் இருக்காது. அந்தளவு சோகங்களை தனிப்பட்ட வாழ்க்கையில் ஒன்றாக எடுத்துக்கொண்டு அதை நினைத்தே வருந்துவது, தாழ்வுணர்ச்சி கொள்வது, விரக்தியாக சுற்றுவது, குடிக்கு அடிமையாவது எல்லாம் நடக்கிறது. உண்மையில் இப்படி நடக்கும் சோகமான விஷயங்களை நேரடியான ஒருவரின் குணம், அதிர்ஷடம் சார்ந்த பிரச்னையாக எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை. ஆனால் பெரும்பாலான மக்கள் எதிர்மறையாக நினைப்பதே நடக்கிறது.  உலகில் நல்லவர்களுக்கு நல்லதே நடக்கிறது. கெட்டவர்களுக்கு மோசமான சம்பவங்கள் நடைபெறுகின்றன என நிறைய மக்கள் முன்முடிவுகளை எடுக்கிறார்கள். எனவே, வாழ்க்கையின் போக்கில் நடைபெறும் கருத்துக்கு மாறான ஒரு சம்பவத்தைக் கூட அவர்களால் தாங்கமுடிவதில்லை. இதில் இன்னும் அபாயகரமான விஷயமாக மன அழுத்தம் முற்றி தற்கொலை வரை செல்வதுதான். இதைப் பற்றி விளக்கி மக்களுக்கு சிகிச்சை செய்த உளவியலாளர்தான் டோரத்தி ரோவே.  வேலை இழப்பு, புயல் சேதம், பெற்றோர் இறந்துபோவது என சம்பவங்கள் நடப்பதற்கு தனிநபரை குற்றவாளியாக்க முடியாது. அதை அவரே மனதிற்கு அருகில் வைத்துக்கொண்டு கவலைப்படுவது தவறு. இதில

போர், பாலியல் சீண்டல், வன்முறையால் குழந்தைகளுக்கு நேரும் உளவியல் குறைபாடுகள்!

படம்
  பிரான்ஸ் நாட்டில் உள்ள போர்டியக்ஸ் நகரில் போரிஸ் சைருல்னிக் பிறந்தார். இரண்டாம் உலகப்போருக்கு சிறிது முன்னதாக பிறந்தார். இவரது பெற்றோர் வாழ்ந்த பகுதியின் ஆட்சி வேறு ஒரு குழுவிற்கு மாறியதால், அவர்கள் ஜெர்மனியுடன் உடன்படிக்கை செய்துகொண்டனர். இதனால் யூதராக போரிஸின் வீடு சோதனை செய்யப்பட்டு யூதரான பெற்றோர் ஆஷ்விட்சிலுள்ள வதைமுகாமுக்கு கொண்டு செல்லப்பட்டனர். குழந்தையை மட்டும் பாதுகாப்பாக வளர்க்க ஒரு குடும்பத்திடம் ஒப்படைத்துவிட்டு சென்றனர். ஆனால் அவர்களோ சிறியளவு தொகைக்கு ஆசைப்பட்டு சிறுவனை அதிகாரிகளிடம் காட்டிக்கொடுத்தனர். சிறுவனான போரிஸ் விரைவில் வதைமுகாமுக்கு மாற்றப்படும் நிலையில் அங்கிருந்து தப்பி பண்ணை ஒன்றில் வேலை செய்யும் தொழிலாளியாக மாறினார். தன்னைத்தானே பராமரித்துக்கொண்டு கல்வியை தானாகவே கற்றுக்கொண்டார். உறவுகளே இன்றி வளர்ந்தவர், பாரிஸ் பல்கலைக்கழகத்தில் மருத்துவம் படித்தார். தன்னுடைய வாழ்க்கையை ஆய்வு செய்ய நினைத்தவர், உளப்பகுப்பாய்வு, நியூரோசைக்கியாட்ரி ஆகியவற்றை கற்றார். தனது வாழ்வு முழுவதும் மோசமான விபத்து, வன்முறையால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு சிகிச்சை அளிப்பதில் செலவிட்டார

மருந்தில்லாமல் உளவியல் குறைபாடு குணமாக வாய்ப்புள்ளதா?

படம்
  ஸ்காட்லாந்தின் கிளாக்ஸோவில் பிறந்தவர் ஆர் டி லைங். கிளாக்ஸோ பல்கலையில் மருத்துவம் படிப்பை படித்தவர், பிரிட்டிஷ் ராணுவத்தில் உளவியலாளராக பணியாற்றினார். அங்கு மனநிலை சிதைந்துபோன நோயாளிகளைப் பார்த்தார். அவர்களுக்கு சிகிச்சை அளிக்க முயன்றார். அந்த ஆர்வம் அதிகமாக, லண்டனில் இயங்கிய லாவிஸ்டாக் என்ற மருத்துவமனையில் உளவியல் சார்ந்த சிகிச்சைகளுக்காக பயிற்சி பெற்றார்.  1965ஆம் ஆண்டு லைங் மற்றும் அவரது சகாக்கள் பிலடெல்பியா அசோஷியேஷன் என்ற அமைப்பைத் தொடங்கினர். இந்த அமைப்பில்  உள்ளவர்களும், உளவியல் குறைபாடு உள்ளவர்களும் ஒரே கட்டிடத்தில் ஒன்றாகவே வாழ்ந்தனர். அன்றைக்கு பிரபலமாக இருந்த உளவியல் சிகிச்சை முறைகளுக்கு முழுக்க எதிரானதாக குடும்ப சிகிச்சை முறை இருந்தது. அதை முழுமையானதாக லைங் உருவாக்கவில்லை. அவரது குண இயல்புகளும், சிகிச்சை செயல்பாடுகளும், ஆன்மிக செயல்பாடுகளும் பின்னாளில் அவரது பெருமையை உருக்குலைத்தன. 1989ஆம்ஆண்டு மாரடைப்பால் காலமானார்.  முக்கிய படைப்புகள்  1950 the divided self 1961 the self and others 1964 sanity madness and the family 1967 the politics of experience பத்தொன்பதாம் நூற்றாண்ட

உளவியல் பிரச்னைக்கு நேரடி தீர்வு!

படம்
  உளவியல் சிகிச்சை என்பது முதலில் நோயாளியை அடிப்படையாக கொண்டு இயங்கியது. அதாவது, தனக்கு நேர்ந்த பிரச்னைகளை அனுபவங்களை அவர் கூறுவது சிகிச்சையில் முக்கியமான அங்கம். இந்த வகையில் மருத்துவர் நோயாளியின் நோய் வரலாறு, உணர்வுரீதியான வலி, வேதனை, குண இயல்புகளின் மாற்றம் ஆகியவற்றை அறிந்துகொண்டார். இந்த வகையில் சிகிச்சை அளிப்பதை இன்சைட் என்று ஆஸ்திரிய அமெரிக்க உளவியலாளர் பால் வாட்ஸ்லாவிக் குறிப்பிட்டார்.  உலகில் பலரும் மகிழ்ச்சியாக இருக்க முடியும். ஆனால் ஒருவர் துயரத்தில் முழ்கியிருந்தால் அவரைப் பற்றி ஆழ்ந்து அறிவது முக்கியம் என்று பால் கூறினார். இதனால், அவர் பிரச்னைகளின் மீது நேரடியான சிகிச்சையை செய்தார். அதற்கு முன்னர் வரை ஒருவரின் கடந்தகாலத்தை அறிந்து பிறகே நோயின் வேரைக் கண்டுபிடித்து அதை தீர்க்க நினைத்தனர். ஆனால் இந்த முறை நோயாளியை மேலும் துயரத்தில் தள்ளியது. எடுத்துக்காட்டாக, ஒருவரை அன்பாக பார்த்து வளர்த்த அம்மா நோய்வாய்ப்பட்டு இறந்துவிடுகிறார். அவரது மகனால் அதிலிருந்து மீள முடியவில்லை. அவருக்கு சிகிச்சை அளிக்க மீண்டும் தாய் இறந்ததைப் பற்றி நினைவுபடுத்துவது மேலும் வலியை வேதனையை உருவாக்கும். இ

உலகை புதிய கோணத்தில் பார்க்க வலியுறுத்திய உளவியலாளர் - டிமோத்தி லேரி

படம்
  அமெரிக்காவைச் சேர்ந்த உளவியலாளர் டிமோத்தி லேரி. இவர் 1960ஆம் ஆண்டு டர்ன் ஆன், ட்யூன் இன், ட்ராப் அவுட் எனும் கொள்கை ஒன்றை உருவாக்கி பிரபலப்படுத்தினார். ஆனால் இந்த கொள்கை வாழ்க்கை பற்றிய புதிய அணுகுமுறையைக் கொண்டிருந்தது. இதை அன்றைக்கு தவறாக புரிந்துகொண்டவர்களே அதிகம்.  மேலே சொன்ன வரிசைப்படி ஒருவர் தனது வாழ்வை பின்பற்றவேண்டும் என டிமோத்தி கூறவில்லை. அது ஒரு வரிசை முறை. ஒட்டுமொத்த சமூகமும் அரசியலால் களங்கப்படுத்தப்பட்டுவிட்டது. அதை ஒருவர் தூய்மை செய்யவேண்டும். மையச் சமூகத்தில் இருந்து எந்த கருத்துகளையும் எடுத்துக்கொள்ளாமல் ஒருவர் சுயசிந்தனையோடு வாழப் பழகவேண்டும். இந்த அடிப்படையில்தான் அவர் ட்ராப் அவுட் என்ற வார்த்தையைக் கூறினார். ஆனால் மக்கள் தாங்கள் செய்து வந்த வேலையை விட்டு விலகவேண்டும் என்று புரிந்துகொண்டனர். அப்படியான அர்த்தத்தில் அவர் கூறவில்லை.  டர்ன் ஆன் என்ற வார்த்தையை ஒருவர் தன்னுணர்வு நிலையை உணர்ந்து யதார்த்த நிலையை புரிந்துகொள்ளவேண்டும் என்ற அர்த்தத்தில் கூறினார். ஆனால் அத்தகையை நிலைக்கு மனித மனத்தை கொண்டு வர போதைப்பொருட்களை பயன்படுத்த கூறினார். எல்எஸ்டி என்ற மாயக்காட்சிகளை

இந்துத்துவா எனும் கருத்தியலை குறுகிய மனத்துடன் சுயநலனிற்கு பயன்படுத்துபவர்களைப் பற்றி விளக்கும் நூல்!

படம்
  நான் ஏன் இந்துவாக இருக்கிறேன் - சசி தரூர் கிழக்கு பதிப்பகம் 341 பக்கங்கள் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சசிதரூர் எழுதிய நூலை வலதுசாரி கருத்தியல் கொண்ட கிழக்கு பதிப்பகம் ஏன் வெளியிட்டுள்ளது என வாசகர்களுக்கு சந்தேகம் எழலாம். அதற்கான பதில் தலைப்பிலேயே உள்ளது.  இந்துமதம் எப்படிப்பட்டது, அதில் உள்ள தன்மைகள் என்ன, அதற்கு உழைத்த ஆதிசங்கரர்,ராமானுஜர் ஆகியோரின் பங்களிப்பு, சங்கரர் உருவாக்கிய மடங்கள், அதன் பணிகள், நிறுவன மதங்களுக்கும் இந்து மதத்திற்கும் உள்ள வேறுபாடுகள் என முதல் பகுதி விளக்குகிறது. இதற்குப்பிறகு சசி தரூர் விளக்குவது இந்துத்துவா என்ற கொள்கையை உருவாக்கிய சாவர்க்கர், அதை மேம்படுத்திய கோல்வால்கர், ஹெட்கேவர் ஆகியோர் எப்படி அதை குறுகிய நோக்கத்தில் பார்த்து மக்களின் மத நம்பிக்கையை சுயநலனிற்கு பயன்படுத்திக்கொண்டனர் என்பதை விளக்கியிருக்கிறார்.  இங்குதான் ஆர்எஸ்எஸ் என்ற தீவிரவாத அமைப்பின் செயல்பாடு உள்ளே வருகிறது. கலாசார தேசியம் என்ற பெயரில் நிறுவன மதங்கள் போலவே இந்து மதத்தை எந்தெந்த வழிகளில் மாற்ற முயல்கிறார்கள் தெளிவாக கோடிட்டு காட்டுகிறார் நூலாசிரியர். நூலை தொடக்கத்தில் படித்தது, இ

ஈரானிய அரசு கொடூரமான முறையில் போராட்டக்காரர்களை அச்சுறுத்தி உண்மையை மறைக்க முயல்கிறது - நர்கேஸ் மொகம்மதி

படம்
  நர்கேஸ் மொகம்மதி நர்கேஸ் மொகம்மதி, அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர் உங்களுடைய இளமைக்காலத்தை நினைத்துப்பார்க்கும்போது, ஈரானிய குடும்பம் இப்படித்தான் இருக்கும் என நாங்கள் புரிந்துகொள்ளள ஏதாவது விஷயங்கள் உண்டா? ஈரானில் குடும்ப உறவுகள் வலிமையானவை. அதோடு இணைந்த சொந்த பந்த உறவுகளும் அதேபோல்தான். இந்த வகையில் எனது அம்மாவின் குடும்ப உறவுகளில் அரசியலில் தீவிரமாக ஊக்கமாக ஈடுபட்டிருந்தனர். 1979ஆம் ஆண்டு புரட்சியில், எனது அம்மா குடும்பத்தினர் சிலரும், அப்பாவின் குடும்பத்தினர் சிலரும் சிறைப்பட்டனர். தூக்கிலும் போடப்பட்டனர். இந்த சம்பவங்கள்தான் எனது சிறுவயது நினைவுகளாக போராட்டத்தையும் எதிர்ப்பையும் நினைவூட்டி வருகின்றன.  ஈரானிய பெண்ணாக ஒருவரின் வாழ்க்கை எப்படி இருந்தது? எனது அம்மா, அரசு வற்புறுத்திய கருப்பு நிறு பர்காவை அணியவில்லை. வண்ண நிறங்களைக் கொண்ட உடைகளை அணிந்தார். ஆனால் அரசு தனது கருத்துகளை மதிப்புகளை மக்கள் மீது திணித்தது. மக்கள் கொண்டிருந்த கருத்துகளுக்கும் அரசுக்கும் பொருந்திப்போகவில்லை. தொன்மை பழக்க வழக்கங்களை உடைத்து சுதந்திரம் கேட்கும் போராட்டங்கள் இன்று வரை நடந்து வருகின்றன. பெண்கள்,

நடைபெறும் அனுபவத்திற்கு நல்லது கெட்டது என்ற இயல்பு கிடையாது!

படம்
  கிரேக்க தத்துவவாதியான எபிக்டெட்டஸ், மனிதன் தன் வாழ்க்கையில் சந்திக்கும் சம்பவங்களால் பாதிக்கப்படுவதில்லை. அதைபற்றிய பார்வைகளால் கோணங்களால்தான் துயரத்தை சந்திக்க நேருகிறது என்று கூறினார். அதே சிந்தனையை அப்படியே உளவியலுக்கு மாற்றி கூறியவர் உளவியலாளர் ஆல்பெர்ட் எல்லிஸ். இவர். 1955ஆம்ஆண்டு ரெப்ட் என்ற சிகிச்சையை தான் நம்பிய கொள்கையை அடிப்படையாக கொண்டு உருவாக்கினார். ஒரு மனிதர் சந்திக்கும அனுபவத்திற்கு நல்லது கெட்டது என்ற இயல்பு கிடையாது. ஆனால், மனிதர்கள் அதை எப்படி பார்க்க விரும்புகிறார்களோ அதன்படி அனுபவம் அமைகிறது.  நாற்பது, ஐம்பதுகளில் எல்லிஸ் தனது மருத்துவமனையில் சிகிச்சைக்கு வந்த நோயாளிகளை ஆய்வு செய்தார். அவர்கள், தங்களுக்கு இருக்கும் பிரச்னை ஒன்று தீர்ந்தால் இன்னொன்றை அதே இடத்திற்கு கொண்டு வந்து வருந்திக்கொண்டு இருந்தனர். எனவே,இதற்கு சிகிச்சை என்பது அவர்கள் தங்கள் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களை வேறு ஒரு கோணத்தில் பார்ப்பதுதான் என எல்லிஸ் முடிவு செய்தார். இதற்கு ஒரு எளிய உதாரணத்தை பார்ப்போம். ஒருவரை திடீரென வேலையில் இருந்து நீக்குகிறார்கள். இதற்கு அலுவலக குழு அரசியல், ஒருபக்க சார்ப

குடும்பமே மனிதர்களின் ஆளுமைகளை உருவாக்குகிறது! - வர்ஜினியா சாடிர்

படம்
  ஒரு குடும்பம் சமூகத்திற்கு என்ன செய்கிறது? அங்குதான் சமூகத்தை முன்னே கொண்டு செல்ல, பின்னே கொண்டு செல்வதற்கான பல்வேறு மனிதர்கள் உருவாகி வருகிறார்கள். அமெரிக்க உளவியலாளர் வர்ஜினியா சாடிர் என்பவர், ஒருவரின் ஆளுமை உருவாகி வளர அவரின் குடும்பமே முக்கியக்காரணம் என்று கூறினார். ஒருவரின் ஆளுமை நல்லவிதமாக அல்லது கெட்டவிதமாக வளருவதற்கு குடும்ப சூழலே முக்கியமானதாக உள்ளது.  ஆரோக்கியமான குடும்பத்தில் அன்பு காட்டுவது வெளிப்படையானதாக நடைபெறும். அதில் மறைக்க ஏதுமில்லை. நல்ல முறையில் உறவினை வளர்ப்பது ஒருவரின் உளவியலை மேம்படுத்தி பக்குவப்படுத்துகிறது.  குடும்பத்தில் உள்ள உறுப்பினர்களோடு பேசி பழகி அன்பு காட்டி, எதிர்வினை அளிப்பதன் வழியாக சமூகத்தோடு உரையாடுவதற்கான சூழல் உருவாகிறது. மனச்சோர்வு இருக்கும்போது கூட முன்னர் நாம் செய்த பல்வேறு குடும்ப பாத்திரங்கள்தான் மனதிற்கு ஆறுதல் தந்து உதவுகிறது. நம்மை கட்டமைக்கிறது. எனவே குடும்பமே மனிதர்களை கட்டமைத்து வெளியே அனுப்பும் தயாரிப்பு சாலையாக உள்ளது. குடும்பத்தில் உள்ள சில பாத்திரங்களை வர்ஜினியா விவரிக்கிறார். எப்போதும் குறைகளைக் கூறிக்கொண்டே இருப்பவர், புத்திசால

இருத்தலியல் உளவியலின் தந்தை ரோலோ மே!

படம்
  பத்தொன்பதாம் நூற்றாண்டில் மார்ட்டின் ஹெய்டெகர், ஃபிரடெரிக் நீட்சே, சோரன் கியர்கெகார்ட் ஆகியோர் அன்றை சமூக நிலைக்கு எதிராக புதிய கருத்துகளை கூறினர். இதன் வழியாக மனிதர்களின் வாழ்க்கையை புரிந்துகொள்ளும் வழி கிடைக்கும் என நம்பிக்கை உருவாகியது. இதை இருத்தலியம் என்று கூறலாம். தன்னம்பிக்கை, தனிப்பட்ட பொறுப்பு, அனுபவங்களை எப்படி புரிந்துகொள்வது, வாழ்க்கையின் அர்த்தம் பற்றிய கேள்வி ஆகியவை இருத்தலிய கொள்கையில் முக்கிய அம்சங்களாக கருதப்பட்டன. 1950ஆம் ஆண்டு, உளவியலாளர் ரோலோ மே  தி மீனிங் ஆஃப் ஆன்க்சைட்டி என்ற நூலை எழுதினார். அதில், மனிதர்களை மையப்படுத்திய உளவியல் முறையை விளக்கியிருந்தார். இதன் காரணமாக ரோலோ மே இருத்தலியல் உளவியலின் தந்தை என பெருமையுடன் அழைக்கப்படுகிறார்.  வாழ்க்கை என்பது முழுக்க அனுபவங்களால் நிறைந்தது. அதில் வலி, வேதனை என்பது கூட இயல்பான அனுபவங்களின் பகுதிதான். பல்வேறு அனுபவங்களை தேடுவதன் வழியாக ஒருவர். தன்னை சமநிலையுடன் வைத்துக்கொள்ள முடியும். பழக்கமான சூழலில், இலகுமான அனுபவங்களை எதிர்கொள்வதன் மூலம் உடல், மனம் என இரண்டையும் ஒருவர் சமநிலையில் வைத்துக்கொள்ளமுடியும். இப்படி பழக்கப்

வதை முகாமில் மூன்று ஆண்டுகள் சித்திரவதைகள் அனுபவித்து உளவியல் கொள்கைகளை உருவாக்கிய விக்டர் பிராங்கல்!

படம்
  வியட்நாமைச் சேர்ந்த உளவியலாளர் விக்டர் ஃபிராங்கல். மன அழுத்தம், தற்கொலை எண்ணத்தை தடுப்பது ஆகியவற்றில் புகழ்பெற்ற வல்லுநர். 1942ஆம் ஆண்டு விக்டர் அவரது மனைவி, பெற்றோர், சகோதரர் ஆகியோர் நாஜிகளின் வதை முகாமுக்குகொண்டு செல்லப்பட்டனர். அங்கு மூன்று ஆண்டுகள் கடுமையான சித்திரவதையில் உயிர் பிழைத்தவர் விக்டர் மட்டுமே. 1946ஆம் ஆண்டு மேன்ஸ் சர்ச் ஃபார் மீனிங் என்ற நூலை தனது வதை முகாம் அனுபவங்களை முன்னுதாரணமாக வைத்து எழுதினார். மனிதர்களுக்கு இரண்டுவிதமான மனநிலைகள் உண்டு. அவை வலி, வேதனையைப் பொறுத்துக்கொண்டு துயரமான சூழ்நிலையைக் கடந்து வாழ்க்கையை வாழ உதவுகிறது. முடிவெடுக்க உதவுவதோடு, சுதந்திரமான இயல்பையும் உருவாக்கித் தருகிறது. நம்மைச்சுற்றி நடைபெறும் சூழ்நிலைகள் மூலம் நாம் எப்படி மாற்றம் பெறுகிறோம் என்பதை நாமே தீர்மானிக்கலாம். அதற்கு சூழலின், பிறரின் கருணையை எதிர்பார்க்க வேண்டியதில்லை என விக்டர் கூறினார்.  விக்டரிடம் ஆலோசனைக்கு நோயாளி ஒருவர் வந்தார். அவருக்கு கவலை அவர் இறப்பது பற்றியல்ல. அவர் இறந்த மனைவியை நினைத்து வருந்தினார். அவரிடம் விக்டர், உங்கள் மனைவிக்கு  முன்னரே  நீங்கள் இறந்துபோனால் என்ன

வாழ்க்கையின் நோக்கத்தை தேடும் மனிதர்களின் பயணம்!

படம்
  ஒருவரின் வாழ்வில் ஏதாவது ஒரு கட்டத்தில் நாம் எதற்காக பிறந்தோம், எதற்காக இந்த வாழ்க்கை என்று தோன்றும். இந்தக் கேள்விகளுக்கு எதற்கு ஒருவர் பதில்களை தேடுகிறார்? அப்போதுதான் அவர் தன்னை எது திருப்திபடுத்துகிறது, எங்கு குழப்பம் ஏற்படுகிறது என்பதை அடையாளம் கண்டுபிடிக்க முடியும். உணவு, தூக்கம், பாலுறவு என்பதெல்லாம் ஒருவரின் அடிப்படையான தேவைகள். இதெல்லாம் தாண்டி மனதில் ஏற்படும் திருப்தி உணர்வு என்பது முக்கியமானது. அதை அடையாதவர்கள், எதனால் தனக்கு திருப்தி கிடைக்கவில்லை என்று அறிய முயன்று அலைந்துகொண்டே இருப்பார்கள்.  இருபதாம் நூற்றாண்டில் மேற்சொன்ன விஷயங்கள் புதுவிதமான சூழ்நிலையில் வந்து நின்றன. உளவியலாளர் ஆபிரகாம் மாஸ்லோ, மனிதநேயம் கொண்ட உளவியல் முறையை அறிமுகப்படுத்தினார். இதில் காதல், நம்பிக்கை, உண்மை, ஆன்மிகம், தனித்துவம், இருத்தல் என அனைத்துமே உண்டு. இந்த முறை மூலம் ஒருவர் தன்னுணர்வு நிலையைத் தொட்டு தன்னை உணர முடியும். மனிதர்களின் தேவைகளை பிரமிடு வடிவில் உருவாக்கினார். அதில் ஒருவரின் அவசிய தேவைகள், அறிவுசார் தேவைகள், பாதுகாப்பு தேவைகள் என அனைத்துமே இடம்பெற்றிருந்தன. ஒருவருக்கான அவசியத் தேவை

செக்ஸ் குற்றவாளிகளை வேட்டையாடி பழியை மர்மநாவல் விற்கும் புத்தகடைக்காரர் மீது போடும் கொலைகாரன் யார்?

படம்
  லீக்கிங் புக்ஸ்டோர்  தாய்லாந்து டிராமா - டி டிராமா 10 எபிசோடுகள் மழைக்கு ஒழுகும் புத்தக கடை, இதை கேட்கவே கொஞ்சம் வித்தியாசமாக இருக்கிறது அல்லவா? அதேதான் தொடரின் பலமும் கூட. மொத்தம் நான்கு கல்லூரி நண்பர்கள் டிடக்‌ஷன் எனும் மர்மக்கதைகள் மட்டுமே விற்கும் புத்தக கடையில் சந்திக்கிறார்கள். இதில் முதன்மையானவர், அதாவது நாயகன் காவோ வென். இவர்தான் நால்வரில் சற்று வசதியான வீட்டுப்பிள்ளை, முன்னாள் நீதிபதியின் மகன். ஆனால் சட்டம் படிக்காமல் புத்தக கடை வைத்துக்கொண்டு உட்கார்ந்துவிட்டார். அடுத்து, உளவியல் மருத்துவராக உள்ள நண்பர், அவரோடு ஒரே அறையில் வசிக்கும் பெண் தோழி, அவள், தன்னார்வ தொண்டுநிறுவனத்தில் வேலை செய்கிறாள். இவர்களுக்கு அடுத்து கல்லூரியில் ஜூனியராக படித்த லான் என்ற இளம்பெண். இவர் மருந்துக்கடையி்ல் வேலை செய்கிறார்.  காவோ வென்,புத்தக கடை வருமானத்தை வைத்துதான் தனது செலவுகளை சமாளிக்கிறார். மர்மநாவல் போட்டி ஒன்றில் பங்கேற்று கதை ஒன்றை எழுதி வருகிறார். தி யெல்லா டாக்சி கேப் என்பது அதன் பெயர். இதில் பரிசாக கிடைக்கும் பணத்தை வைத்து கடையில் மழைநீர் ஒழுகும் பிரச்னையை சரி செய்ய நினைக்கிறார். நண்பர்க

கேனில் அடைக்கப்பட்ட உணவு கெட்டதா? - உண்மையா - உடான்ஸா

படம்
  உண்மையா, உடான்ஸா? கேனில் அடைக்கப்பட்ட உணவுகளை விட அவ்வப்போது சந்தையில் விற்கப்படும் காய்கறிகளை வாங்கி சாப்பிடுவதே சிறப்பு.  உண்மை அதெல்லாம் காசு கொட்டிக்கிடப்பவர்களுக்கு சரி. சாதாரண ஏழை மக்களுக்கு சரிபடாது. கேனில் உள்ள பழங்கள், காய்கறிகளை குறைந்த விலைக்கு சூப்பர் மார்க்கெட்டில் வாங்கலாம். சந்தையில் விற்கும் பழங்கள், காய்கறிகளின் விலை மாறிக்கொண்டே இருக்கும். அதை அந்தந்த நேரத்தில் வாங்குவது அனைவருக்கும் முடியாது. சத்துகள் விஷயத்தில் பெரிய மாற்றங்கள் ஏதுமில்லை. புதிதாக பறித்து விற்கப்படும் காய்கறி, பழங்களைப் போவே கேனில் அடைக்கப்பட்ட பழங்களும் இருக்கும். சத்துகள் பெரிதாக இழக்கப்படாது. அதில் பதப்படுத்துவதற்காக சேர்க்கப்படு்ம் சர்க்கரை, உப்பு ஆகியவற்றை சோதித்துக்கொண்டு சாப்பிட்டால் நல்லது.  கொழுப்பு என்றாலே கெட்டதுதான். உண்மை 1940ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வில் கொழுப்பு அதிகமான உணவுகளை எடுத்துக்கொண்டால் இதயத்திற்கு ஆபத்து. கொழுப்பு குறைவான உணவுமுறை இதய நோய்களை குறைக்கும் என ஆய்வாளர்கள் அறிக்கை வெளியிட்டனர். 1980ஆம் ஆண்டு கொழுப்பு குறைவான உணவுமுறை மக்கள் அனைவருக்குமே நல்லது. இதயநோய், உடல் பரு

முன்முடிவுகளின்றி வாழ்க்கையை வாழ்ந்தாலே ஆனந்தம்தான்!

படம்
  பத்தொன்பதாம் நூற்றாண்டு, இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மனநல குறைபாடு என்பது சரிவர புரிந்துகொள்ளப்படவில்லை. அதனை எதிர்மறையாகவே மருத்துவர்களும், மக்களும் புரிந்துகொண்டனர். அதைப்பற்றி பேசியும், எழுதியும் வந்தனர். மனநல குறைபாடு என்றால் இதுதான் என்று  வரையறைகளும், அதை தீர்ப்பதற்கான முறைகளும் கூறப்பட்டன.  மனிதர்களுக்கு ஏற்படும் மனநல குறைபாடு என்பது பன்மைத்தன்மையானது. அதை குறிப்பிட்ட இறுக்கமான வரையறைக்குள் அடைப்பது சரியானது அல்ல என்ற கருத்தை அமெரிக்க உளவியலாளரான கார்ல் ரோஜர்ஸ் கொண்டிருந்தார். மனநிலையை குறிப்பிட்ட வரையறைக்குள் அடைப்பதை அவர் ஏற்கவில்லை. நல்ல மனநிலையை ஒருவர் அடைவதற்கு குறிப்பிட்ட செயல்நிலைகள் கிடையாது என கூறினார். வாழ்க்கை ஒவ்வொரு கணமும் நடந்துகொண்டே இருக்கிறது. நாமும் வாழ்ந்துகொண்டே இருக்கிறோம். அதன் வழியாக அனுபவங்கள் கிடைத்துக்கொண்டே உள்ளது. எனவே, மனநிலை சீர்கெட்டு உள்ளதாகவும், அதை ஒருவர் சரிசெய்துகொள்ளவேண்டும் என்பதையும் ரோஜர்ஸ் ஏற்கவில்லை.  நல்ல வாழ்க்கையை ஒருவர் வாழ அவர் புதிய அனுபவங்களுக்கு தனது மனதை திறந்து வைக்க தயாராக இருக்கவேண்டும். நிகழ்காலத்தில் வாழ வேண்டும்.

உடல் மனதை பகிர்ந்தாலும் தனித்துவத்தை இழக்காமல் ஒருவரால் காதலிக்க முடியுமா?

படம்
வாழ்க்கையில் சோறு தின்பதற்கு தரித்திரம் துரத்தாமல் இருப்பவர்கள், நிச்சயம் தான் யார் என்பதற்கான தேடுதலை செய்வார்கள். இதற்காக சினிமா நடிகர்கள் படிக்கும் ஆன்மிக புத்தகங்களை தேடுவது, ஞான யோகியான ரமணரின் ஆசிரமத்தில் அடம்பிடித்து நுழைவது என செய்வார்கள். அடிப்படையான நோக்கம் தான் எதற்கு பிறந்திருக்கிறோம், என்ன செய்யப்போகிறோம், அதாவத நம் மூலம் என்ன நடக்கவிருக்கிறது என அறிவதுதான். ஒருவருக்கு கண்முன்னே இரு பாதைகள் உண்டு. ஒன்று மகிழ்ச்சியும் திருப்தியும் நிறைந்த பாதை. அடுத்து, கடினமான அதிருப்தியான பாதை. வாழ்க்கைக்கான அர்த்தம் தேடுவது என்பதே மோசமான வாழ்க்கையை சமாளிக்கும் பொருட்டுதான் என்று உளவியலாளர் எரிக் ஃப்ரோம் கூறுகிறார்.  அன்புகொண்ட வாழ்க்கையே நல்ல மனிதனை உருவாக்குகிறது என எரிக் நம்பினார். வாழ்க்கை உணர்ச்சிகரமான விரக்தியைக் கொண்டது. ஒரு மனிதர் இயற்கையிலிருந்து தன்னை பிரித்துப் பார்க்கிறார். அவரின் இன்னொரு பகுதி, பிறரோடு தன்னை இணைத்துப் பார்த்து பொருத்திக்கொள்ள முயல்கிறது. இயற்கையிலிருந்து மனிதர்கள் வேறுபட்டு இருப்பதற்கான காரணம், அவர்களின் புத்திசாலித்தனம்தான். அறிவு கூடும்போது மெல்ல இயற்கையிலி

ஒரே பெண்ணை காவல்துறை அதிகாரி காதலிக்க, சீரியல் கொலைகாரன் பாதுகாக்க நினைக்க.. மூவரது வாழ்க்கையை இணைக்கும் காலச்சரடு!

படம்
  பார்ன் அகெய்ன் கே டிராமா 32 எபிசோடுகள் இரண்டுபிறவி கதை. முதல் பிறவியில் நிறைவேறாத ஆசைகளுடன் இறந்த மூன்றுபேர் மீண்டும் பிறந்து வாழ்க்கையை வாழ முயல்கிறார்கள். அவர்களது வாழ்க்கை எப்படி அமைந்தது என்பதே கதை. பதினாறு எபிசோடுகள் வரும் கதையை, அரைமணி நேரமாக பிரித்து சீன தொடர்கள் அளவுக்கு நீட்டியிருக்கிறார்கள். இதுதான் தொடரைப் பற்றிய முதல் மைனஸ் பாய்ண்டாக சொல்லவேண்டும். இந்த தொடரில் கொலை, அதைப்பற்றிய விசாரணை, நீதிமன்ற உரையாடல்கள் என நிறைய விஷயங்கள் உண்டு. ஆனால் கதையின் போக்கு நிதானமாகவே இருக்கிறது. பெரிய பரபரப்பு, திகில் என எதையும் அடையவேண்டியதில்லை. இந்த கதையை அதிகாரத்தில் உள்ளவர்களின் சுயநலம், முன்முடிவுகளால் பாதிக்கப்படும் அப்பாவி ஒருவரின் கதை என்று எளிமையாக கூறலாம். சமூக பொதுப்புத்தியில் கொலைகாரரின் மகன் கொலைகாரன்தான், திருடனின் மகன் திருடன்தான் அல்லது குற்றவாளியாகவே இருப்பான் என நினைக்கப்படுவதை தொடரில் வரும் நாயகியைத் தவிர்த்த பிற பாத்திரங்கள் முழுமையாக ஏற்கிறார்கள். அதைப்பற்றிய குற்றவுணர்ச்சியே இல்லாமல் இயங்குகிறார்கள். இதனால் சீரியல் கொலைகாரரின் மகன் வாழ்க்கை அபாயத்தில் சிக்குகிறது. செய