கொலைக்குற்றவாளியாக்கப்பட்ட தங்கையின் கணவரைக் காப்பாற்ற நாயகன் செய்யும் அசகாய செயல்கள்!

 







மாநகரிலோ மாயகாடு

சிரஞ்சீவி, விஜயசாந்தி 


சிரஞ்சீவி ஹைதராபாத்தில் சிறியளவு பிக்பாக்கெட், பணத்தை திருடும் மனிதராக வாழ்கிறார். இவருக்கென தனி திருட்டு நண்பர்கள் குழுவே உள்ளது. அவர்களுக்கு வேலை சொல்லி திருட்டை நடத்துவது சிரஞ்சீவிதான். இப்படியான அவரது வாழ்க்கையில் முக்கியமான நோக்கம், தங்கைக்கு திருமணம் செய்து வைப்பதுதான். தங்கை கிராமத்தில் வாழ்கிறாள். இந்த நிலையில் அவளுக்கு திருமணம் நடந்திருப்பதும், மாப்பிள்ளை ஹைதராபாத்திற்கு வந்திருப்பதாகவும் கிராமத்து மனிதர்கள் மூலம் தகவல் கிடைக்கிறது. ஆனால் சிரஞ்சீவி செய்யும் தவறான பொய்சாட்சியால் மாப்பிள்ளை சிறையில் அடைக்கப்படுகிறார். அவரை மீட்டு உண்மையை வெளியே கொண்டு வருகிறார். அது என்ன உண்மை என்பதே கதை. 


படத்தில் நடக்கும் கொலை முயற்சி என்னவென்பதை பார்வையாளர்கள் முன்னமே அறிந்தாலும் அதில் உள்ள பாத்திரங்கள் அறிவதில்லை. 


போலீஸ் அதிகாரி, பாசத்தால் ஈர்க்கப்பட்டு தனது கடமை, பொறுப்பை துறப்பதுதான் முக்கியமான திருப்புமுனை. ஆனாலும் கூட அவர் தான் பிடித்து வைத்திருப்பவர்களை இம்சிப்பதில்லை. தனது மகளின் வாழ்க்கையைக் காக்க நினைக்கிறார். ஆனால் அது சட்டவிரோத கும்பலுக்கு சாதகமாக அவர்கள் போலீஸ் அதிகாரியை மிரட்ட முயல்கிறார்கள்.இதை அறிந்து நாயகன் எப்படி உண்மையைக் கண்டுபிடித்து தனது தங்கையின் கணவரை தண்டனையில் இருந்து காக்கிறார் என்பதே கதை. 


போலீஸ் அதிகாரியின் மகள் தனது சாடிஸ கணவனை எதற்கு அந்தளவு நேசிக்கவேண்டும் என்று புரியவில்லை. இத்தனைக்கும் கணவன் பாரில் நன்கு குடித்துவிட்டு சாப்பிட்டுவிட்டு வருகிறான். ஆனால் மனைவி சாப்பிடுவதை தடுக்கிறான். இதனால் பல நாட்கள் பட்டினியாக கிடந்து உடல்நலம் குன்றிப்போகிறது. அவளை விஷம் வைத்து கொன்றுவிட்டு கிளப் நடத்தும் பெண்ணை மணம் செய்துகொள்ள நினைக்கிறான். இப்படிப்பட்ட கணவனுக்காக கிளப் பெண்ணை கொலை செய்கிறாள் மனைவி. அதை மறைக்க தனது போலீஸ் அதிகாரி அப்பாவிடம் உதவி கோருகிறாள். அவரும் செய்கிறார். இங்குதான் சிர்ஞ்சீவியின் தங்கை கணவர், அப்பாவித்தனமாக மாட்டிக்கொள்கிறார். சிறை செல்கிறார். 


விஜயசாந்தி பாத்திர படைப்பு தெளிவாக இல்லை. அங்கும் இங்கும் செல்கிறார். சிரஞ்சீவியை திருத்த முயல்கிறார். காதல் கொண்டு பாடல்களைப் பாடுகிறார். ஒன்றும் செய்வதற்கில்லை. 


போலீஸ் அதிகாரியின் மகன் கயிற்றில் கழுத்து கட்டப்பட்டு மாடியில் இருந்து இழுக்கப்படுகிறார். ஏறத்தாழ தூக்கில் போடுவது போல. பத்து நிமிடங்களுக்கு மேல் தொங்கியும் உயிர் பிழைப்பது அதிசயம். உண்மையாக மனைவியை நேசிக்காமல் இன்னொரு பெண்ணை நேசித்து அதற்காக மனைவியை கொலை செய்யவும் துணிந்த காரணத்திற்காக அவர் கொல்லப்பட்டிருக்கவேண்டும். அதுவே நியாயம். இறுதியாக கூட தனது மனைவியை அவர் அடிமை போல நடத்துகிறார். அதையும் மனைவி சப்மிசனாக ஏற்கிறார். சத்திய சோதனை காட்சிகள். படத்தில் கோபால் ராவ் வருகிறார். இதில் நல்ல போலீஸ்காரர். அவர் பாத்திரத்திற்கும் பெரிய வாய்ப்பு ஏதுமில்லை. 


படத்தின தலைப்பு பாடல் மட்டுமே கவனம் ஈர்க்கிறது. 


கோமாளிமேடை டீம் 

டெனர்.காம்

கருத்துகள்