இடுகைகள்

சுதந லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

முரண்டு பிடித்த மாநிலங்களை இணைந்து இந்திய ஒன்றியமாக்கிய வல்லபாய் படேல்! - இந்தியா 75

படம்
  இந்தியா 75 இந்தியா பிரிட்டிஷ் நாட்டின் காலனி ஆதிக்கத்தில் இருந்தபோது, 500 மாநிலங்களாக பிரிக்கப்பட்டிருந்தது. சுதந்திரத்திற்கு பிறகு இந்த மாநிலங்கள் ஒன்றாக சேர்க்கப்பட வேண்டிய தேவையிருந்தது. மாநிலங்களுக்கு முன்னர் இரண்டு வாய்ப்புகள் இருந்தது. அவை, இந்தியா மற்றும் பாகிஸ்தான்  என்று இரு நாடுகள். மாநிலங்கள் யாருடன் சேர்கிறார்கள் என்பது அவர்களது விருப்பம். உள்துறை அமைச்சராக இருந்த சர்தார் வல்லபாய் படேல் தனது சாதுரியத்தால் பெரும்பாலான மாநிலங்களை இந்திய ஒன்றியத்துடன் இணைத்தார். ஆனாலும் சிக்கல் வந்த மாநிலங்கள் இருந்தன அவற்றைப் பற்றி பார்ப்போம்.  ஹைதராபாத் இந்தியா, சுதந்திரம் பெற்றபிறகு ஹைதராபாத் மாநிலம் அதனுடன் இணைய மறுத்தது. பிரிட்டிஷ் காலத்தில் இருந்தபோது போலவே இறையாண்மை கொண்ட மாநிலமாக ஹைதராபாத் இருக்கவேண்டுமென அதன் நிஜாம் நினைத்தார். ஹைதராபாத் நிலப்பரப்பு ரீதியாக வட இந்தியா மற்றும் தென்னிந்தியாவிற்காக வாசல் என்பதால் இந்திய அரசு இதனை முக்கியமான மாநிலமாக பார்த்தது.  இந்திய அரசு மாநிலங்களுக்க சட்டரீதியான ஆவணங்களை வழங்கி அதில் கையெழுத்து போட்டு இந்திய ஒன்றியத்துடன் சேர்த்து வந்தது. ஹைதராபாத்