இடுகைகள்

எதிர்கால ஆபத்து லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பூமிக்கு வரும் எதிர்கால ஆபத்துகள்!

படம்
பூமிக்கு வரும் எதிர்கால ஆபத்து! வாழ்க்கை  என்பது அழிவுக்குப் பிறகு மீண்டும் தொடங்கக் கூடியது. இப்படித்தான் 40 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர்  பூமியில் உயிரினங்கள் உருவாகி வாழத் தொடங்கின என சொல்லுகிறார்கள் சில அறிவியலாளர்கள். இக்காலகட்டங்களில் விண்கல் மோதல், உயிரினங்களின் அழிவு, மீண்டும் உயிரினங்களின் தோற்றம் என மாறி மாறி நடந்து வந்திருக்கிறது. இந்த சுழற்சி நிற்காமல் தொடர்கிறது. இப்போது முந்தைய காலத்தை விட தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டது. இனி வரும் ஆபத்துகள் எப்படியிருக்கும் என்பதைப் பார்ப்போம்.  விண்கல் தாக்குதல் 6,600 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் பூமியில் மோதிய பெரும் விண்கல் தாக்குதலால் டைனோசர் உள்ளிட்ட உயிரினங்கள் அழிந்து போயின. எதிர்காலத்திலும் அப்படி நடக்க வாய்ப்புள்ளதா? 10,000 கோடி ஆண்டுகளுக்கு ஒருமுறை பூமி பெரும் விண்கல் தாக்குதலை சந்திக்க வேண்டியிருக்கும் என்று அமெரிக்க விண்வெளி அமைப்பான நாசா கூறியுள்ளது. 2017ஆம் ஆண்டு இதுபற்றிய கட்டுரையொன்று நேச்சர் இதழில் வெளியாகியுள்ளது. இக்கட்டுரையில், சூரிய மண்டலத்தில் உள்ள பல்லாஸ் (pallas), வெஸ்டா (vestas) இரு கோள்கள் பூமியைத் தாக்கினால் உயிரினங்