புல்லட் ப்ரூப் கண்ணாடிகள் எப்படி தயாரிக்கப்படுகிறது?
அறிவியல் கேள்வி பதில்கள் மிஸ்டர் ரோனி தோட்டா துளைக்காத கண்ணாடி எப்படி தயாரிக்கப்படுகிறது? பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த எடுவர்ட் பெனடிக்டஸ் என்ற அறிவியலாளர் நவீன தோட்டா துளைக்காத கண்ணாடியை உருவாக்கினார். இதில் கண்ணாடி மற்றும் பிளாஸ்டிக் அடுக்குகள் உள்ளன. தொடக்கத்தில் கண்ணாடி இரண்டு அடுக்கும், நடுவில் பசை ஒன்றை வைத்து வெப்பம், அழுத்தம் கொடுத்து கண்ணாடியை உருவாக்கி வலிமையேற்றினார்கள். துப்பாக்கி தாக்குதல் நடைபெற்றால், விரிசல் விழுமே ஒழிய முழுக்க உடையாது. சல்பியூரிக் அமிலம் ஏன் முக்கியமானதாக கருதப்படுகிறது? உரம் மற்றும் பல்வேறு வேதிப்பொருட்கள் தயாரிப்பில் பயன்படுவதால். இதை விட்ரியோல் எண்ணெய் என்று கூறினர். அனைத்து வேதிப்பொருட்களிலும் கூட சல்பியூரிக் முதன்மை பெற அதன் தலைமை தாங்கும் குணமே காரணம். பதினெட்டாம் நூற்றாண்டில் சோடா தயாரிக்க பயன்பட்டது. தொழிற்சாலைகளில் நீரையும், சல்பியூரிக் ட்ரை ஆக்சைடு என இரண்டையும் ஒன்று சேர்த்தால், சல்பியூரிக் அமிலம் கிடைக்கும். தெர்மோபேன் கண்ணாடியை கண்டுபிடித்தது யார்? வீடுகளில் சாளரத்திற்கு பயன்படும் கண்ணாடி வகையான தெர்மோபேனை 1930ஆம் ஆண்டு சிடி ஹெவன்...