இடுகைகள்

முருகானந்தம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பணம் விரயமாகும் வழித்தடம்! - முருகானந்தத்திற்கு எழுதிய கடிதங்கள்

படம்
  பணம் விரயமாகும் வழி 27.1.2022 அன்புள்ள நண்பர் முருகுவிற்கு, வணக்கம். நலமா? நண்பர்களுக்கு எழுதிய கடிதங்களைத் தொகுத்து ‘நீரெல்லாம் கங்கை’ என   பெயரிட்டு அமேஸான் தளத்தில் பதிப்பித்திருக்கிறேன். ஜானகிராமம் நூலை படிக்க நினைத்தேன். நூல் 806 பக்கம். போனில் படிக்க முடியாது. எனவே, அமீஷின் ராமாயண புனைவுக்கதையை படித்துக்கொண்டு இருக்கிறேன். பவித்ரா ஶ்ரீனிவாசனின் மொழிபெயர்ப்பில் நூல் நன்றாக உள்ளது. கவிதக்கா, அண்மையில் பெங்களூருவில் இருந்து ஈரோட்டுக்கு வந்துவிட்டார். ஈரோடு போகும் வேலை இருந்தால் சென்று பாருங்கள். நீங்கள் பேசவில்லை என வருத்தப்பட்டார். ‘சாங் ஷி’ என்ற ஆங்கிலப்படத்தைப் பார்த்தேன். பத்து வளையங்களின் சக்தி என படத்தின் கதையை விளக்கினால் சலவைத்தூள் விளம்பரம் போலவே இருக்கும்.   சீன கலாசாரம் சார்ந்து அமெரிக்க படத்தை எடுத்திருக்கிறார்கள். இவரின் பாத்திரத்தையும் அவெஞ்சரில் சேர்ப்பார்கள் என நினைக்கிறேன். பள்ளிகள் இனியும் திறக்கவில்லை என்றால், நான் துளிர் இதழுக்கு கட்டிய ஆண்டு சந்தா முழுக்க வீண்தான். பணம் வீணாவது ஏதோ ஒருவகையில் நடந்துகொண்டே இருக்கிறது. வினோத் மேத்தா பற்றிய நூலை இன்னு

உரையாடல்களில் வல்லவரான தேவன் - முருகானந்தத்திற்கு எழுதிய கடிதங்கள்

படம்
  24.1.2022 அன்புள்ள நண்பர் முருகு அவர்களுக்கு, வணக்கம். உடல்நலமும் மனநலமும் மேம்பட்டிருக்க பேரிறையை வேண்டுகிறேன். பத்து நாட்களுக்கு முன்னர் ஆர்டர் செய்த வினோத் மேத்தா பற்றிய நூல் இன்றுதான் கைக்கு வந்தது. டிஹெச்எல் ப்ளூடர்ட் ஆட்கள் கூரியரில் கிடைத்தது. அவுட்லுக் பத்திரிகை நிறுவனர், ஆசிரியரின் சுயசரிதை நூல். இனிமேல்தான் படிக்கவேண்டும். அரசின் மின்நூலகத்தில் மறைமலையடிகள் கடித நூலை தரவிறக்கிப் படித்தேன். தமிழ் சொற்களின் பயன்பாடு நன்றாக உள்ளது. அவர் எழுதிய கடிதங்கள் அனைத்தும் ஆண்டு அடிப்படையில் தொகுக்கப்படவில்லை. கடிதத்ததில் உரிய பெயர்களும் கூட இல்லை. மிஸ்டர் வேதாந்தம் நூலின் இரண்டாம் பாகத்தை படித்துக்கொண்டு இருக்கிறேன். மனிதரின் குணத்தை உடனே வெளிப்படுத்தும் தெரிந்துகொள்ளும் வகையிலான உரையாடல்கள் எழுத்தாளர் தேவன் வல்லவராக இருக்கிறார். உறவினர்களால் ஏமாற்றப்பட்டு சொத்துக்களை இழந்த வேதாந்தம் எப்படி சென்னைக்கு வந்து பத்திரிகையாளராகி வாழ்வின் மீது நம்பிக்கை கொள்கிறார் என்பதே கதை. உடலைப் பார்த்துக்கொள்ளுங்கள். நன்றி அன்பரசு படம் - ஞானசம்பந்தன் வலைத்தளம்

மறைமலையடிகளின் தனித்துவமான கடித நூல்! - முருகானந்தத்திற்கு எழுதிய கடிதங்கள்

படம்
  மறைமலையடிகள் 24.1.2022 அன்புள்ள நண்பர் முருகு அவர்களுக்கு, வணக்கம். நலமாக இருக்கிறீர்களா வீட்டில் உள்ள தங்களது பெற்றோர்களையும் கேட்டதாக சொல்லுங்கள். நேற்று லாக்டௌன் என்பதால் எங்கும் செல்ல முடியவில்லை. மாணவர்களுக்கான நாளிதழை ஐந்து பக்கமாக்க வடிவமைத்து அதை டிஜிட்டல் வடிவில் பிடிஎஃப்பாக பள்ளிக்கு அனுப்ப ஏற்பாடு நடக்கிறது. இது எந்தளவு வெற்றி பெறும் என்று தெரியவில்லை. இப்போதைக்கு நாங்கள் இதற்காகவே வேலை செய்கிறோம். தினசரி காலை நாளிதழ்களில் வரும் செய்திகளை எடுத்து ஐடியாக்களாக அனுப்புவது, அதில் எடிட்டர் தேர்வு செய்துதருவதை ஒரு மணிக்குள் எழுதி தர வேண்டும். பத்து மணிக்கு தகவல் சொன்னால் கட்டுரை எழுத மூன்று மணி நேரம் உள்ளது. இப்படிதான் இரண்டு நாட்களாக வேலை செய்கிறோம். மறைமலையடிகளின் கடித நூலைப் படித்தேன். அவர் அதில் முக்கியமான முறைகளைக் கையாள்கிறார். நூலில், அஞ்சலட்டை என்றால் ஆங்கிலத்தில் எழுதுகிறார். இன்லேண்ட் கவர் என்றால் தமிழில் எழுதுகிறார். இப்படி எழுத அவருக்கென சில காரணங்கள் இருக்கும் என நினைக்கிறேன். வெளியூருக்குப் போனால் சோப்பு, சீப்பு இருக்குமாறு பெட்டி ஒன்றைத் தயார் செய்தேன்.

சாதியால் இழிவுபடுத்தப்பட்ட எழுத்தாளரின் வாழ்க்கைக் குரல் - முருகானந்தத்திற்கு எழுதிய கடிதங்கள்

படம்
  எழுத்தாளர் தேவிபாரதி 21.1.2022   அன்பிற்கினிய நண்பர் முருகுவிற்கு, வணக்கம். நலமாக இருக்கிறீர்களா? நேற்று குக்கூ வெளியிட்ட தேவிபாரதியின் ஒரு மணி நேர நேர்காணலை யூட்யூபில் பார்த்தேன். நிறைய இடங்களில் பேசும்போது எழுத்தாளரின் குரல் தடுமாறி உடைந்துவிட்டது. கேமரா சிறப்பாக இயக்கப்பட்டது. ஆனால், படத்தொகுப்பாளர் எழுத்தாளர் தனது சொந்த வாழ்க்கையை சொல்லி அழும் காட்சியில் வண்ணமாக இருந்த காட்சியை கருப்பு வெள்ளையாக மாற்றுகிறார். இப்படி செய்வது எதற்கு என்று புரியவில்லை. எழுத்தாளர்கள் அவர்களாக தங்கள் வாழ்க்கையைப் பற்றி பேசுவதில் நிறைய தகவல்களை நாம் தெரிந்துகொள்ள முடியாது போல உள்ளது.   இதற்கு அவர்களின் அகவயமான இயல்புதான் காரணம். ஒரு மணிநேர பேட்டியில், தேவிபாரதி எழுதிய நூல்களைப் பற்றிய கேள்விகளே இல்லை. ஜீவா நினைவேந்தல் நிகழ்ச்சியில் ஜெயமோகன் பேசிய உரை சிறப்பாக நன்றாக இருந்தது. சிறந்த கச்சிதமான உரை. நன்றாக தயாரித்து வந்து சிறப்பாக பேசினார். களப்பணி எப்படிப்பட்டது., அதற்கான உழைப்பு, அதில் கிடைக்கும் பயன், அதற்கான காலக்கெடு என சில விஷயங்களை அழுத்தம் திருத்தமாக பேசினார். தன் மீட்சி – ஜெயமோகன் எழுத

திருவண்ணாமலைக்கு திடீர் பயணம் - முருகானந்தத்திற்கு எழுதிய கடிதங்கள்

படம்
  வீட்டிலிருந்து வேலை - நோய்த்தொற்று  10.1.2022 இனிய நண்பர் முருகுவிற்கு, வணக்கம். நலமா? சொந்த ஊர்களிலிருந்து சென்னைக்கு வந்து வேலை பார்த்து வந்தவர்கள் மீண்டும் சொந்த ஊருக்கு சென்றுவிடலாமா என யோசித்து வருகிறார்கள். நோய்த்தொற்று வேகமாக பரவி வருவதால் ஊருக்கு கிளம்பிவிடுவார்கள் என நினைக்கிறேன். இந்த வாரம் திருவண்ணாமலை செல்ல நினைத்தேன். கடிதம் எழுதும்போதே இந்த எண்ணம் தோன்றிவிட்டது. எனவே, பஸ் பிடித்து அங்கு சென்றுவிட்டேன். அந்த பயணத்தை முடித்துவிட்டு வந்துதான் கடிதத்தை பகுதி பகுதியாக எழுதி முடிவு செய்துள்ளேன். அங்கு சென்றபோது பிரெஞ்சு நாட்டின் மீது காதல் தஞ்சைக் கலைஞர் ஒருவரை சந்தித்தேன். தமிழ் ஆள்தான். வெளிநாட்டினருக்காகவே ஓவியங்களை வரைகிறார். அதாவது, அவர்கள்தான் அவருக்கு முதன்மையான வாடிக்கையாளர்கள். இப்போது கண்காட்சி வைக்க முயன்று வருகிறார். இவரும் குக்கூவைச் சேர்ந்த ஆள்தான்.   இவரிடம் எழுதுக – ஜெயமோகன் எழுதிய நூலை வாங்கிப் படித்தேன். நூலில் எழுதுவது, அதில் எழும் சிக்கல்கள் பற்றிய கேள்விகளுக்கு விரிவாக பதில் சொல்லியிருக்கிறார். நூல் சிறப்பாக தயாரிக்கப்பட்டுள்ளது. எழுதுவது பற்றிய ச

தங்குமிடம் ஏதுமில்லை - முருகானந்தத்திற்கு எழுதிய கடிதங்கள்

படம்
  தங்குமிடம் ஏதுமில்லை 6.1.2022 அன்புள்ள நண்பர் இரா.முருகானந்தம் அவர்களுக்கு, வணக்கம். நான் நேற்று திருவண்ணாமலை செல்ல நினைத்தேன். அதற்காக அங்குள்ள நண்பர் வினோத்திற்கு போனில் அழைத்தேன். அப்போது நான் அவரது வீட்டில் தங்கிவிட்டு வந்துவிடலாம் என நினைத்தேன். ஆனால், அவரது வீட்டில் ஏற்கெனவே இரண்டு விருந்தாளிகள் இருக்கிறார்கள் என்று கூறினார். ‘’முன்னமே தகவல் சொல்லிவிட்டு, அங்கு வந்தால் தங்கும்படியான அறையைத் தயாரித்து வைக்கலாம்’’ என்று சொன்னார். நான் அதை மறந்துவிட்டேன். வீடு, அவர்களுக்கும் சேர்த்து வேண்டுமே? அவர்களது குடும்ப உறுப்பினர்களே நான்கு பேர் ஆகிவிட்டனர். இனிமேல் தனியார் விடுதியில் தங்கிவிட்டு வினோத் அண்ணனைப் பார்த்துவிட்டு வரவேண்டும். இனியும் அவரை சங்கடப்படுத்த வேண்டாம் என நினைத்துள்ளேன். சென்னையில் மெல்ல நோய்க்கட்டுப்பாடு இறுகி வருகிறது. வேலையை செய்துவிட்டால் வேறு எங்காவது போய்விட்டு வரலாம் என நினைத்துள்ளேன். ஆபீஸ் வேலையை முடித்துவிட்டால், சொந்த வேலைகளை செய்துகொண்டிருக்கலாம். நேரத்தை வீணடிக்க வேண்டாம் என நினைக்கிறேன். இயற்கை சார்ந்த நூல்களைப் படிக்கலாம். அத்துறை சார்ந்த செயல்பாட்

தனியாக அமர்ந்து வேலை செய்வது உன்னத அனுபவம் - முருகானந்தத்திற்கு எழுதிய கடிதங்கள்

படம்
  4.1.2022   அன்புள்ள நண்பர் இரா.முருகானந்தம் அவர்களுக்கு, வணக்கம். வணக்கம். நலமாக இருக்கிறீர்களா? ஜனவரி, பிப்ரவரி என இரண்டு மாதங்களுக்கு கட்டுரைகள் எழுதி மென்பொருளில் பதிந்துவிட்டேன். ஆனால், பத்திரிகை அச்சுக்கு செல்லவில்லை. இதுவரை செய்த வேலைகள் எல்லாம் வீணா இல்லையா என்று தெரியவில்லை. இப்போது உள்ள நிலைமையில் லாக்டௌன் அறிவிப்பார்கள் என பேசிக்கொண்டு இருக்கிறார்கள். அப்படி ஒரு நிலைமை வந்தால் எங்களுக்கு சம்பள வெட்டு நிச்சயம். இம்முறை வேலையில் பிழைத்திருப்போமா என்று தெரியவில்லை. இந்த பத்தியை எழுதுகிற சமயம்,   அலுவல வேலைகளை வீட்டில் இருந்து செய்யும்படி அனுமதி கொடுத்துவிட்டார்கள். நான் வீட்டில் இருந்து வேலை செய்வதை விரும்பவில்லை. அலுவலகத்திற்கு எப்போதும் போல வரப்போகிறேன். சக பணியாளர்கள் இல்லையென்றால் வேலை செய்வது உன்னதமான அனுபவம். என்னால் வெப்பமான எனது அறையில் உட்கார்ந்து வேலை செய்ய முடியவில்லை. புத்தக காட்சி வேறு தள்ளிப்போகிறது. தற்போது எழுதி வரும் அறிவியல் பகுதிகள் சார்ந்து சில நூல்களை வாங்கும் தேவை உள்ளது. கல்விக்கொள்கை பற்றி வினி கிர்பால் இந்து ஆங்கிலத்தில் கட்டுரை ஒன்றை எழுதி

விளைவுகளை அறியாமல் செயல்படும் நாட்டின் தலைவர்!

படம்
  விளைவுகளைப் பற்றிய அறிவற்ற தலைவர் 8.1.2022 சென்னை -4   அன்புள்ள நண்பர் முருகுவிற்கு, வணக்கம். நலமா? நேற்று புக்டே.இன் எனும் தளத்திற்கு சென்றேன். பாரதி புத்தகாலயத்தின் தளம். அதில் படிப்பதற்கான நிறைய விஷயங்கள் இருந்தன. ஆகார் படேலின் நேர்முகம் ஒன்றைப் படித்தேன். கரண் தாப்பர் நேர்காணல் செய்திருந்தார்.’’ தீர்மானமான ஆற்றல் மிக்க என்பதோடு, விளைவுகளைப் பற்றி அறியாமல் செயல்படக்கூடியவர்’’ என ஆகார் படேல் பயன்படுத்திய சொற்கள் வினோதமாக பட்டது. மோடியைப் பற்றிய கூறியவை. கரண்தாப்பர், அவர் கூறிய சொற்களுக்கு என்ன பொருள் என கேட்டு கேள்விகளை அமைத்திருந்தார். நல்ல நேர்காணல். போக்குவரத்து நிறுத்தப்படவில்லை என்றால் வெளியே எங்காவது போகவேண்டும். ‘’மாணவர் இதழை 50 இதழ்களாக வெளியிடலாம்’’ என எடிட்டர் கூறினார். ஆனால் ஒரு இதழ் வெளிவருவதே கடினமாகிவிட்ட சூழ்நிலை. தேவையான விஷயங்களை எழுதி கணினியில் ஏற்றிவிட்டு எங்காவது செல்ல முடிந்தால் திட்டமிட்டு செல்லவேண்டும். காரியத் தடைகளால் அனைத்தும் அப்படியே நிற்கின்றன. இணையத்தில் தமிழ் டிஜிட்டல் லைப்ரரி வலைத்தளம் சென்று பார்த்தேன். நிறைய நூல்களை வைத்திருக்கிறார்கள்.

திருவண்ணாமலையில் சுமைதாங்கி யாருமில்லை!

படம்
  பயணம் 6.1.2022 அன்புள்ள நண்பர் இரா.முருகானந்தம் அவர்களுக்கு, வணக்கம். நான் நேற்று திருவண்ணாமலை செல்ல நினைத்தேன். அதற்காக அங்குள்ள நண்பர் வினோத்திற்கு போனில் அழைத்தேன். அப்போது நான் அவரது வீட்டில் தங்கிவிட்டு வந்துவிடலாம் என நினைத்தேன். ஆனால், அவரது வீட்டில் ஏற்கெனவே இரண்டு விருந்தாளிகள் இருக்கிறார்கள் என்று கூறினார். ‘’முன்னமே தகவல் சொல்லிவிடு அங்கு வந்தால் தங்கும்படியான அறையைத் தயாரித்து வைக்கலாம்’’ என்று சொன்னார். நான் அதை மறந்துவிட்டேன். வீடு, அவர்களுக்கும் சேர்த்து வேண்டுமே? அவர்களது குடும்ப உறுப்பினர்களே நான்கு பேர் ஆகிவிட்டனர். இனிமேல் தனியார் விடுதியில் தங்கிவிட்டு வினோத் அண்ணனைப் பார்த்துவிட்டு வரவேண்டும். இனியும் அவரை சங்கடப்படுத்த வேண்டாம் என நினைத்துள்ளேன். சென்னையில் மெல்ல நோய்க்கட்டுப்பாடு இறுகி வருகிறது. வேலையை செய்துவிட்டால் வேறு எங்காவது போய்விட்டு வரலாம் என நினைத்துள்ளேன். ஆபீஸ் வேலையை முடித்துவிட்டால், சொந்த வேலைகளை செய்துகொண்டிருக்கலாம். நேரத்தை வீணடிக்க வேண்டாம் என நினைக்கிறேன். இயற்கை சார்ந்த நூல்களைப் படிக்கலாம். அத்துறை சார்ந்த செயல்பாட்டாளர்களை பற்றி எழு

லாக்டௌன் காலத்தில் சென்னைவாசியின் நிலை!

படம்
  லாக்டௌன் 4.1.2022   அன்புள்ள நண்பர் இரா.முருகானந்தம் அவர்களுக்கு, வணக்கம். வணக்கம். நலமாக இருக்கிறீர்களா? ஜனவரி, பிப்ரவரி என இரண்டு மாதங்களுக்கு கட்டுரைகள் எழுதி மென்பொருளில் பதிந்துவிட்டேன். ஆனால், பத்திரிகை அச்சுக்கு செல்லவில்லை. இதுவரை செய்த வேலைகள் எல்லாம் வீணா இல்லையா என்று தெரியவில்லை. இப்போது உள்ள நிலைமையில் லாக்டௌன் அறிவிப்பார்கள் என பேசிக்கொண்டு இருக்கிறார்கள். அப்படி ஒரு நிலைமை வந்தால் எங்களுக்கு சம்பள வெட்டு நிச்சயம். இம்முறை வேலையில் பிழைத்திருப்போமா என்று தெரியவில்லை. இந்த பத்தியை எழுதுகிற சமயம்,   அலுவல வேலைகளை வீட்டில் இருந்து செய்யும்படி அனுமதி கொடுத்துவிட்டார்கள். நான் வீட்டில் இருந்து வேலை செய்வதை விரும்பவில்லை. அலுவலகத்திற்கு எப்போதும் போல வரப்போகிறேன். சக பணியாளர்கள் இல்லையென்றால் வேலை செய்வது உன்னதமான அனுபவம். என்னால் அறையில் உட்கார்ந்து வேலை செய்ய முடியவில்லை. புத்தக காட்சி வேறு தள்ளிப்போகிறது. தற்போது எழுதி வரும் அறிவியல் பகுதிகள் சார்ந்து சில நூல்களை வாங்கும் தேவை உள்ளது. கல்விக்கொள்கை பற்றி வினி கிர்பால் இந்து ஆங்கிலத்தில் கட்டுரை ஒன்றை எழுதியிருந

கல்வியைக் கற்கும் பெண்களே திருமண வயதைத் தீர்மானிக்கவேண்டும்! - முருகானந்தம் ராமசாமிக்கு எழுதிய கடிதங்கள்

படம்
  அன்புள்ள இரா.முருகானந்தம் அவர்களுக்கு, வணக்கம். நலமா? இன்று நான் அலுவலகத்திற்கு விடுமுறை எடுத்துக்கொண்டு நண்பர் சக்திவேலைப் பார்க்க சென்றேன். படம் பார்க்கலாம் என்றார். தினசரி மூன்று படங்களைப் பார்க்கும் சினிமா விரும்பி அவர். நான் உங்களுடன் பேசினாலே போதும் என்றேன். மனதில் எதையும் வைத்துக்கொள்ளாமல் வெளிப்படையாக பேசும் மனிதர்.  திறக்கக்கூடாத கதவு - ரா.கி.ரங்கராஜன் எழுதிய நாவலைப் படித்துக்கொண்டிருக்கிறேன். பேய்க்கதை. தியாகு என்பவர் கதையை சொல்கிறார். நல்ல ஆவி, அதை முடக்கும் கெட்ட ஆவி என கதை சுவாரசியமாக செல்கிறது. நண்பர் சக்திவேலிடம் சுவிசேஷங்களின் சுருக்கம் - லியோ டால்ஸ்டாய் எழுதிய நூலை படிக்க வாங்கி வந்தேன். நேரம் ஒதுக்கி படிக்கவேண்டும். மனம் முழுக்க வேலை பற்றிய அலுப்பு உள்ளது. என்ன காரணம் என்று தெரியவில்லை.  கணினி பழுதாகிவிட்டது. அதுவும் ஒருவகையில் நல்லதுதான். இப்போதுதான் நூல்களை ரிலாக்ஸாக படிக்க முடிகிறது.  நன்றி! அன்பரசு  11.12.2021 ------------------ அன்பு நண்பர் முருகு அவர்களுக்கு, வணக்கம். நலமா? வீட்டில் உள்ளோரையும் கேட்டதாக சொல்லுங்கள். சுவிசேஷங்களின் சுருக்கம் நூலை 50 பக்கங்கள் ப

12G பஸ்சில் சில ஆண்டுகளுக்குப் பிறகு இனிய பயணம்! - முருகானந்தம் ராமசாமிக்கு எழுதிய கடிதங்கள்

படம்
  அன்புள்ள நண்பர் முருகுவிற்கு, வணக்கம். நலமா? ஜனவரி 3 இதழ் வருவதற்கான எழுத்துவேலைகள் தொடங்கிவிட்டன. கிறிஸ்மஸிற்கு கூட அலுவலகத்தில் விடுமுறை விடவில்லை. வேலை செய்யும் கிறிஸ்தவர்களுக்கு மட்டும் சிறப்பு விடுமுறை. 50 இதழ்கள் வெளிவர வாய்ப்புள்ளது. மேன்ஷனில் தங்கியுள்ளவர்கள் எண்ணிக்கை  10க்கும் மேல் போய்விட்டது. எனவே, சமையல் செய்வதை நிறுத்திவிட்டேன். கொஞ்சம் வயிற்றுக்கு பொருந்தி வரும் உணவகங்களில் சாப்பிட்டுவருகிறேன்.  தாரகை - ரா.கி.ரங்கராஜன்  எழுதிய நாவலைப் படித்து வருகிறேன். மாஃபியா கும்பலால் பாதிக்கப்படும் பெண் ட்ரேஸி எப்படி திருடி ஆகிறாள், அவளது வாழ்க்கை மகிழ்ச்சியாக இருந்ததா என்பதுதான் கதை. முழுக்க வெளிநாடுகளில் நடக்கிறது. 361 பக்கங்கள் படித்திருக்கிறேன். ரொமான்டிக் என்ற தெலுங்குப்படத்தைப் பார்த்தேன். படத்தில் பெரிதாக எதிர்பார்த்து பார்க்க ஏதுமில்லை. காதல் காட்சிகளை மட்டும் கவனம் கொடுத்து எடுத்திருக்கிறார்கள். வேறொன்றும் இல்லை. சிறிய பட்ஜெட் படம்.  நன்றி! அன்பரசு 9.11.2021 --------------------------- அன்புள்ள முருகு அண்ணாவுக்கு, வணக்கம். நலமா?  திறக்கக்கூடாத கதவு - ரா.கி.ரங்கராஜன் நாவலைப

கோபுலு ஒவியங்களின் அழகுடன் படித்த காந்தியின் நவகாளி யாத்திரை! - முருகானந்தம் ராமசாமிக்கு எழுதிய கடிதங்கள்

படம்
  அன்புள்ள முருகு அண்ணாவுக்கு, வணக்கம். நான் நலம். அறை இப்போதுதான் மெல்ல ஈரத்திலிருந்து வெளிவந்துகொண்டிருக்கிறது. ஆபீசில் இணைய வசதி சரியாக இல்லை. எனவே, பிளாக்கில் ஏதும் சரியாக எழுத முடியவில்லை. இன்று எடிட்டர் கே.என்.எஸ் வீட்டுக்குப் போக நினைத்தேன். ஆனால் வீட்டை சுத்தம் செய்துகொண்டிருப்பதாக சொல்லிவிட்டார். இனி அவரை தொந்தரவு செய்யக்கூடாது என நினைக்கிறேன்.  நவகாளி யாத்திரை - இயல்வாகை வெளியீடு படித்துக்கொண்டு இருக்கிறேன். கோபுலு ஓவியங்கள் நூலை அழகாக்கி இருக்கின்றன என்பது உண்மை. இந்த நூலை பிடிஎப்பில் முன்னதாகவே படித்துள்ளதாக நினைவு. கோபுலு ஓவியங்களுக்காகவே மீண்டும் நூலை இரவல் பெற்று படித்தேன். நேரு பற்றி இந்து ஆங்கில இதழில் ஞாயிறு அன்று கட்டுரைகளை வெளியிடுகிறார்கள். நவ.14 அன்று வெளியான சிறப்புக்கட்டுரை நேரு, புரட்சியாளரா இல்லையா என்பதைப் பற்றியது. அதை மொழிபெயர்க்க முடியுமா என்று பார்க்கவேண்டும்.  சேத்தன் பகத் இந்தியா இந்துக்களின் நாடு என்று பத்தி ஒன்றை எழுதியிருந்தார். அதை எதிர்த்து ஸ்வபன்தாஸ் குப்தா டைம்ஸ் ஆப் இந்தியாவில் கட்டுரை ஒன்றை எழுதியிருந்தார். மதச்சார்பற்ற அரசின் இயல்புக்கு ஏற்ற க

ஆன்மிக அனுபவ தரிசனம் தரும் அருகர்களின் பாதை! - முருகானந்தம் ராமசாமிக்கு எழுதிய கடிதங்கள்

படம்
  ஜெயமோகனின் அருகர்களின் பாதை நூலைப் படித்துக்கொண்டு இருக்கிறேன். கிழக்கு பதிப்பகத்தில் வாங்கிய கட்டுரை நூல். ஐந்து மாநிலங்கள் வழியாக செய்த பயணம் பற்றி பிரமாதமாக எழுதியிருக்கிறார். புனைவு அளவுக்கு படிமங்கள் கிடையாது. ஐந்து மாநிலங்கள் வழியாக  சமண ஆலயங்களைத் தரிசித்து செல்லும் பயணம், சந்தித்த மனிதர்கள், கோவில் சிற்பங்கள், அதன் வர்ணனை என அசத்தலாக இருக்கிறது.  எழுத்தாளர் ஜெயமோகன் இங்கு மழை தூறலாக கனமழையாக என பல்வேறு வடிவங்களில் நாள் முழுவதும் சொட்டிக்கொண்டே இருக்கிறது. நேற்றிலிருந்து இன்றுவரை கூரையிலிருந்து விழும் மழைநீரின் ஒலி, சிற்சில வேறுபாட்டுடன் கேட்டுக்கொண்டே இருக்கிறது. ஈரமான காற்று எப்போதும் ஒருவித பிசுபிசுப்பான தன்மையைக் கொடுக்கிறது. வெளியே குளிர்ச்சி, சட்டைக்கு உள்ளே புழுக்கம் என வித்தியாசமான சூழல் இருக்கிறது. நேஷனல் புக் டிரஸ்டில் புத்தகங்களை வாங்க அருகிலுள்ள தாமரை பப்ளிஷர்ஸை அணுகி உதவி கேட்டேன். அவர்கள் ஒரு வாரத்திற்கு மேலாகும் என்று சொன்னார்கள். வேலை செய்யும் இதழுக்காக சில நூல்கள் தேவைப்படுகின்றன.  பிரன்ட்லைன் சந்தா முடிந்துவிட்டது. ரீடர்ஸ் டைஜெஸ்ட் இதழை வாங்க நினைத்துள்ளேன்.

திருமண மகிழ்ச்சி! - முருகானந்தம் ராமசாமிக்கு எழுதிய கடிதங்கள்

படம்
  12.10.2021 ---------------------- அன்புள்ள முருகு அண்ணாவுக்கு, வணக்கம். நலமாக இருக்கிறீர்களா?  நேற்றிரவு பிரன்ட்லைனில் அசாம் முஸ்லீம்கள் பற்றிய கட்டுரையைப் படித்தேன். அதில் அரசு நிலத்திலிருந்து அவர்களை எப்படி அரசு நிர்வாகம் ஒடுக்கி வெளியேற்றியது என்று எழுதியிருந்தனர். இதுபற்றிய கட்டுரையை தீஸ்தா செடல்வாட் எழுதியிருந்தார். அது உண்மையில் கோரமான நிகழ்ச்சி. 1800களிலிருந்து அசாமில் தங்கி வாழ்பவர்களை முஸ்லீம் என்ற காரணத்திற்காகவே வெளியேற்ற முனைகிறார்கள். இதில் குடியுரிமை பிரச்னை என்பது தனி விவகாரம்.  நீண்டநாள் நண்பரான கார்ட்டூன் கதிரை அவரது வீட்டுக்குச் சென்று பார்த்தேன். திருமணமான பிறகு, அவரை இப்போதுதான் பார்க்கிறேன். சிறிய வீடுதான். மனைவியோடு மகிழ்ச்சியாக இருக்கிறார். நன்றாக இருந்தால் சரிதான்.  எங்கள் பத்திரிகை இன்னும் சில வாரங்களில் தொடங்கிவிடும் என நினைக்கிறேன். கம்பெனி ஆச்சரியமாக போனஸ் பணத்தை போட்டிருக்கிறார்கள். பெரும்பாலும் அடிப்படைச் சம்பளத்தை கொடுத்தார்கள். அதில் பலரும் இன்னும் கொடுத்திருக்கலாம் என்று புலம்பினார்கள்.  லாக்டௌனில் சம்பளத்தை பிடித்துக்கொண்டார்கள். அதை இப்போது போடுவதாக

வரலாற்றை மாற்றும் அதிகாரம்! - முருகானந்தம் ராமசாமிக்கு எழுதிய கடிதங்கள்

படம்
  pinterest முருகானந்தம் அன்புள்ள முருகு அண்ணாவுக்கு, வணக்கம்.  நலமாக இருக்கிறீர்களா? நேற்று காலை மயிலாப்பூர், ராயப்பேட்டை பகுதிகளில் நல்ல கனமழை. நான் மழைக்கு முன்னமே ஆபீஸ் போய்விட்டேன். பட்டம் பதிப்பக பணிகள் இருந்தன. கூட்டுறவு வங்கிகளின் வீழ்ச்சி, உரிமம் ரத்து ஆகிய செய்திகளை படிக்க வேண்டியதுள்ளது. இவற்றையும் நூலில் இணைத்துவிடுவேன். நூலை எழுத தமிழ் இணையப் பல்கலைக்கழக வலைத்தளம் உதவியது. இதில் ஏராளமான நாட்டுடமை ஆக்கப்பட்ட நூல்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. இத்தகவல் முன்னமே தெரிந்திருந்தால் தொடராக எழுதும்போதே சிறப்பாக எழுதியிருக்கலாம். பரவாயில்லை. நூலாக எழுதி தொகுக்கும்போது, வலைத்தளம் உதவியது என வைத்துக்கொள்ளலாம்.  நகுலன் கதைகள் கொண்ட நூல் தொகுப்பை முத்து மாரியம்மன் பழைய பேப்பர் கடையில் நாற்பது ரூபாய்க்கு வாங்கினேன். ஒரு கதை மட்டுமே படித்தேன். இனிமேல்தான் நூலை முழுமையாக படிக்க வேண்டும்.  இந்தியாவைப் பற்றிய ஆய்வுச்செய்திகளை தேசிய ஆங்கிலமொழி இதழ்கள் சிறப்பாக உழைத்து எழுதுகிறார்கள். கட்டுரைகளை படிக்கும்போதே அதை அறிய முடிகிறது. உங்கள் உடல்நிலையைக் கவனித்துக்கொள்ளுங்கள்.  அன்பரசு 22.8.2021 -

நீரெல்லாம் கங்கை - கடிதங்கள்- அன்பரசு - புதிய மின்னூல் வெளியீடு

படம்
  இந்த வலைத்தளத்தில் வெளியான பல்வேறு நண்பர்களுக்கு எழுதிய கடிதங்களைக் கொண்டுள்ள தொகுப்பு. இப்போது மின்னூலாக அமேசானில் வெளியாகியுள்ளது. உங்களுக்கு அமேசானில் கணக்கு இருந்தால், நூலை எளிதாக விலையின்றி வாசிக்க முடியும்.  நூலை வாசிக்க கிளிக் செய்யுங்க.... https://www.amazon.in/dp/B09QZR2NRT புகைப்படம் - வினோத் பாலுச்சாமி -Yaa studio அட்டை வடிவமைப்பு -WWW.Canva.com

மக்களின் அபிமானத்தை சம்பாதித்த ஓடிஷா முதல்வர் நவீன் பட்நாயக்! - கடிதங்கள்

படம்
  வெற்றிகரமான முதல்வர் நவீன் பட்நாயக் அன்புள்ள முருகானந்தம் அவர்களுக்கு, வணக்கம்.  நலமாக இருக்கிறீர்களா? பிரன்ட்லைன் இதழுக்கு சந்தாகட்டி வாங்கிப் படித்துக்கொண்டிருக்கிறேன். வங்க எழுத்தாளர் மனோரஞ்சன் பியாபாரியின் நேர்காணலை சிறப்பாக எடுத்து எழுதியியுள்ளனர். ரிக்சா ஓட்டிக் கொண்டிருந்தவர் இப்போது, திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏ ஆகிவிட்டார். வாழ வழியில்லாத நிலையில் மாநில அரசின் விருது எதற்கு என துணிச்சலாக சொல்லியிருக்கிறார் மனிதர்.  நவீன் பட்நாயக் பற்றிய கட்டுரையும் நன்றாக எழுதப்பட்டிருந்தது. ஒடிஷாவில் மத்திய அரசின் திட்டங்களை கைவிட்டுவிட்டு மாநில அரசின் திட்டங்களை எப்படி நடைமுறைக்கு கொண்டு வந்து மக்களின் அபிமானத்தை சம்பாதித்துள்ளார் என்பதை கட்டுரையில் ஏராளமான தகவல்களை கொண்டு பேசியிருந்தார்கள். இப்போது ஞாயிறு மட்டும் தி இந்து ஆங்கில நாளிதழை வாங்கிக்கொண்டிருக்கிறேன்.  நிறைய முக்கியமான விஷயங்களை நடுப்பக்க கட்டுரைகளில் எழுதுகிறார்கள். மொழிபெயர்த்து எழுதுவதை இன்னும் மேம்படுத்திக்கொள்ள இக்கட்டுரைகளை வாசிப்பதும், தமிழில் மொழிபெயர்ப்பதும் உதவும் என நம்புகிறேன்.  அண்மையில் வடபழனிக்கு சென்று

நவீன இந்தியாவின் சிற்பி நேரு! - கடிதங்கள்

படம்
இந்தியாவின் நவீன சிற்பி நேரு  அன்புத்தோழர் இரா.முருகானந்தம் அவர்களுக்கு, வணக்கம். நலமாக இருக்கிறீர்களா? பேஸ்புக்கில் நேரு 171 கோடி ரூபாய் பட்ஜெட்டில் பக்ராநங்கல்  அணையைக் கட்டியதைப் பகிர்ந்திருந்தீர்கள். படிக்கவே ஆச்சரியமாக இருந்தது. நவீனத்துவ இந்தியாவின் அடிப்படை தேவையை நேரு அன்றே உணர்ந்திருந்தார். அதனால்தான் முக்கியமான கல்வி மற்றும் அறிவியல் அமைப்புகளை கட்டியமைக்க முடிந்தது. நேருவின் சொற்பொழிவுகளை படிக்கும்போது இந்தியாவின் பல்வேறு பிரச்னைகளின் மீது எப்படி கவனம் செலுத்தினார் என்பதை உணர முடிகிறது.  நேருவின் போராட்டக்கால சிந்தனைகள் நூலை சென்னையில் விட்டுவிட்டு வந்துவிட்டேன். பிரச்னையில் தனது பார்வைக் கோணத்தை தவறு என்றால் மாற்றிக்கொள்ளக்கூடிய நெகிழ்வுத்தன்மை நேருவுக்கு இருந்தது. இந்த அம்சம் இன்று, ஆட்சித்தலைவர்களுக்கு இல்லை. டொமினிக் ஜீவாவின் அனுபவப் பயணம் என்ற நூலை படித்தேன். மல்லிகை என்ற இதழை நாற்பது ஆண்டுகளாக நடத்தி வந்த எழுத்தாளரின் சுயசரிதை இது. மதுரை புராஜெக்ட் வலைத்தளத்தில் தரவிறக்கினேன். நூலகம் என்ற வலைத்தளத்தில் சில நூல்களை படிக்க தரவிறக்கியுள்ளேன். படித்துவிட்டு பகிர்வேன்.  நன்

எழுதுவதில் சுணக்கம்! - கடிதங்கள்

படம்
  எழுதுவதில் சுணக்கம் அன்புள்ள தோழர் முருகு அவர்களுக்கு, வணக்கம்.  நலமாக இருக்கிறீர்களா? இப்போது ஊருக்கு வந்துவிட்டேன். சென்னையில் வெயில் அதிகரித்து வருகிறது. அறையில் பயங்கரமான புழுக்கம். அலுவலகம் சென்றால் கூட எட்டு மணிநேரம் சமாளித்து விடலாம். வடக்குப்புதுப்பாளையம் நூலகத்திற்கு அன்பளிப்பாக தர எட்டு நூல்களை ரெடி செய்துள்ளேன்.  மந்திர சந்திப்பு - பாலபாரதி அவர்கள் எழுதிய நூலை படித்து வருகிறேன். இந்த நூல் தினசரி ஒரு அத்தியாயம் என அவரது பேஸ்புக் பக்கத்திலும், வலைத்தளத்திலும் வெளியானது. இப்போது நேரம் கிடைத்துள்ளதால் அதனை நூலாக தொகுத்துவிட்டார்.  அடோமிக் ஹேபிட்ஸ் என்ற நூலை கணியம் சீனிவாசன் சாரிடமிருந்து பெற்றேன். அதனை இனிமேல்தான் படிக்கத் தொடங்கவேண்டும். அடுத்து வரும் ஜூனில்தான் எங்களுக்கு வேலைகள் தொடங்கும் என நினைக்கிறேன். எனக்கென தனியாக எழுதும் வேலைகள் நிறைய இருக்கின்றன. ஆனால் என்னமோ தெரியவில்லை. எழுதுவதில் சுணக்கமாக சோம்பலாக இருக்கிறது. வேகமாக வேலைகளைத் தொடங்கவேண்டும். வாசிப்பதிலும் வேகம் கூட்டவேண்டும்.  நன்றி ச.அன்பரசு 5.4. 2021