திருவண்ணாமலைக்கு திடீர் பயணம் - முருகானந்தத்திற்கு எழுதிய கடிதங்கள்

 


வீட்டிலிருந்து வேலை - நோய்த்தொற்று 















10.1.2022

இனிய நண்பர் முருகுவிற்கு, வணக்கம். நலமா? சொந்த ஊர்களிலிருந்து சென்னைக்கு வந்து வேலை பார்த்து வந்தவர்கள் மீண்டும் சொந்த ஊருக்கு சென்றுவிடலாமா என யோசித்து வருகிறார்கள். நோய்த்தொற்று வேகமாக பரவி வருவதால் ஊருக்கு கிளம்பிவிடுவார்கள் என நினைக்கிறேன்.

இந்த வாரம் திருவண்ணாமலை செல்ல நினைத்தேன். கடிதம் எழுதும்போதே இந்த எண்ணம் தோன்றிவிட்டது. எனவே, பஸ் பிடித்து அங்கு சென்றுவிட்டேன். அந்த பயணத்தை முடித்துவிட்டு வந்துதான் கடிதத்தை பகுதி பகுதியாக எழுதி முடிவு செய்துள்ளேன்.

அங்கு சென்றபோது பிரெஞ்சு நாட்டின் மீது காதல் தஞ்சைக் கலைஞர் ஒருவரை சந்தித்தேன். தமிழ் ஆள்தான். வெளிநாட்டினருக்காகவே ஓவியங்களை வரைகிறார். அதாவது, அவர்கள்தான் அவருக்கு முதன்மையான வாடிக்கையாளர்கள். இப்போது கண்காட்சி வைக்க முயன்று வருகிறார். இவரும் குக்கூவைச் சேர்ந்த ஆள்தான்.  

இவரிடம் எழுதுக – ஜெயமோகன் எழுதிய நூலை வாங்கிப் படித்தேன். நூலில் எழுதுவது, அதில் எழும் சிக்கல்கள் பற்றிய கேள்விகளுக்கு விரிவாக பதில் சொல்லியிருக்கிறார். நூல் சிறப்பாக தயாரிக்கப்பட்டுள்ளது. எழுதுவது பற்றிய சந்தேகங்கள் உள்ளவர்களுக்கும் பயன்தரும் நூல்.

‘பர்ஃபெக்ட் நம்பர்’ என்ற கொரியப்படத்தைப் பார்த்தேன். தான் காதலிக்கும் பெண்ணை கொலைப்பழியிலிருந்து காப்பாற்ற கணிதப் பேராசிரியர் கணித திறன்களைப் பயன்படுத்துவதுதான் படத்தை சுவாரசியமாக்குகிறது. இறுதிக் காட்சியில் கலங்க வைத்துவிடுகிறார்கள்.

நன்றி!

அன்பரசு

 


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்