புத்தகத் திருவிழாவிற்கு சென்ற ஜீனியஸ்!
நரசிங்கபுரம் 24/1/2023
அன்பரசு
சாருக்கு, அன்பு வணக்கம். நலமா?
வேலை இல்லாத
சூழலில், பொருளாதாரம் மாபெரும் சிக்கலாக இருக்குமே? எப்படி எதிர்கொள்கிறீர்கள்? தோல்
பிரச்னைக்கு கூடுதல் செலவாகுமே? வேலைக்கான முயற்சி எந்தளவில் உள்ளது?
சென்றவாரம்
திங்கட்கிழமை 16/1/2023 அன்று புக்ஃபேர் சென்றேன். சாணக்கிய நீதி, நினைவாற்றலை வளர்க்க
என்ன செய்வது? ஆர்வமூட்டும் முல்லா கதைகள் ஆகிய நூல்களை வாங்கினேன். அறிவியல் தொடர்பாக
ஒரு ஆங்கில நூல் கிடைத்தது. கணிதத்திற்கென எந்த புத்தகமும் இல்லை; சிவராமன் சார் எழுதிய
நூல்கள் தவிர.
வரும் மார்ச்
பத்திற்குள் மாணவர் இதழ் வெளியீடு நிறைவடைகிறது. ஒரு வாரம், முன்னதாக கட்டுரைகளை வழங்கி
வருகிறேன். யாரும் கேள்வி கேட்காத வகையில் காலம் நகர்கிறது. மார்ச் 10க்குப் பிறகு
புத்தகம் ஏதேனும் வடிவமைக்கவேண்டும். அடுத்த
ஆண்டுக்கான இதழ் தொடங்குவதற்கு முன்….
முல்லாவின் கதைகளைப் படித்தேன். 46 பக்கங்கள் கொண்ட சிறு புத்தகம் அது. சுவாரசியமாக இருந்தது. பிரச்னைகளை எவ்வாறு சமாளிக்க வேண்டும், நுணுக்கமான தந்திரங்களை பேச்சில் எவ்வாறு சேர்க்க வேண்டும் என முல்லா நினைவூட்டியிருக்கிறார். நேற்று, சிவராமன் சார் நேர்காணல், பதிப்பக அலுவலகத்தில் படம்பிடிக்ககப்பட்டது.
நமது அலுவலகத்தில் கணித அறிஞர்களின் வாழ்க்கை முறைகளை விவரித்தார். கணித பயன்பாட்டை
எப்படி நவீன காலத்தில் பயன்படுத்தலாம் என்பதை விளக்கினார். எடுக்கப்பட்டட வீடியோவில்
ஆசிரியரின் பழைய கருத்துகள் மட்டுமே இடம்பெற்றிருந்தன.
இன்று
25/1/2023 ஐஐடி பேராசிரியர் ராஜேஷூடன் ஒரு செல்ஃபீ எடுக்க இருக்கிறேன். அவர் நேற்றே
என்னை அழைத்தார். ‘மாற்றி யோசி’ கணிதப் பக்கம் தொடங்கி 25 வாரம் ஆகிவிட்டதாம். ‘’அலுவலகத்தில்
எடிட்டர் இல்லையென்றாலும் பரவாயில்லை’’ என்றார். இருப்பினும் ‘’அவர் இருந்தால்தான்
சரியாக இருக்கும்’’ என்று சொல்லிவிட்டேன். இன்று நடப்பதை எழுதி ஃபேஸ்புக்கில் பதிவிடப்
போகிறேன். என்ன நடக்கப்போகுதோ? எல்லாவற்றையும் அப்படியே எழுதுவேன்.
வாரிசு
படத்தைப் பார்த்தேன். சூரிய வம்சம் படத்தை இந்த காலத்தில் எடுத்திருந்தால் இப்படித்தான்
இருந்திருக்கும் போல. இருந்தாலும் விஜய்யின் நடிப்பு ஓவர். சகித்துக்கொண்டு விட்டுவிட்டு
படத்தை நகர்த்தி, கிளைமேக்ஸ் அட்வைஸ்களைக் கேட்டேன். பரவாயில்லை.
நன்றி
காந்திராமன்
image -
கருத்துகள்
கருத்துரையிடுக