சீன அதிபர் ஷி ஜின்பிங்கிற்கு வயது 70! - அடுத்த சீன அதிபர் யார்?
ஷி ஜின்பிங், சீன அதிபர் |
சீன அதிபர்
ஷி ஜின்பிங்கிற்கு வயது 70
சீன அதிபர்
ஷி ஜின்பிங், மூன்றாவது முறையாக அதிபராக பொறுப்பேற்று ஆட்சியை நடத்திவருகிறார். இது அவருக்கு
மூன்றாவது ஐந்தாண்டு. மார்ச 2023இல் ஆட்சியை தக்கவைத்துள்ளவர், வாழ்நாள் முழுக்க அதிகாரத்தில்
இருப்பதற்கு ஏற்றபடி கம்யூனிஸ்ட் கட்சியில் உள்ள தனது ஆதரவாளர்களை தனது அணியில் திரட்டியுள்ளார்.
தனக்கு எதிராக உள்ளவர்களை முற்றாக விலக்கியுள்ளார் என அசோசியேட் பிரஸ் தனது செய்தியில்
கூறியுள்ளது.
கடந்த ஜூன்
பதினைந்தாம் தேதி அதிபர் ஷி ஜின்பிங் எழுபது வயதை எட்டினார். அமெரிக்கா, இங்கிலாந்து
என பல்வேறு நாடுகளுடன பகை ஏற்பட்டுள்ள நிலையில், நாட்டில் பொருளாதாரம் இக்கட்டான சூழ்நிலையில்
இருக்கிறது. அந்த நேரத்தில் அழுத்தத்தை சமாளித்து அதிகாரத்திலும் இருக்கிறார் ஷி ஜின்பிங்.
ஷி ஜின்பிங்கிற்கு
எழுபது வயதாகிவிட்டது. அடுத்த அதிபராக யார் வருவார் என்ற கோணத்தில் வால்ஸ்ட்ரீட் ஜர்னல்
பத்திரிகையாளர் சுன் ஹான் வாங் பார்டி ஆஃப்
ஒன் என்ற நூலை எழுதியிருக்கிறார். அதில் அடுத்து அதிபராக வருபவரின் சாத்தியங்களை அலசியிருக்கிறார்.
உண்மையில்,
சீனாவில் அடுத்த அதிபராக வரும் நபர் பற்றிய பெரிய ஆரவாரம் எப்போதும் ஏற்பட்டதில்லை.
இதற்கு உதாரணமாக ஒரு வரலாற்று உதாரணம் கூறப்படுகிறது. மாவோவிற்கு பிறகு வந்த அதிபராக
வந்த சூ என்லாய், மக்களிடையே பெரிதும் புகழ்பெற்றவர். இது மாவோவிற்கு அவர் மீது பொறாமை
கொள்ள காரணமாக அமைந்துவிட்டது. மாவோ, என்லாய் என இருவருக்குமே புற்றுநோய் பாதிப்பு
இருந்தது. மனிதநேய அடிப்படையில் கூட மாவோ என்லாயை இறக்கும்வரை சென்று பார்த்ததில்லை.
மாவோ தான்
சென்று பார்க்காததோடு அவருக்கு சிகிச்சை அளித்த தனது மருத்துவர்களையும் தடுத்தார்.
இதை அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் லீ ஸீசுயி உறுதிப்படுத்தியுள்ளார். 1975ஆம் ஆண்டு நவம்பர் 29 அன்று சூ என்லாயை, மருத்துவர்
லீ சென்று பார்த்திருக்கிறார். அப்போது சூ, தனது கையைக் கூட உயர்த்தமுடியாத பலவீனமான
நிலையில் இருந்திருக்கிறார். பின்னாளில், 1976ஆம் ஆண்டு ஜனவரி எட்டாம் தேதி, அதிபர்
சூ காலமானார். அவர் காலமானதற்கு மருத்துவர்கள் யாரும் கறுப்பு பேட்ஜ், உடை அணிய அனுமதி
மறுக்கப்பட்டது. நேரில் சென்று பார்க்கவும் மாவோ அனுமதிக்கவில்லை.
சீன புத்தாண்டுக்காக
மாவோவின் செயலாளர் ஸாங் யூஃபெங் பட்டாசு வெடித்து கொண்டாடினார். ஏறத்தாழ இந்த நிகழ்ச்சியை
மாவோ, உள்நோக்கத்துடன் சூ என்லாய் இறந்துபோனதை மகிழ்ச்சியுடன் கொண்டாடியதாக செய்திகள்
பரவின. 1976ஆம் ஆண்டு மாவோ இறந்தபிறகு கம்யூனிஸ்ட் கட்சிக்குள் சமநிலை குலைந்தது. உயர்பதவியில்
இருந்தவர்கள் ஆட்சி அதிகாரத்தை இரண்டு ஆண்டுகள் ஒருவர் ஆள்வது என மாற்றிக்கொண்டனர்.
தற்போதைய
அதிபர் ஷி ஜின்பிங் இந்த முறையை ஒழித்துவிட்டு தன்னை அதிபராக உயர்த்திக்கொண்டார். மூன்றாவது
முறையாக ஆட்சி நடத்துகிறார். அதேசமயம், தனக்குப் பிறகு அடுத்த தலைவர் யார் என்பதையும்
வெளிப்படையாக கூறவில்லை. பொதுவாக சர்வாதிகாரிகள்
கூட தனக்குப் பிறகு வரும் ஆட்சியாளர் பற்றி அறிவிப்பார்கள். ஆனால், ஷி ஷின்பிங் அதையும்
செய்யவில்லை. அதிகாரம் கைமாறுவது பற்றி அவருக்கு பயம் இருக்கலாம்.
பொதுவாக ஒருவருக்கு
அடுத்ததாக பதவிக்கு வருபவர் என்று இன்னொருவரை அறிவித்தபிறகு, கட்சியில் உள்ளவர்கள்,
தொழிலதிபர்கள் என பலரும் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவருடன் தங்கள் நட்பை உருவாக்கிக்கொள்வார்கள்.
இதனால், ஆட்சியில் உள்ள அதிபராக இருப்பவருக்கு எதிராக கூட சூழ்நிலைகள் உருவாகும் நிலை
ஏறபடலாம்.
இதுபோன்ற
நிலை மாவோவின் ஆட்சிக்காலத்தில் ஏற்பட்டது. லின் பியாவோ என்பவரை அடுத்த அதிபராக அறிவித்தனர்.
பின்னர் அவர், திடீரென விமான விமானத்தில் இறந்துபோனார். இதை ஒரு மர்மமாகவே ஊடகங்கள்
பார்க்கின்றன. ஷின் பிங்கிற்கு அடுத்த அதிபராக ஹூ சுன்ஹூவா என்பவர் காங்கிரஸ் மாநாட்டில்
அறிவிக்கப்பட்டார். ஆனால் பிறகு இந்த முடிவு விலக்கிக்கொள்ளப்பட்டது.
கட்சியை மறு
உருவாக்கம் செய்துள்ள ஷி ஜின்பிங் அதில் பலவீனமான கண்ணியாகவே உள்ளார். சீனாவை வலிமை
வாய்ந்த நாடாக மாற்றும் பணியில் இதன் பாதிப்பு வெளிப்படையாக தெரிகிறது. அடுத்த தலைவர்
என்பதை ரகசியமாக வைத்திருப்பது சிறிது காலத்திற்கு பயன் தரலாம். ஆனால், அந்த நிலைமை
அப்படியே தொடர்வது கட்சியில் கலகத்தையே உருவாக்கும்.
உலகில் இரண்டாவது
பெரிய பொருளாதாரம் கொண்ட நாடு சீனா, மக்கள்தொகை அடிப்படையில் இந்தியாவிற்கு பிறகு இரண்டாவது
நாடாக உள்ளது. பெய்ஜிங்கில் அரசியல் குழப்பங்கள் ஏற்பட்டால் அதன் வலிமை மிகுந்த ராணுவம்
ஆட்சியைக் கைப்பற்றவே அதிக வாய்ப்புகள் உள்ளன.
2010ஆம் ஆண்டு
உலக நாடுகளின் அரசியல் தலைவர்கள் பற்றிய ஆய்வொன்றை அரசியல் ஆய்வாளர்கள் அலெக்ஸாண்டர்
டெப்ஸ், ஹெச் இ கோமன்ஸ் ஆகியோர் செய்தனர். இதில், 1910ஆம் ஆண்டு தொடங்கி 2000 வரையிலான
அரசியல் தலைவர்கள் பற்றிய ஒப்பீடு இடம்பெற்றிருந்தது. இதன்படி 41 சதவீத தலைவர்கள் வெளிநாடுகளில்
அடைக்கலம் புகுந்து வாழ்கிறார்கள். பிறர் ஆட்சியை விட்டு விலகிய பிறகு அவர்கள் மீது
குற்றம்சாட்டப்பட்டு சிறை தண்டனை அல்லது மரணதண்டனை விதிக்கப்ட்டுள்ளது.
சீன அதிபர்
ஷி, ''மக்கள் புயல், வெள்ளம், காற்று என மோசமான சூழ்நிலைகளுக்கு தயாராக இருக்கவேண்டுமென'' முன்னமே கூறியிருக்கிறார். ஏற்கெனவே அந்த நாடு, உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் அதிக
அழுத்தங்களை சந்தித்து வருகிறது. எனவே, இந்தியாவும், பிற உலக நாடுகளும் மோசமான சூழ்நிலை
ஏற்பட்டால் அதை எதிர்கொள்ள தயாராக இருக்கவேண்டும். அதுவே புத்திசாலித்தனம்.
கிளாட் அர்பி
டெக்கன் கிரானிக்கல்
15.6.2023
மூலத்தை தழுவிய
தமிழாக்க கட்டுரை.
கருத்துகள்
கருத்துரையிடுக