உடல் எடையைக் குறைக்க என்னென்ன வகையான உணவுகளைச் சாப்பிடலாம்?

 




எடை குறைப்புக்கான உணவுகள் என்னென்ன?





எடை குறைப்புக்கு உதவும் உணவுகள்

க்ரீன் டீ

க்ரீன் டீயை சர்க்கரையோடு போட்டுக் குடித்தால் உடல் எடை குறையாது. இப்படி டீ குடிப்பதை நீங்கள் பழக்கமும் ஆக்கிக்கொள்ளக்கூடாது.  சர்க்கரை அல்லது க்ரீம் என ஏதுமில்லாமல் க்ரீன் டீயை வெந்நீரில் போட்டுக் குடித்தால் நல்லது. மாவுச்சத்தை உடல் உட்கிரகிக்க க்ரீன் டீயில் உள்ள ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் உதவுகின்றன. இதிலுள்ள காஃபீன் உங்களை உற்சாகப்படுத்துகிறது. உடற்பயிற்சியோடு க்ரீன் டீயை இணைத்துக்கொள்வது நல்லது.

 ஆப்பிள் சிடார் வினிகர்

உணவில் சர்க்கரை, எண்ணெய் இல்லாமல் சிடார் வினிகரைப் பயன்படுத்தினால் கலோரி கூடாது. உடல் எடைக் குறைப்பில் பங்கம் ஒன்றும் நேராது. உணவு உண்ணும் முன்னர் சிடார் வினிகரை நீங்கள் சாப்பிட்டால் ரத்த அழுத்த உயர்வைக் குறைப்பதாக கூறுகிறார்கள். ஆதாரம் என்று கேட்டால் ஆய்வாளர்கள் அதைப்பற்றித்தான் ஆராய்ச்சி செய்துகொண்டிருக்கிறார்கள். உடல் எடையைக் குறைக்க நினைத்தால் ஃபில்டர் செய்யப்படாத சிடார் வினிகரைப் பயன்படுத்துங்கள்.

பிஸ்தா

ஒவ்வொரு கவளம் சோற்றுக்கும் கலோரி கணக்குப் பார்ப்பவர்களுக்கு பிஸ்தா பருப்பு சிறந்த டயட் உணவு. தயங்காமல் அதன் செறிவூட்டப்படாத கொழுப்பை உடலில் ஏற்கலாம்.

கருப்பு மிட்டாய்

டார்க் சாக்லெட்டைத்தான் தலைப்பில் சொல்லியிருக்கிறோம். அமுல், நெஸ்லே போன்ற நிறுவனங்கள் அல்லாமல் பலரும் டார்க் சாக்லெட்டை தயாரித்து விற்று வருகிறார்கள். அதில் 70 சதவீதம் கோக்கோ இருக்கவேண்டும். அப்போதுதான் அதை உணவில் சேர்த்துக்கொண்டால் உடல் எடை குறையும். டபுள்டோர் பிரிட்ஜில் தினசரி இரண்டு கடி கடித்துவிட்டு டார்க் சாக்லெட்டை வைத்து பராமரித்து சாப்பிடலாம்.

 

சர்க்கரை வள்ளிக்கிழங்கு

ஆங்கிலத்தில் இனிப்பு உருளைக்கிழங்கு என பெயர் வைத்திருக்கிறார்கள். இதல் புரதம், நார்ச்சத்து ஆகியவை உண்டு. உணவோடு, சைட் டிஷ்ஷாக சர்க்கரை வள்ளிக்கிழங்கை சாப்பிடலாம். இந்தியாவில் இதை வேக வைத்து சாப்பிடுகிறார்கள். புதுமை விரும்பி என்றால் சாலட் போல வெட்டிச் சாப்பிடலாம்.

 தர்ப்பூசணி

பூசணியை ரத்தசிவப்பாக வெட்டி வைத்து விற்று வருகிறார்கள். சாலையோரத்தில் பார்த்திருப்பீர்கள். ரிலையன்சில் காயை குண்டுக்கட்டாக வாங்கி வந்து வெட்டி அல்லது கடையில் வெட்டிய துண்டாக வாங்கியும் சாப்பிடலாம்.

தண்ணீரைக் குடிக்க குமட்டுகிறது என்பவர்கள் தர்ப்பூசணியை வாங்கி சாப்பிடலாம். பிறகு ஆசைப்பட்டவர்கள் அல்லது கடுப்பேற்றவேண்டும் என நினைப்பவர்கள் முகத்தில் பூசணி விதைகளைத் துப்பி விளையாடலாம். மறக்காமல் புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவேற்றிவிடுங்கள். அது மிகவும் முக்கியம்.

ஆலிவ் எண்ணெய்

உலகளவில் உள்ளூர் எண்ணெய்களை எட்டி உதைத்து வெளியே தள்ளிவிட்டு ஆடுகளத்தில் ப்ரீமியம் ரகத்தில் வீற்றிருக்கும் எண்ணெய். இதில் காய்கறிகளை வறுத்து, வணக்கி, சமைத்து சாப்பிட்டால் சாப்பிடுபவர்களுக்கு மோட்சம் கிடைக்கும் என்றெல்லாம் கூற முடியாது. ஆனால், கிடைக்க வாய்ப்பிருக்கிறது என எண்ணெய் விற்பவர்கள் கூறுகிறார்கள்.

 உள்ளூரில் கிடைக்கும் எண்ணெய்களை பயன்படுத்தி சமையுங்கள். சாப்பிடுங்கள். அதுவே உடலுக்கு நல்லது. ஆலிவ் எண்ணெய் வாங்குமளவு வசதி இருக்கிறது, ஏன் கூடாது என்றால், எதையும் யோசிக்கவேண்டியதில்லை. ஐந்து லிட்டர் கேன் ஒன்றை வாங்கி வந்து சமைத்தே பார்த்தே விடுங்கள். என்ன கெட்டுவிடப் போகிறது.?

டைம் வார இதழ்

https://pixabay.com/photos/slimming-diet-health-sugar-4370008/

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்