அலமாரியில் கால்நடை தீவனப்பயிர்களை வளர்க்கும் விவசாயி - நாமக்கல் சரவணன்

 








அலமாரியில் சோளம் விதைத்து அதை கால்நடைகளுக்கு போடுவதை எங்கேனும கண்டிருக்கிறீர்களா? அதை நாமக்கல்லைச் சேர்ந்த சரவணன் செய்கிறார். வெளிநாடுகளில் மண் இல்லாமல் ஹைட்ரோபோனிக் முறையில் காய்கறி விளைவிப்பதை பற்றி அறிந்திருப்பீர்கள். அதை நமது ஊரில் சாத்தியப்ப்படுத்துகிறார். தனது உறவினர்களுக்கும் ஆர்வமுள்ளவர்களுக்கு சொல்லித் தருகிறார்.

அரியக்கவுண்டம்பட்டியில் விவசாயத்திற்கென சிறியளவு நிலம் இருக்கிறது. ஆனால் அவர் வளர்க்கும் கால்நடைகளுக்கான தீனி என்று வரும்போது அது போதுமானதாக இல்லை., எனவேதான் மண்ணில்லாமல் விவசாயம் செய்யும் வழியை கிரிஷி விக்யான் கேந்திரா எனும் மத்திய அரசின் ஆராய்ச்சி அமைப்பில் அறிந்து கற்றுத் தேர்ந்திருக்கிறார்.

இதில் மண் இல்லாத காரணத்தால் நீர் மூலமே அனைத்து சத்துகளையும் பயிருக்கு தரவேண்டியிருக்கும். குறைவான அளவில் கால்நடை தீவனங்களை, பருப்புகளை விளைவிக்க முடியும். சந்தையில் கிடைக்கும் தீவனங்களை விட மலிவாக விளைவிக்க முடிந்திருக்கிறது என்பதுதான் இதில் முக்கியமான சங்கதி.

500 கிலோ விதையில் 4.5 கிலோ கால்நடை தீவனத்தைப் பெறமுடிகிறது. விதை சோளத்திற்கு இருபத்து நான்கு மணிநேரமும் நீர் விட்டு அதை எடுத்து தனியாக வைக்கவேண்டும்.  பிறகு, சூரிய வெளிச்சம் நேரடியாக படாதபடி பயிரை வளர்க்கவேண்டும். ஏழு நாட்களுக்கு மூன்று மணிநேரம் நீரை விட வேண்டும். எட்டு நாட்களுக்குப் பிறகு சோளம் விளைந்து அறுவடைக்கு தயாராக இருக்கும்.

தனது செயல்பாட்டிற்காக 2018ஆம் ஆண்டு இன்னோவேட்டடிவ் ஃபார்மர் என்ற விருதை மத்திய அரசிடம் பெற்றிருக்கிறார். டெல்லியில் உள்ள தேசிய அரிசி ஆராய்ச்சி கழகம், சிறந்த விவசாயிக்கான விருதை அளித்துள்ளது.2019ஆம் ஆண்டு இந்திய வேளாண்மை ஆராய்ச்சி கவுன்சிலின் இயற்கை விவசாயி விருதைப் பெற்றுள்ளார் சரவணன்.  

 

Why this nammakkal farmer grows maize in his cupboard

Senthilkumaran

Toi

https://in.pinterest.com/pin/310818811798928621/

கருத்துகள்