இடுகைகள்

கோட்டா லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தென்கொரியாவில் மருத்துவர்கள் போராட்டம்!

படம்
  தென்கொரிய மருத்துவர்கள் போராட்டம் எதற்கு? தென்கொரியாவில் ஒரு மாதத்திற்கும் மேலாக மருத்துவர்களின் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த போராட்டம் காரணமாக நோயாளிகள் அவதிப்பட்டு வருகிறார்கள். அரசு, மருத்துவக்கல்லூரிகளில் கூடுதலாக மாணவர்களை சேர்க்க முயன்று வருகிறது. இதற்கு மருத்துவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். என்ன காரணம்? வேலை செய்யும் சூழ்நிலை மேம்படவில்லை. ஏற்கெனவே கொடுக்கும் ஊதியம் பற்றாக்குறையாக உள்ளது. இதில் கூடுதலாக மருத்துவர்களை கொண்டு வந்து இதே சூழ்நிலையில் தள்ளினால் அது தவறு என்பதுதான் மருத்துவர்களின் வாதம். சீனியர், ஜூனியர் என அனைத்து மருத்துவர்களும் இப்போது போராட்டத்திற்கு வந்துவிட்டனர்.  சியோலில் உள்ள ஐந்து பெரிய மருத்துவமனைகளில் உள்ள ஜூனியர் மருத்துவர்கள் 39 சதவீதம் பேர் போராட்டத்தில் உட்கார்ந்துவிட்டனர். இதனால், அறுவை சிகிச்சைகள் தள்ளிப்போடப்பட்டு உள்ளன. அவசரசிகிச்சை பிரிவுகளில் உள்ள நோயாளிகளை திரும்ப அனுப்பி வருகின்றனர். அரசு,  இந்த விவகாரத்தில், கிராமப்புறங்களில் மருத்துவர்கள் இல்லை. அவர்களுக்கும் மருத்துவ வசதி கிடைக்கவேண்டும் என்றால் மருத்துவர்களின் எண்ணிக்கை கூடவேண்ட