இடுகைகள்

மின்னூல் வெளியீடு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பேராசை பூதம் - ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கை 2023 பாகம் 1 - மின்னூல் வெளியீடு

படம்
  அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் அறிக்கை பற்றிய அம்சங்களை திரு. இரா.முருகானந்தம் தமிழாக்கம் செய்ய அறிவுறுத்தினார். பங்குச்சந்தை, முதலீட்டு நிதி  என்பதெல்லாம் நான் இதுவரை செய்யாத விஷயங்கள். ஆனாலும் முருகு அவர்களின் நம்பிக்கை என்னை எழுத வைத்தது. அப்படித்தான் ஹிண்டன்பர்க் அமைப்பின் ஆங்கில அறிக்கையின் ஒருபகுதி நூலாகி இருக்கிறது.  அதானி குழுமத்தின் மோசடிகளில் ஒருபகுதிதான் இந்த நூல். மொத்தம் பத்து அத்தியாயங்கள் உள்ளன. இவற்றில் நீங்கள் அதானி குழுமம் எப்படி இயங்குகிறது, நிதி பரிவர்த்தனை முறை, மோசடியாளர்களின் கூட்டு, மோசடி முறை, வெளிநாட்டு மோசடி நிறுவனங்கள் எங்கெங்கு உள்ளன, அதற்கான ஆதாரங்கள் என அனைத்தையும் தெளிவாக தெரிந்துகொள்ள முடியும்.  ஒரு நிறுவனம் வளர்கிறது, உச்சமான சொத்து மதிப்பு பெறுகிறது, உலகளவில் தொழிலதிபர் வணிக இதழ்களின் பெருமைக்குரிய பட்டியல்களில் இடம்பெறுகிறார். இதெல்லாம் சாதாரண மக்களுக்கு எள் அளவு கூட பயனில்லாத செய்தி. ஆனால் அந்த தொழிலதிபர், பங்கு விலையை செயற்கையாக உயர்த்தி பொதுத்துறை வங்கிகளில் கடன்களைப் பெறுகிறார். அதை வைத்து முறைகேடுகளில் ஈடுபடுகிறார். இதனால் நிறுவனம் திவால் ஆகும் சூ

நிலவொளிரும் மலைகள் - புதிய மின்னூலின் அட்டைப்படம் வெளியீடு

படம்
 

சுவனபதியின் கீழே ஓடும் ஆறு - இரா.முருகானந்தம்- புதிய மின்னூல் வெளியீடு

படம்
  இரா.முருகானந்தம் (முருகானந்தம் ராமசாமி), சமூக வலைத்தளத்தில் எழுதும் பகிரும் கருத்துகள் முக்கியமானவை. திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில் தொப்பம்பட்டி கிராமத்தில் வாழும் முருகானந்தம், தமிழ் இலக்கியம், பண்பாடு, பொருளாதாரம், அரசியல் செயல்பாடு என பல்வேறு தளங்களிலும் இயங்கி வருபவர். பல்வேறு டிவி சேனல், யூட்யூப் சேனல்களிலும் கலந்துரையாடல்களில் பங்கேற்று வருகிறார். சமூகம் சார்ந்து முருகானந்தம் வெளியிடும் பதிவுகளைக் கொண்டதே இச்சிறுநூல். இதில், சமூகத்திற்கு முக்கியமான நீங்காத இடம் பிடித்த ஆளுமைகள், எழுத்தாளர்கள் பற்றி எழுதியிருக்கிறார். அதோடு, வாழும் காலத்தில் நம்மைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளையும், அதற்கான எதிர்வினைகளையும் தீர்க்கமாக அவரால் சுட்டிக்காட்ட முடிகிறது. கொண்ட கொள்கையில் உறுதியும், நேர்மையும் முருகானந்தம் அவர்களின் சமூக வலைத்தள பதிவுகளில் எப்போதும் குறையாது நீக்கமற இடம்பெற்று வருகிறது. நூலை வாசிக்க.... https://www.amazon.in/dp/B0BTL6KJH1 இரா.முருகானந்தம்

அசுரகுலம் 2 - குற்றங்களின் முன்கதை - சீரியல் கொலைகாரர்களின் நதிமூலத்தை ஆராயும் நூல்!

படம்
        அசுரகுலம் முதல் பாகத்தில் குற்றவாளிகளைப் பற்றிய கதைகளைக் கூறியது. இரண்டாவது பாகமான குற்றங்களின் முன்கதையில் குற்றங்களை செய்தவர்களின் உளவியல் சிக்கல்கள், கொலை செய்த முறை, அவர்கள் பெற்ற தண்டனை, குற்றங்களைப் பற்றிய மக்களின் மனநிலை, இதனை மக்கள் எப்படி எதிர்கொண்டார்கள் என்பது பற்றிய விவரங்கள் கூறப்பட்டிருக்கிறது.  உடலுக்கு வரும் நோய்களைப் போலவே மனதில் ஏற்படும் உளவியல் சிக்கல்களையும் பார்க்க பழகுவது இப்போதுதான் தொடங்கியுள்ளது. இந்த நூல் உளவியல் சார்ந்த அறிகுறிகளை விளக்கி அதனை கவனமாக பார்க்கவேண்டும் வலியுறுத்துகிறது. உளவியல் குறைபாடுகளை சாதாரணமாக பார்க்க கூடாது என்பதை இந்த நூலை வாசிக்கும் வாசகர்கள் உணர்வார்கள் என்று உறுதியாக நம்பலாம். அசுரகுலம் நூலைப் படிக்காதவர்களும் இந்த நூலை வாசிக்கலாம். குற்றங்களைப் பற்றிய ஆவணப்படுத்துதல் மேற்குலகில் அதிகம் உண்டு. அந்த வகையில் தமிழில் இதுபோன்ற நூல்கள் குற்றங்களை குறைப்பதில் உதவும். அறிவியல் முறையில் குற்றங்களை எப்படி காவல்துறையினர் அணுகி சீரியல் கொலைகார ர்களை பிடிக்கிறார்கள் என்பதையும் நூல் பேசுகிறது. அமேசானில் வாசிக்க.... https://www.amazon.in/dp

ஒரு துளி மணலில் ஓர் உலகு! மின்னூல் விரைவில்......

படம்

சமூக பொறுப்புணர்வுத் திட்டம் மின்னூல் வெளியீடு - தரவிறக்க முகவரி

படம்
இனிய உறவுகளுக்கு, கொரோனா பாதிப்புக்கு நிறுவனங்கள் தரும் நிதியை மத்திய அரசு பிரதமரின் நிதித்திட்டத்திற்கு அனுப்பக் கோரியுள்ளது. இதன்வாயிலாக, அனுப்பும் நிதியை சமூக பொறுப்புணர்வு திட்டத்தில் வரவு வைப்பதாக அரசு கூறியுள்ளது. இதனால் மாநில அரசுக்கான நிதித்திட்டத்திற்கு நிதி கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இந்த நேரத்தில் நாம் புரிந்துகொள்ளவேண்டியது சிஎஸ்ஆர் எனும் சமூக பொறுப்புணர்வு திட்டம் பற்றி. அத்திட்டத்தை எம்முறையில் செய்யலாம், அதிலுள்ள வகைகள், இத்திட்டத்தின் நோக்கம் என்ன, திட்டத்திற்கு செலவு செய்வதன் மூலமாக நிறுவனங்கள் எப்படி வணிகரீதியாக வெற்றி பெற்றுள்ளன, கால ஓட்டத்தில் தம்மை எப்படி தக்க வைத்துக்கொள்ள முயல்கின்றன என்பதை பற்றிய விவரிக்கிறது சமூக பொறுப்புணர்வுத் திட்டம் எனும் மின்னூல். சமூக பொறுப்புணர்வு திட்டம் பற்றி ஆங்கிலத்தில் ஒரு டஜனுக்கும் மேலான நூல்கள் எழுதப்பட்டுள்ளன. ஆனால் தமிழில் இந்த எண்ணிக்கை குறைவு. இந்த மின்னூல் எளிமையான முறையில் சமூக பொறுப்புணர்வு திட்டம் பற்றி விளக்குகிறது. அதனை பயன்படுத்தி வணிகத்தை எப்படி மேம்படுத்துவது என்றும் எடுத்துக்காட்டுகளுடன் விளக்குகிறது. சமூக பொ

சந்திப்போமா - கடிதங்கள் - மின்னூல் வெளியீடு

படம்
  இனிய நண்பர்களுக்கு,  எனது நண்பர் சபாபதி அவர்களுக்கு எழுதிய கடிதங்கள்.. இப்போது மின்னூலாக வெளியிடப்படுகிறது. இந்நூல் கிரியேட்டிவ் காமன் உரிமையின் கீழ் வெளியிடப்படுகிறது. பிடிஎப் வடிவிலும், இபப் வடிவிலும் இந்நூலை நீங்கள் தரவிறக்கிக் கொள்ளலாம். நன்றி.  http://www.mediafire.com/file/r8feeupyb9o0kb1/santhipoma.....pdf/file http://www.mediafire.com/file/aebrelpm9g6toue/santhipoma.....epub/file  

லவ் இன்ஃபினிட்டி நூலை தரவிறக்க வலைத்தள முகவரி!

படம்
லவ் இன்ஃபினிட்டி மின்னூலை பீடிஎஃப்பாக தரவிறக்க  http://www.mediafire.com/file/6tdmhfmriy2c3s3/luv_infinitity1.pdf/file லவ் இன்ஃபினிட்டி நூலை இபப் கோப்பாக தரவிறக்க... http://www.mediafire.com/file/avg5czmz4s5k8u9/luv_infinitity.epub/file

அன்புள்ள அப்பாவுக்கு... மின்னூல் தரவிறக்க முகவரி!

படம்
அன்புள்ள அப்பாவுக்கு மின்னூலை  நீங்கள் எளிதாக தரவிறக்கிக் கொள்ள முடியும். அதற்கான வலைத்தள இணைப்பை கீழே கொடுத்துள்ளேன். பீடிஎப் கோப்பைத் தரவிறக்க http://www.mediafire.com/file/hnhihfe9mrs4psm/AA.pdf/file இ பப் கோப்பைத் தரவிறக்க http://www.mediafire.com/file/n4sybn548xu9j3c/aa_bk.epub/file

மனமறிய ஆவல் - புதிய மின்னூல் அட்டைப்படம் வெளியீடு

படம்
விரைவில் இரா. முருகானந்தம் அவர்களுக்கு அன்பரசு சண்முகம் எழுதிய கடிதங்கள் மின் நூலாக வெளிவரவிருக்கிறது. கடிதங்கள் ஏன் முக்கியத்துவம் பெறுகின்றன? அவை குறிப்பிட்ட காலகட்டத்தில் நமக்கு ஏற்பட்ட உணர்வு நிலைகளை, பிரச்னைகளை பதிவு செய்கிறது. ஒருவகையில் காலத்தை காகிதங்களில் உறையவைக்கிறது. தனிப்பட்ட வாழ்க்கையை அவர் செய்யும் வேலை, சூழ்ந்துள்ள மனிதர்கள், நகரம், அங்குள்ள சூழல், அரசின் உத்தரவுகள் என நிறைய விஷயங்கள் பாதிக்கின்றன. நிச்சயம் இதற்கான எதிர்வினைகள் நம் மனதில் தோன்றாமல் இல்லை. சிலர்  அதனை உடனுக்குடன் பகிர்ந்துவிடுவார்கள். இதுவும் அப்படியொரு பகிர்தல்தான். கடிதம் வழியாக நடந்த உரையாடல் எனக் கூட கூறலாம். தற்போது அட்டைப்படம் உங்களுக்காக....

முத்தாரம் நேர்காணல்களின் தொகுப்பு! - மின்னூல் ரிலீஸ்

படம்
இனிய வாசக நண்பர்களுக்கு, முத்தாரம் வார இதழில் குங்குமம் முதன்மை ஆசிரியர் கே.என்.சிவராமன் அவர்களின் வழிகாட்டுதலில் வெளியான இருபது நேர்காணல்களின் தொகுப்பு இது. பிரதிலிபி தமிழ் தளத்தில் மின்னூலாக வெளியாகியுள்ளது. வாசியுங்கள்.விமர்சியுங்கள் நன்றி! இணைய லிங்க் இதோ! h ttps://tamil.pratilipi.com/ story/eylkiF4Q2Paw

மழைக்காலத்தின் ஒரு சிறு வெயில்பொழுது

மழைக்காலத்தின்  ஒரு சிறு வெயில்பொழுது மோகனசுந்தரம் தலைப்பு: மழைக்காலத்தின் ஒரு  சிறுவெயில்பொழுது வகை: புனைவு ஆசிரியர்: மோகனசுந்தரம் தொகுப்பாசிரியர்கள்: ரிச்சர்ட் மஹாதேவ், பியர்சன் கயே உருவாக்கக்குழு: லிஸா ஜோஸ், ஷைனி, நிகில் வாசுதேவ் பதிப்பாசிரியர்கள்: அம்பறா சுப்பிரமணி, லோக்கல் ப்ரூஸ்லீ, சுய்யா மின்னூல் பதிப்புரிமை மற்றும் வலைப்பூ வெளியீடு: தி ஆரா பிரஸ் & Komalimedai.blogspot.in மின்னஞ்சல்: sjarasukarthick@rediffmail.com வெளியீடு: ஏப்ரல் 2015 அட்டை வடிவமைப்பு: Incrdible bug கிரியேட்டிவ் காமன்ஸ் உலகளாவிய உரிமத்தின் கீழ் வெளியிடப்படும் இந்த மின்னூலினை யாவரும் வாசிக்கலாம், பகிரலாம். மூலத்தில் மாற்றம் ஏதும் இல்லாத முறையில் பயன்படுத்தவேண்டும். வணிக முறையில் பயன்படுத்தும்போது வலைப்பூ, மற்றும் மின்னஞ்சல் முகவரியினை குறிப்பிடவேண்டும். பேஜ் 3 இனிய தோழமைகளுக்கு, வணக்கம். இந்த நூலைப்பற்றி கூற வேண்டுமெனில் இது காதல் காக்டெய்ல் எழுத்துக்கள் என்று கூறலாம். இதுவரை ஆரா பிரஸ் பதிப்பித்த நூல்கள் அனைத்தும் கட்டுரைகள்