இடுகைகள்

டெக் - சென்சார்! லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

வீட்டுக்கு காதுண்டு!

படம்
வீட்டுக்கு காதுண்டு! வீட்டிலுள்ள டிவி, லைட், சமையல் சாதனங்களை ஸ்மார்ட் சாதனங்கள் மூலம் கட்டுப்படுத்தி மகிழ்ந்திருப்பீர்கள். அதேசமயம் ஒலிகளை பொருட்கள் உணரும்படி செய்தால் எப்படியிருக்கும்? மின் சுன் ஹூவாங், சௌம்யஜித் மண்டல் ஆகியோரின் ஆராய்ச்சி இதுதான். “மனிதர்களின் காதுகளைப் போலவே உணரும் தன்மைகொண்ட அல்காரித முயற்சி இது. மனிதர்களின் விருப்பத்தை புரிந்துகொள்ள சென்சார்களை பயன்படுத்துகிறோம்” என்கிறார் ஆராய்ச்சியாளர் ஹூவாங். நம்மைச்சுற்றியுள்ள மின்காந்த அடுக்கை(60Hz) இதற்கு ஆராய்ச்சியாளர்கள் பயன்படுத்தியுள்ளனர்.வைஃபை சிக்னல்கள் மூலமாக பாதுகாப்பு தரமுடியுமா என கலிஃபோர்னியா ஆராய்ச்சியாளர்கள் முயன்றது நினைவுக்கு வருகிறதா? அதேவழியில் இதுவேறொரு முயற்சி. இம்முறையில் மனிதர்களை ட்ராக் செய்வதன் வழியாக ஒரு அறையிலிருந்து இன்னொரு அறைக்கு செல்லும்போது தானாக விளக்கை அணைத்து மின்சாரத்தை கட்டுப்படுத்த முடியும். இனி மின்சாரக்கட்டுப்பாட்டிற்காக சுவர்களில் சென்சார்கள், கேமராக்கள் பொருத்தப்பட்டிருப்பது தவிர்க்க முடியாத ஒன்று. ஆராய்ச்சியில் கிடைக்கும் நன்மைகள் ஒருபுறமிருக்க, இந்...