இடுகைகள்

வளங்கள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

உலகில் பெரும் ஆபத்தை ஏற்படுத்துவது கார்பன் அளவல்ல, மக்களின் பெருக்கம்தான்! - உடைத்துப் பேசிய ஆஸ்திரேலிய சூழலியலாளர்

படம்
            மக்கள்தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்துவது இன்றைய அவசர தேவை ! கார்பன் வெளியீடு , வெப்பமயமாதல் ஆகிய பிரச்னைகளைவிட மக்கள்தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்துவது அவசிய தேவை என ஆஸ்திரேலிய சூழலியலாளர் பாப் ப்ரௌன் கூறியுள்ளார் . 2100 ஆம் ஆண்டுக்குள் அனைத்து நாடுகளும் மக்கள்தொகை அளவைக் கட்டுப்படுத்த வேண்டும் என ஆஸ்திரேலிய சூழலியலாளர் பாப் ப்ரௌன் கூறியுள்ளார் . பல சூழலியலாளர்கள் இதுபற்றி பேசாமல் இருக்கும்போது , அதிரடியாக வெளிப்பட்டுள்ள இக்கருத்து தீர்க்கமாக யோசிக்கவேண்டியது ஆகும் . ‘’ இந்த உலகம் மனிதர்களுக்கு கொடுத்துள்ள விஷயங்கள் தீர்ந்துவருகின்றன . அதனால்தான் தினசரி நாம் எழும்போது பல்வேறு விலங்குகளின் அழிவு , காடுகள் சுருங்கி வருவது , மீன்கள் குறைவது ஆகிய செய்திகளை கேட்கிறோம்’’ என்று நாளிதழில் பேசியிருந்தார் பாப் ப்ரௌன் . பெருந்தொற்றுகளால் மக்கள் இறப்பது அதிகரித்தாலும் , உலகளவில் பிறப்பு சதவீதத்தோடு ஒப்பிட்டால் அது சிறிய அளவுதான் . 1900 ஆம் ஆண்டில் உலக மக்கள்தொகை நூறு கோடிக்கும் சற்றே அதிகம் . ஆனால் 2023 இல் இந்த எண்ணிக்கை 800 கோடியாக அதிகரிக்கும் . 2