உலகில் பெரும் ஆபத்தை ஏற்படுத்துவது கார்பன் அளவல்ல, மக்களின் பெருக்கம்தான்! - உடைத்துப் பேசிய ஆஸ்திரேலிய சூழலியலாளர்
மக்கள்தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்துவது இன்றைய அவசர தேவை!
கார்பன் வெளியீடு, வெப்பமயமாதல் ஆகிய பிரச்னைகளைவிட மக்கள்தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்துவது அவசிய தேவை என ஆஸ்திரேலிய சூழலியலாளர் பாப் ப்ரௌன் கூறியுள்ளார்.
2100ஆம் ஆண்டுக்குள் அனைத்து நாடுகளும் மக்கள்தொகை அளவைக் கட்டுப்படுத்த வேண்டும் என ஆஸ்திரேலிய சூழலியலாளர் பாப் ப்ரௌன் கூறியுள்ளார். பல சூழலியலாளர்கள் இதுபற்றி பேசாமல் இருக்கும்போது, அதிரடியாக வெளிப்பட்டுள்ள இக்கருத்து தீர்க்கமாக யோசிக்கவேண்டியது ஆகும். ‘’இந்த உலகம் மனிதர்களுக்கு கொடுத்துள்ள விஷயங்கள் தீர்ந்துவருகின்றன. அதனால்தான் தினசரி நாம் எழும்போது பல்வேறு விலங்குகளின் அழிவு, காடுகள் சுருங்கி வருவது, மீன்கள் குறைவது ஆகிய செய்திகளை கேட்கிறோம்’’ என்று நாளிதழில் பேசியிருந்தார் பாப் ப்ரௌன்.
பெருந்தொற்றுகளால் மக்கள் இறப்பது அதிகரித்தாலும், உலகளவில் பிறப்பு சதவீதத்தோடு ஒப்பிட்டால் அது சிறிய அளவுதான். 1900ஆம் ஆண்டில் உலக மக்கள்தொகை நூறு கோடிக்கும் சற்றே அதிகம். ஆனால் 2023இல் இந்த எண்ணிக்கை 800 கோடியாக அதிகரிக்கும். 2050இல் இந்த எண்ணிக்கை தொள்ளாயிரம் கோடியாக அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. என ஐ.நா அமைப்பு கூறியுள்ளது.
ஏற்கெனவே நாம் இயற்கை வளத்தைப் பயன்படுத்துவதில் வரம்பை எட்டிவிட்டோம் என வல்லுநர்கள் கூறுகின்றனர். இந்த உண்மையை மௌனமாக ஏற்கும் சூழல் அமைப்புகள் மக்களிடம் வெளிப்படையாக பேசத்தயங்குவதன் காரணம், ஊடகங்கள் அப்படிப் பேசுபவர்களை தாக்கும் என்பதுதான். இதுபற்றி பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய க்ரீன்ஸ் கட்சி அரசியல் தலைவர் ஆடம் பண்ட், ''நான் மக்கள் தொகை பற்றி பேச விரும்பவில்லை. நம் அனைவருக்கும் தேவையான புதுப்பிக்கு்ம் ஆற்றல் ஆதாரத்தை அதிகரிக்கவேண்டும்'’ என்று நாசூக்காக பேசியது இதற்கு உதாரணம்.
மக்கள்தொகையைக் கட்டுப்படுத்தவேண்டும் என்றால் அதில் மூன்று சிக்கல்கள் பொதுவாக அடையாளப்படுத்தப்படுகின்றன. ஒன்று, மக்கள்தொகை குறைப்பு, கட்டுப்படுத்துதல், கருத்தடை, கருக்கலைப்பு ஆகியவற்றை அரசு பிரசாரம் செய்தால், அதனை இனவெறிவாதமாக எதிர்தரப்பு முன்வைக்கும். மக்கள்தொகை அதிகரிப்புக்கான காரணங்கள் பல்லாண்டுகளாக உலகில் இருந்து வருகின்றன.
கத்தோலிக்க தேவாலயங்கள் இந்த விவகாரத்தை பல நூற்றாண்டுகள் யாருக்கும் தெரியாமல் வைத்திருந்தன. பின்னர் 1960இல் பாபல் கமிஷன், தேவாலயங்கள் பல்லாண்டுகளாக கடைபிடித்த கருத்தடைப் பொருட்களுக்கான தடையை நீக்க பரிந்துரைத்தது. 1968ஆம் ஆண்டு ஆறாவது போப் பால், குழந்தைப் பிறப்பைத் தடுக்க பயன்படுத்தும் செயற்கையான கருத்தடை பொருட்களை அறத்திற்கு எதிரானது என்று கூறினார். மூன்றாவதாக தாராளமய பொருளாதார பயன்களை மேலைநாடுகள் பெற, ஏழை நாடுகளில் மக்கள்தொகை அதிகரிக்க வேண்டியிருந்தது. இதனால், தொழிலாளர்களுக்கான கூலிகள் குறைந்தன. 1984ஆம்ஆண்டு அமெரிக்க அதிபர் ரீகன், அப்போது எழுப்பப்படட மக்கள்பெருக்கம் எதிர்கால பிரச்னை என்பதையே தீவிரமாக மறுத்தார். இவர் தாராள பொருளாதார கோட்பாட்டாளர், ஜூலியன் சைமனின் ஆதரவாளர். குறைந்து வரும் இயற்கைவள ஆதாரங்களுக்கு ஏற்ப மனிதவளத்தை ஒழுங்குபடுத்தினால் மட்டுமே உலகில் நமக்கு எதிர்காலம் உண்டு என்பதை அனைவரும் புரிந்துகொள்ளவேண்டிய நேரம் இதுவே.
தகவல்
theconversation
Honorary Professor, Australian National University
நன்றி
தினமலர் பட்டம்.
படம் பிக்ஸாபே
கருத்துகள்
கருத்துரையிடுக